12/31/2014

புத்தாண்டே வருக வருக !


                   


புத்தாண்டே  புன்னகை பூத்தாட வந்துதிப்பாய் 
சத்தான ஆண்டாய்த்  தழைத்திடுவாய்  !-வித்தைகள் 
கற்றோரும் மற்றோரும் கண்டுள்ளம் பூரிக்க
நற்பயனைத் நாளுமே   நல்கு !

வேரோடு  மடிந்து வீழ்ந்தோம் 
   வேதனை தினமும் பட்டோம் ! 
போராடும் மறவர் எங்கள்
    போர்க்காலம் முடிந்து போக 
சீரோடு செழிப்பும் சேர்த்து  
    சீராட்ட மலர்ந்த ஆண்டே 
தேரோட வழிகள் செய்வாய் 
    தேசத்தின் நலனைக் காத்தே  !

பொல்லாத விதியை மாற்றிப்   

   பொன்னான  மதியை ஊட்டி
இல்லாத நலனைக் கூட்டி  
    ஈழத்தில் விடிவைக் காட்டி  
நல்லோரும்  பதவி ஏற்க 
   நாடெங்கும்  மகிழ்ச்சி பொங்க  
அல்லலை அறுக்க வந்த 
    ஆண்டாக மலர்க நன்றே  !

காலத்தை வகுத்த தேவன் 

  கண்ணீரில் குளிக்க வைத்தான் !
ஓலத்தை நிறுத்தி நீயும் 
   ஓய்வாக இருக்க வைப்பாய் !
ஞாலத்தில் அமைதி தங்க  
   ஞாயிறாய் வளர்ந்து நின்று 
சீலத்தை மதிக்கும் மக்கள் 
    சீர்பெற்றும்  மகிழச் செய்வாய் !

புத்தாண்டு பிறக்கும் போது 

   பூமிக்கே மகிழ்வு கிட்ட 
சித்தத்தால் மலர்கள் தூவும் 
  சிங்காரத் தமிழைக் காண்பீர் !
எத்திக்கும் அமைதி கமழ 
    எல்லோரும் சமமாய் வாழ 
வித்தைகள் புரியும் ஆண்டே 
   வில்லேந்தும் பகையை ஒட்டு !

வாவென்று நெஞ்சம் பாடி 

   வண்ணமலர் தூவி ஆடும் 
போவென்று துன்பம் தன்னை 
   போக்கியே ஆள  வேண்டும்! 
நாவார எளிய  மக்கள் 
   நாள்தோறும் நினைத்துப் பாடும் 
தேவாரம் எனநீ நின்றால்  
    தேவர்க்கும் மகிழ்வு தானே !வணக்கம் !


அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !பிறக்கப் போகும் ஆண்டு எல்லோருக்கும் எல்லா நலனும் வளமும் நல்கிட இறையருள் கிட்டட்டும் .

                                                                                                                                                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

48 comments:

 1. வணக்கம் தோழி!
  புத்தாண்டை வரவேற்க அருமையான கவிதை ,,நீங்கள் விரும்புவது போல அமைதியும் வளமும் ஈழத்தில் நிறையட்டும்..தமிழினம் இடர் நீங்கி இனிதாய் வாழட்டும்
  புத்தாண்டு வாழ்த்துகள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி !உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி .

   Delete
 2. புத்தாண்டு கவிதை அருமை
  வாழ்க வளமுடன்
  இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ .

   Delete
 3. வணக்கம் தோழி!

  புத்தாண்டைப் போற்றிப் புரட்சி மலர்களாற்
  கொத்தாகச் சூட்டினீர் கொய்து!

  அருமையான பாமாலை!..

  பிறக்கும் ஆண்டில் அனைத்து நலன்களும் அமைந்திட
  உளமார வாழ்த்துகின்றேன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி தோழி .உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 4. வணக்கம்.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  HAPPY NEW YEAR 2015 ! :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   நன்றி ..நன்றி ..மிக்க நன்றி ஐயா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 5. அம்பாள் அனுக்கிரகம் எந்நாளும் உண்டுமக்கு
  தெம்பாய் அனுதினமும் தேன்தமிழில் நீர்வடிக்கும்
  நற்கவியே சாட்சி ! நிதம்படைக்க வேஇது
  நெற்றித் திலகம் உமக்கு !
  அருமையான விருத்தப்பா ......எல்லா நலன்களும் பெற்று இனிய பாமாலைகள் எந்நாளும் புனைந்து குடும்பத்தார் அனைவருடனும் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துகிறேன் என் இனிய தோழியே ....!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி தோழி ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 6. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  தம 3

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
   அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் தோழி .

   Delete
 8. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி .

   Delete
 9. அழகான வாழ்த்து! நான் ஸ்வீட் எடுத்துக்கிட்டேன். தோழிக்கும் மற்றும் குடும்பத்தார்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி :)) உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி .

   Delete
 10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  வரிகள் வழக்கம் போல் அருமை!!! வரும் புத்தாண்டாவது நல்ல பலங்களை அருளட்டும். விடிவுகாலம் வரட்டும். இறைவன் அருள்வாராக.

  என்ன ச்கொதரி ஃபோட்டோவில் இனிப்புகளை வழங்கி ஏமாற்றி விட்டீர்கள்..ஹஹஹஹ்ஹஹஹ் ......

  அன்புடனும், நட்புடனுன்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா ::)) உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
   அனைவருக்கும் தித்திக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
   உரித்தாகட்டும் .

   Delete
 11. வணக்கம்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி சகோதரா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
   அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 12. புத்தாண்டே வருக புதுஎழுச்சி தருக

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா .இனிக்கும் புத்தாண்டாக இவ்வாண்டு
   மலரட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும் .வாழ்த்துக்கள் .

   Delete
 13. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
  Replies

  1. வணக்கம் !

   புதிய நட்பே தங்கள் வரவு நல் வரவாகட்டும் ! இனிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 14. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies

  1. வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐய்யா !
   தங்களிற்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்
   இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 15. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies

  1. வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐய்யா !
   தங்களிற்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்
   இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete

 16. வணக்கம்!

  பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

  புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
  சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
  தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
  நானுாறும் வண்ணம் நடந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் தங்களுக்கும் என்
   இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 17. மிக்க நன்றி சகோதரா .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
  அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

  ReplyDelete
 18. புத்தாண்டை வரவேற்கும் கவிதை அருமை.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா தங்களுக்கும்
   என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 19. அற்புதமான கவிதை
  வேண்டுதல்களும் விருப்பங்களும்
  தொடர்ந்து நிச்சயம் நிறைவேறும்
  வாழ்த்துக்களுடன்....

  தங்களுக்கும் தங்க்கள் குடும்பத்தார்
  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா தங்களுக்கும்
   தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு
   வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 20. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
  துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

  வலைப் பூ சகோதரியே!

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 21. அழகான கவிதை. புது வருடத்தில் புத்துணர்ச்சி பிறக்கட்டும். பிரார்த்தனைகள் நிறைவேறட்டும். மனமார்ந்த வாழ்த்துகள், சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 22. அருமையான கவிதை. பாராட்டுகள்.

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 23. புத்தாண்டில் எல்லா நலமும் வளமும் பெற்றிட வாழ்த்துகிறேன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தாத்தா தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் !
   தங்களையும் இறைவன் ஆசீர் வதிக்கட்டும் .

   Delete
 24. சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
  புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள். புத்தாண்டு கவிதைக்கு நன்றி.

  த.ம.11

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா
   என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் !

   Delete
 25. கவிதை அருமை.
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........