Showing posts with label மூச்சுக் காற்று மூன்றின் தொடர்..... Show all posts
Showing posts with label மூச்சுக் காற்று மூன்றின் தொடர்..... Show all posts

7/27/2011

மூச்சுக் காற்று மூன்றின் தொடர் (பகுதி -2 )


வணக்கம் என் அன்பு உறவுகளே இன்றும் எனது மூச்சுக் காற்று 
மூன்றின் தொடரை வழங்க இருக்கின்றேன்.உங்கள் ஆதரவு 
உள்ளவரை இத்தொடர் தொடரும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இதோ அந்த இரண்டாவது தொடர் .....

(1 )வெற்றிக்கு சத்துரு 
     மூட நம்பிக்கை ,மனச்சோர்வு ,தேவையற்ற சந்தேகம்
 
(2 )போர்முனைக்கு இட்டுச் செல்லும் மூன்று 
       பெண்ணாசை,மண்ணாசை ,பொன்னாசை .

(3 )கலகம் இன்றி வாழ எப்போதும் .
      சலனத்தை விட்டுவிடு 
      சந்தேகத்தை விட்டு விடு  
      பேராசையை விட்டுவிடு 

(4 )உள்ளம் அமைதிபெற 
      தீயவைகளை மறக்க வேண்டும் .
      தீய குணங்களைத் தவிர்க்க வேண்டும் .
     தியானம் செய்ய  வேண்டும் .

(5 )கொவத்தைத் தணிக்க 
      சொல்ல வந்தவைகளை பலமுறை காகித இதழ்களில் எழுதிக் கிழி.
       குற்றவாளி படு முட்டாள் என்று நினைத்துக்கொள் .
       உடல் களைக்க சிலமணிநேரம் வேலை செய் .

(6 )ஏமாற்றத்தால் வரும் மனவலியைப் போக்க.
      முடிந்தவரை நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசு .
      பிடித்தமான நற் செயலில் தீவிரமாக ஈடுபடு .
      எப்படியும் வெல்வேன் என்று உறுதிகொள் .

(7 )எல்லா சமூகத்தினரிடமும் இருந்து அழிக்கப்படவேண்டிய 3 குற்றங்கள்.
      கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு .

(8 )நாம் மறக்க வேண்டிய மூன்று பேதங்கள் .
      சாதி மத பேதம் ,கற்றவன் கல்லாதவன் எனும் பேதம் ,
      இருப்பவன் இல்லாதவன் எனும் பேதங்கள் .

(9 ) ஆற்ற முடியாத வேதனைதரும் மூன்று செயல் .
       தன்மானத்தை சீண்டுதல் 
       காதலர் செய்யும் துரோகம் .
       புறங்கூறக் கேட்டல் .

(10 )கொடுமையிலும் கொடுமை .
        முதுமையில்  தனிமை கொடுமை 
        இளமையில் வறுமை கொடுமை
        பெண்ணடிமைத்தனம் கொடுமையிலும் கொடுமை .

(11 )தேவையற்ற கடன் பெறுவதால் வரும் மூன்று .
        அன்பு முறிந்து அவமானம் பெருகும் .
        வீண் சண்டை வளர்ந்து விரயத்தில் முடியும் .
         அமைதியைக் குலைக்கும் பின் ஆயுளையும்  முடிக்கும் .

(12 )முகம் வசீகரம் பெற .
         சிந்தனையை சீர் செய் .
         மனம்விட்டு சிரி
         நின்மதியாகத் தூங்கு .

இன்று இதுபோதும் நானும்போய்த் தூங்கப் போகிறேன் நீங்கள் வாசித்துவிட்டு 
தூங்கிவிடாமல் உங்கள் அருமையான கருத்தினை இட்டுச்செல்லுங்கள் என் 
அன்பு உறவுகளே ...... 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7/23/2011

மூச்சுக் காற்று மூன்றின் தொடர்....

