8/27/2012

கெட்டி மேளம் கொட்டும் நேரம்..


வெக்கத்தால் சிவக்குதிங்கே
செந்தாமரைதான்!.
இதன் விழிகளில் தூவுது ஆனந்த
பன்னீர் மழைதான் !!!.....
கல்யாண தேதி அது வந்தாச்சு தோழி....

பொன்மேகம் வந்து இனி
பூத்தூவும் காலம் !!.......
பொல்லாத சோகம் அது
மண்ணோடு போகும்!.......

என்னோடு நீ பாடவா ....
இளந்தென்றல் காற்றே நீ ஓடிவா .....
நதியெல்லாம் தாளம்
இசைக்கட்டும் இந்நேரம்......

விதி போட்ட முடிச்சு
வீணில்லை என்றாச்சு ....
கொலுசுக்கும்  இங்கே
புது ராகம் வந்தாச்சு ....

சந்தோசம்  பொங்கும் நேரம்
அட வாழ்த்துக்கள் எங்கே.....
உல்லாசப் பந்தலில்
ஊர்கோலம் நாளை......

வைகாசி விசாகம் அதில்
வரும் தேதி அதனில்
பூமாலை தோளில்  ஏற இந்தப்
பூவைத்தான் வாழ்த்துங்களேன்....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

 1. கல்யாண கவிதை அமர்க்களம்! வாழ்த்துக்கள்! நன்றி

  இன்று என் தளத்தில்
  நினைவுகள்! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
  நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

  ReplyDelete
 2. அருமையான கவிதை சகோ (TM 1)

  ReplyDelete
 3. அருமையான சிந்தனை வரிகள்...

  பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

  ReplyDelete
 4. படமும் அதற்கான கவிதையும்
  மிக மிக அருமை
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்...சகோ

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete
 7. உங்கள் கவிவரிகள் எப்போதும் எனக்கு அதிசயம்.அத்தனை அழகாகக் கோர்க்கத் தெரிகிறது.வாழ்த்துகள் !

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........