8/05/2012

நிலவுக்கு களங்கம் யார் சொன்னது!...


அரிய நற் குணங்கள் நிறைந்திருப்பினும் 
அழகிய சிந்தனை ஊற்றெடுப்பினும்
விதியதன் வலிமைதனை எங்கும் 
வென்றவர் உண்டோ கொங்கணவா!...

மதிதனை இழக்கா மானிடனும் 
சதி வலையதனில் வீழ்ந்த பின்னால் 
உதவிடும் கரங்களை அறியாமல் 
உயிரதை இழக்கும் நிலை வருமே!...

இதனால் தவறிய பூக்கள் தரைதனிலே 
அதன் தரம்தனை ஏதும் குன்றாமல் 
பலரது பாதம் நசிக்கிடவே பாவம் 
பகலவன் உயிரைப் பறிப்பதும் ஏன்!....

அரை குறை உண்மையில் தெளிவுண்டோ!..
அடுத்தவர் குண நலன் வகுப்பதற்கு!......
நிறை குடம் என்றே எமை  நினைப்போம் 
நீதி அறிந்த பின்னாலேதான் வருந்தி நிற்போம்

மனிதனின் இயல்பு இது ஒரு புறம் இருக்க 
மழுங்கிய மானம் என்றும் வளர்ந்திடுமோ!...
கரு முகில் வார்த்த கண்ணீரில் 
கலியுகம் மலருது பார் எந்நாளும் !!!......

ஒருவரை ஒருவர் குறை கூற 
உண்மையின் ஆழம் தெரிந்திடல் வேண்டும் 
நிலைமையை உணரா வர்ணனைகள் இதனால் 
நீதிக்குத்  தண்டணைதான் எந்நாளும்......

(கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் 
பொய் தீர விசாரிப்பதே மெய்!!!!................. )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

 1. //ஒருவரை ஒருவர் குறை கூற
  உண்மையின் ஆழம் தெரிந்திடல் வேண்டும்
  நிலைமையை உணரா வர்ணனைகள் இதனால்
  நீதிக்குத் தண்டணைதான் எந்நாளும்......//
  உண்மை!அருமை!!

  ReplyDelete
 2. (கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும்
  பொய் தீர விசாரிப்பதே மெய்!!!!..........

  ரொம்ப சரியான வார்த்தைகளில் சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 3. "ஒருவரை ஒருவர் குறை கூற"...."நீதிக்குத் தண்டணைதான் எந்நாளும்"
  இதுதானே நடந்து கொண்டு இருக்கின்றது.

  ReplyDelete
 4. ///அரை குறை உண்மையில் தெளிவுண்டோ!..
  அடுத்தவர் குண நலன் வகுப்பதற்கு!......
  நிறை குடம் என்றே எமை நினைப்போம்
  நீதி அறிந்த பின்னாலேதான் வருந்தி நிற்போம்///

  அருமையான வரிகள் என்னை கவர்ந்தவை (TM 2)

  ReplyDelete
 5. சிறப்பான வரிகள்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 6. //////அரை குறை உண்மையில் தெளிவுண்டோ!/////

  ஒருபோதுமே வராது சகோ...

  நல்ல வரிக் கோர்ப்பு

  ReplyDelete
 7. அருமையான நியாயமான வரிகள்...ஆனால் யார் இதையெலடலாம் பற்றி இன்று கவலைப்படுகிறார்கள்????வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.

  எனக்கொரு பதில்!!!!!

  ReplyDelete
 8. அருமையான வரிகள்...
  சிறப்பாக முடித்துள்ளீர்கள்...

  தொடர வாழ்த்துக்கள்...
  நன்றி… (T.M. 4)

  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
 9. சிறந்த வரிகள் சிந்தை தொட்டது.

  ReplyDelete
 10. என்ன தகிரியம் நிலாவை கலங்கம் சொல்றது யாருப்பா???

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........