பூத்துக் குலுங்கும் அன்பெனும் இன்பச் சோலையில் 
மூச்சுக்காற்றுகள் மூன்றாக வகுத்து என் அன்புச் சகோதரர் 
(வசந்தமண்டபம்) மகேந்திரன் அவர்தந்த தொடர் பணியினை 
அழகாக முடிந்தவரைத் தொடரவந்தேன் என் உறவுகளே 
அந்தவகையில் எனக்குத் தெரிந்த பாணியில் இதோ அந்த 
(தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும்) மூச்சுக்கள் மூன்றின் தொடர். 
 
(1 )நல்லவராய் வாழ்வதற்குத்  தேவை.
      அன்பு ,பொறுமை,உண்மை.
 
(2 )கெட்ட சகுனங்கள் மூன்று.
      தீயவரைக்காணுதல்,தீயது பேசுதல்,தீயது செய்தல்.
 
(3 )நினைத்துப் பார்க்க வேண்டியது. 
      செய் நன்றி ,கடமை ,உறவுகள்.
 
(4 )நினைக்கக்கூடாதது  
      நடந்து முடிந்த தீயவை,கெட்ட சிந்தனை,துரோகம்.
 
(5 )வெற்றிக்கு வழி வகுப்பவை.
      தன்னம்பிக்கை,விடாமுயற்சி,பொறுமை.
 
(6 )வீரனுக்கு அழகு.
      பிறர் நன்மைகருதி விட்டுக்கொடுத்தல்.
      தீய செயல்கண்டு பொங்கி எழுதல்.
      வலுவிளன்தொரைக் காத்தல்.
 
(7 )அரசனுக்கு அழகு.
       மக்களைக் காத்தல்
       மக்களின் நன்மைக்காகமட்டும் உழைத்தல்.
       மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தல்
 
(8 )மனைவிக்கு அழகு.
      பணிவன்போடு பேசுதல்
      நற்பண்புகளுடன் வாழுதல்
      இல்லறத்தை அழகாகக் காத்தல்.
 
(9 )கணவனுக்கு அழகு.
      ஆணாதிக்கத்தை மறத்தல்.
      அன்பால் அரவணைத்துச் செல்லுதல்
      குடும்ப நன்மைகருதி உழைத்தல்.
 
(10 )பிள்ளைகளுக்கு அழகு.
        பெற்றவர் சொற்க்கேட்டு நல்லவராய் வளர்த்தல்.
        வயோதிப காலத்தில் பெற்றோரைக் காத்தல்.
        நல்ல பிள்ளை என்றுமட்டும் பெயர் எடுத்தல்.
 
(11 )உண்மையான சகோதரத்துவத்துக்கு இலக்கணம்.
        கூட இருக்கும்போது  இருந்த அன்பை இறக்கும்வரைக் காத்தல்.
        இடர்வந்தபோது தன்னை மறந்து உதவுதல்.
        பெண் என்றால் அவள் கற்ப்பை தன் உயிராய்  மதித்தல்.
 
(12)பூப்படைந்தவளின் நலனுக்கு உகந்தவை.
       குட்டை ஆடை அணிவதைத் தவிர்த்தல்.
       எங்கு சென்றாலும் நல்ல தோழியுடன் செல்லுதல்.
       புதிய ஆணின் நட்பை வேண்டப்பட்டவரிடம் தெரிவித்தல் 
 
(13 )நல்ல நட்புக்கு அழகு.
       முடிந்தவரை உண்மையாக இருத்தல்.
       ஆபத்தில் உதவுதல்,பிரிந்தாலும் பழகிய நட்பை மறவாதிருத்தல்.
 
(15 )எந்த  வலைத்தளத்துக்கும் அழகு.
        ஆபாசப் படங்களைத் தவிர்த்தல்,
        ஆபாசச் செய்திகளைத் தவிர்த்தல்
         தரமான பயனுள்ள செய்திகளை வழங்குதல்.
 
(16 )அடிக்கடி மாறக்கூடியது .
        மனித மனம்,இயற்கையின் குணம்,அறிவின் வளர்ச்சி .
       
இன்று இது போதும் உறவுகளே உங்கள் விருப்பம் கண்டு நாளையும்
தொடரும்!... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.