4/18/2014

காக்கா காக்கா கீக்கீ கீக்கீ கூக்கூ கூக்கூ.....
காக்கா காக்கா
கீக்கீ கீக்கீ
கூக்கூ கூக்கூ
கேக்கே கேக்கே
எங்கே ...அந்த சத்தங்கள்?
இனிதாய்த் தொடரும் முத்தங்கள்
எங்கே அந்த சத்தங்கள்?
இனிதாய்த் தொடரும் முத்தங்கள்

                                       (காக்கா காக்கா..)

வண்ணம் கொஞ்சும் தாய் நாடே
வணக்கம் என்றன் தாய் நாடே
தன்னந் தனிமை ஆனோமே
தாயைப் பிரிந்து போனோமே...

உன்னைப் போலொரு அழகிய நாடு
உலகில் இல்லையடி!
கண்ணைத் திறந்தால் மூடும் வரைக்கும்
காதல் தொல்லையடி!

தென்னை பனையை மறப்பேனா?
சுகம் தேடும் வயல்வெளி மறப்பேனோ?
கொல்லைப் புறத்தை மறப்பேனோ- நான்
கோயில்  குளங்களை  மறப்பேனோ?

                                                           (காக்கா காக்கா..)

வண்ணத் தாமரை மலர்கள் பூக்கும்
வசந்தம் நிறைந்த பொன்னாடே
எண்ணம் முழுதும்  நீதானே அட
ஏற்றம் மிகுந்த தாய் நாடே .....

கண்களிரண்டும் தூங்காதே
காதல் கீதம் ஓயாதே...
உன்றன் மடி தான் சொர்க்கமடி -இங்கு
ஏழையானோம் எம் தாயே ....

கிட்டிப் புல்லு அடித்து நானும்
கீழே விழுந்தேன் வலிக்கலியே....
எட்டிப் போன நாள் முதலாய்
எந்தன் நினைவுகள் உறங்கலியே

கட்டில் மெத்தை சுடுகுதடி
களத்து மேட்டை மறவேனே
தொட்டில் பழக்கம் சுடு காடு வரையாம்
சொன்னார் அது தான் உண்மையடி

எங்கே அந்த சத்தங்கள்
இனிதாய்த் தொடரும் முத்தங்கள் ......

                                                    (    காக்கா காக்கா)

  படம் :கூகிளில் பெற்றுக்கொண்டது .நன்றி                                                  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

26 comments:

 1. இனிமையாய் தொடரும் வரிகள் அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தாய் நாட்டிற்கு ஈடு இணைதான் ஏது?
  அருமை சகோதரியாரே

  ReplyDelete

 3. வணக்கம்!

  நாட்டினை எண்ணி நறுங்காதல் பாப்படைத்து
  மீட்டினை இன்பம் மிகுத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 4. இனிதாய்த் தொடரும் முத்தங்களை தாய்நாட்டில் விரைவில் நீங்கள் பெற விழைகிறேன்!
  த ம 4

  ReplyDelete
 5. ஏற்றம் மிக்க தாய்நாடு
  ஏக்கம் கொள்ளவைக்கிறது..!

  ReplyDelete
 6. வண்ணத் தாமரை மலர்கள் பூக்கும்
  வசந்தம் நிறைந்த பொன்னாடே
  எண்ணம் முழுதும் நீதானே அட
  ஏற்றம் மிகுந்த தாய் நாடே ...

  - இனிமை!.. இனிமை!..

  ReplyDelete
 7. இப்ப எங்க கிட்டிப் புல் விளையாடுறாங்க? எல்லாம் கிரிக்கெட்தான்.

  ReplyDelete
 8. தாய்நாட்டின் மீதான ஏக்கத்தைப் பறைசாற்றும் வரிகள்.. வலி மிகுந்த வரிகள்! மனம் தொட்ட கவிதை, தோழி!

  ReplyDelete
 9. வாசமுள்ள நினைவுகளை
  வாரி இறைத்தாயே
  வஞ்சனையில் வீழ்ந்ததனால்
  பஞ்சணையும் நோகிறது. வழிகளும் ஏக்கங்களும் நிறைந்த கவிதை வரிகள். அருமை தோழி! வாழத்துக்கள் !

  ReplyDelete
 10. தாய்நாட்டுப்பற்று வரிகளில் மிளிர்கிறது.. வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 11. உணர்வுகளும் வார்த்தைகளும்
  பின்னிப் பிணைந்த அற்புதமான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. தன்னந் தனிமை ஆனோமே
  தாயைப் பிரிந்து போனோமே...
  = வேதனையாக இருக்கிறது.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. வாழ்த்துகள்

  subbu thatha
  www.wallposterwallposter.blogspot.com

  ReplyDelete
 14. கிட்டிப்புல் நினைவில் மறந்து போச்சு இப்போது!ஹீ

  ReplyDelete
 15. மிக அருமையான வரிகள்! இந்த காக்கை குருவி சத்தங்களுடன் விடியும் நம்ம ஊரின் இயற்கையான அழகே தனிதான்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. எங்களுக்கு நம் தாய் நாட்டின் நினைவுகளை எழுப்பி விட்ட கவிதை. வரிகள் அனைத்தும் அருமை. சகோதரி.

  ReplyDelete
 17. எந்நாட்டின் ஏக்கங்கள் என்றென்றும் நோயாகும்
  பொன்னாட்டில் வாழ்ந்தாலும் பொய்த்து !

  அழகோ அழகு அருமை
  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 18. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

  வலைச்சர தள இணைப்பு : ஞாயிறு மறையும் வேளை!

  ReplyDelete
 19. தாய் நாடு, சீராட்டி வளர்த்த நாட்டை அழகாக வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள் சகோ..

  ReplyDelete
 20. தாய் நாட்டின் நினைவுகள் சொல்லும் கவிதை.

  நல்ல கவிதை பாராட்டுகள்.

  ReplyDelete
 21. காக்கா பாட்டுல சோக்கா சொல்லிக்கினம்மே நாட்டப் பத்தி...!

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
 22. அருமை... அருமை. வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 23. தேசப்பற்று மிக்க வரிகள் அருமை தோழி!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........