8/07/2012

இப்படி இருந்தால் எப்படி!.....


மதி கெட்டு விதியை நம்பி
மனம் நொந்து உலகை மறந்து
இருளுக்கு  அடிமையாகி
இது என்ன வாழ்வு என்றால்

மனச் சோர்வு உடலைத் தாக்கும்
மழைத் துளியும் பாரமாகும்
உறவெல்லாம் தூக்கி ஏறிந்து
ஒரு மூலையில் முடங்கச் சொல்லும்!...

இதற்காகவா நாம் பிறந்தோம்
பின் எதற்க்காக நாம் பிறந்தோம்
கொஞ்சம் விரிவாகச் சிந்தித்தாலே
வாழ்க்கை வியப்பாக அமையும்
                                                          இவர்போல்!... 
உலகுக்கு நன்மை செய்து
உளதார வரும் அன்பை ஏற்று
பல ஜென்மம் போற்றும் வகையில்
பண்போடு வாழ்ந்தால் என்ன!!!.......

தரை மீது தூங்கும் போதும் இன்பம்
தானாக நெஞ்சில் பொங்கும்
நிலை இல்லா செல்வம் மறந்து
நிலையான அன்பை அடைந்தால்!...

திருக்கோவில் தெய்வம் நீயே
என்றும் பிறருக்காக வாழும்போது
உனக்கென்ன கவலை இங்கே
உன்னை நீயே கேட்டுப் பாரு!....
யாரை நம்பி நீ பிறந்தாய்!....
இங்கு யாரை நம்பி நீ வளர்ந்தாய்
நாம் வாழும் இந்த உலகத்திலே
எந்நாளும் வேண்டும் நல் இதயம் அன்பே!:....

உயிரின் தாகம் தீர்க்கத் தண்ணி உண்டு
உள்ளம் மகிழ இயற்க்கை உண்டு
எண்ணம் முழுதும் தெளிவானால்
இதமாய் வாழ நல் வழியும் உண்டு

சின்னச் சின்ன ஏக்கங்களால்
சிதைந்து போகும் நல் மனங்களுக்கு
இன்னும்  உலகில் புதுமை உண்டு
இதை ஏற்றுக்கொண்டால் மாற்றம் உண்டு!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

15 comments:

 1. நிறைய கேள்விகளை தொடுத்திருக்கிறீர்கள்
  அனைத்தும் நியாயமான கேள்விகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே தங்கள் வரவிற்கும்
   கருத்திற்கும் ,

   Delete
 2. விழிவிரித்து
  விடைதேடும் வினாக்கள் இங்கே
  கவிதையாய் உருமாற்றம்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும்
   இனிய கருத்திற்கும் .

   Delete
 3. மனச் சோர்வு உடலைத் தாக்கும்
  மழைத் துளியும் பாரமாகும்//

  அருமையானா நான் ரசித்த மனவலியான வரிகள்...!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும்
   அன்போடு இட்ட நற் கருத்திற்கும் .

   Delete
 4. //யாரை நம்பி நீ பிறந்தாய்!....
  இங்கு யாரை நம்பி நீ வளர்ந்தாய்
  நாம் வாழும் இந்த உலகத்திலே
  எந்நாளும் வேண்டும் நல் இதயம் அன்பே!:....//

  அருமையான வரிகள்! என்னை கவர்ந்தது!

  ReplyDelete
 5. சின்னச் சின்ன ஏக்கங்களால்
  சிதைந்து போகும் நல் மனங்களுக்கு
  இன்னும் உலகில் புதுமை உண்டு
  இதை ஏற்றுக்கொண்டால் மாற்றம் உண்டு!...//

  கேள்விகளும் அதற்கான விடைகளும் அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. கருத்துள்ள கேள்வி வரிகள்... பாராட்டுக்கள்...

  மிகவும் பிடித்த வரிகள்... பல பேர் யோசிக்க வேண்டும்...

  /// உனக்கென்ன கவலை இங்கே
  உன்னை நீயே கேட்டுப் பாரு!.... ///

  வாழ்த்துக்கள் சகோதரி...

  நன்றி… (T.M. 4)

  ReplyDelete
  Replies
  1. உலகுக்கு நன்மை செய்து
   உளதார வரும் அன்பை ஏற்று
   பல ஜென்மம் போற்றும் வகையில்
   பண்போடு வாழ்ந்தால் என்ன!!!...

   பண்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் !

   Delete
 7. முடியும் என்றாள் கடலும் துளியாக தெரியும் நம்பிக்கை இல்லை எனில்
  //மழைத் துளியும் பாரமாகும்//

  அருமையான பதிவு மானுடத்திற்கு அவசியமான பதிவு

  ReplyDelete
 8. யாரை நம்பி நீ பிறந்தாய்!....
  இங்கு யாரை நம்பி நீ வளர்ந்தாய்
  நாம் வாழும் இந்த உலகத்திலே
  எந்நாளும் வேண்டும் நல் இதயம் அன்பே!:....

  அருமை ! அருமையான வரிகள்

  ReplyDelete
 9. சிறப்பான தன்னம்பிக்கை வரிகள்! சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில்!
  சென்ரியுவாய் திருக்குறள்
  எம்புள்ளைய படிக்கவைங்க!
  உடைகிறது தே.மு.தி.க
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........