8/20/2012

வலைச்சரம் தரும் வரம் எதுவோ!..

இலைமறை காய்போல்  எங்கோ
தழைத்திடும் ஆக்கமும் இங்கே
வளம்பெற வாழ்த்திடும் நல்
உறவுகள் தரும் விருதுகளும்
கருத்துரை மழைகளும்
நற்கவனமும் அன்பும் பெருகிட பெருகிட
புது சந்தங்கள் நெஞ்சில் வந்தாடுதே!....
இந்த சொந்தங்கள் வேண்டும் எந்நாளுமே
வளர் சிந்தையைத்  தூண்டும் பொன் போலிதே!..
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க

செந்தமிழ் ஊற்றினில்  நாம் மிதப்போம்
பல சிந்துகள் பாடியே தமிழ் வளர்ப்போம்
அன்பெனும் சோலைக்குள் சாலை அமைத்து
என்றுமே சேர்ந்திங்கு நாமிருப்போம்!.....


சந்தணக் காற்றாய்  மணம் பரப்பும்
சங்கதி எல்லாம் நாம் உரைப்போம்
வந்திடும் துயரைத் தீர்த்திடுவோம் வலைத்தள
சொந்தங்கள் என்றே எமை நாம் நினைப்போம்!...

டிஸ்கி :வலைச்சரத்தில் தினந்தோறும் அறிமுகமாகும் 
                அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் 
                இதுவரை அதில் ஆசிரியப்பணியை நிகழ்த்தி பலரையும் 
                சிறப்பான முறையில் அறிமுகம் செய்து வைத்த சகல 
                வலைத்தள சொந்தங்களுக்கும் என் நன்றியையும் மனம் 
                நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் நான் மிகவும் 
                மகிழ்ச்சியடைகின்றேன்.....
                                             
                                    எனக்கும் விருது தந்து மகிழ்வித்தமைக்கு நான் 
என் நன்றியைத்  தெரிவித்துக்கொள்கின்றேன்  .
                 
                 
                                             முனைவர் இரா .குணசீலன்

                                         
                                             திரு .நிலாவன்பன்
                                           
                                           
                                             திருமதி .லக்ஸ்மி அம்மா

                                           
                                                திரு .வை .கோபாலகிருஸ்ணன் ஐயா

                                               
இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த
 நன்றிகள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி உறவுகளே
உங்கள் வரவுக்கும் இனிய நற்கருத்துக்களுக்கும் .

                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

13 comments:

 1. செந்தமிழ் ஊற்றினில் நாம் மிதப்போம்
  பல சிந்துகள் பாடியே தமிழ் வளர்ப்போம்
  அன்பெனும் சோலைக்குள் சாலை அமைத்து
  என்றுமே சேர்ந்திங்கு நாமிருப்போம்!....//.

  அருமையான வரிகள்
  நிச்சயமாக தொடர்ந்து உறவுகளாய் இருப்போம்
  இன்னும் பல விருதுகளைப் பெற்று
  தாங்கள் பதிவுலகிலும் இலக்கியத்திலும் உச்சம் பெற
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் .

   Delete
 2. /// வந்திடும் துயரைத் தீர்த்திடுவோம் வலைத்தள
  சொந்தங்கள் என்றே எமை நாம் நினைப்போம்!.... ///

  மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி... (த.ம. 2)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் .

   Delete
 3. Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 4. வாழ்த்துக்கள் நண்ப!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் .

   Delete
 5. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் .

   Delete
 6. வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சகோ! பகிர்வுக்கு நன்றி!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
  http://thalirssb.blogspot.in/2012/08/5.html

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........