3/19/2014

எட்டி எட்டிப் பார்க்கையில்



எட்டி எட்டி பார்க்கையில்
உன்னால் தானடா
வட்ட நிலாப்  பொட்டு வைக்க
ஆசை இங்கு வந்ததே ....

வா வா என்றன் நெஞ்சுக் குள்ளே
வண்ணம் மின்னும் கண்ணுக்குள்ளே
தா தா இன்பம் தந்தால் போதுமே!
உயிரின் தாகம் தீருமே!

                                                 (எட்டி எட்டிப்...)

என்னுயிரை எடுத்து
உன்னுடலில் தொடுத்து
இன்னும் பல ஜென்மம்
வாழக் காத்திருப்பேன்

சந்தனமும் குங்குமமும்
சேர்த்து வைத்த நெத்தியிலே
சங்கமிக்க வேண்டும் நீயடா
உயிரோடு  பகை ஏனடா!

பூவின் உள்ளம்
மென்மை என்றால்
பேசும் வார்த்தைகள்
உண்மை என்றால்
கோவில் குளங்கள்
தேவை இல்லை மன்மதா ......

நீ சூடும் பூவில்
சொர்க்கம் உள்ளது
தேடும் வார்த்தையில்
மிச்சம் உள்ளது
நான் பாடும் பாடல் நீயடா
என் வாழ்வின் தேடல் தானடா...

ஆண்...

ஆசைக் கிளியே முத்தம் தந்தது
அதனால் நூறு சத்தம் வந்தது
இந்த ஒசைக்கினியது
உலகில் ஒன்றும் இல்லையே!

நீ ஓடும் நதியில்
என்னைக் கண்டாய்
சிறு ஓடம் போலிங்கு
உன்னைக் கண்டேன்
தேடும் சுகங்கள் ஒன்றாய்ச்  சேர்ந்ததே ......
என் தேவை எல்லாம் உன்னால்  தீர்ந்ததே ...

பாசம் உள்ள நெஞ்சுக்குள்ளே
வாசம் வீசுமே!
உயர் தோஷம் எல்லாம் ஓடிப்  போக
நேசம்  மிஞ்சுமே!
இது சத்தியம் சத்தியமே
இனி நித்தமும் சித்திரையே ...
என் அத்தையின் (இ)ரத்தினமே
நான் சொன்னதும் சத்தியமே ...                                                                                                 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

32 comments:

  1. சந்தனமும் குங்குமமும்
    சேர்த்து வைத்த நெத்தியிலே
    சங்கமிக்க வேண்டுமையா
    சங்கடங்கள் ஏதுமில்லையே!..//

    தமிழ் மணம்.. செந்தமிழ் மணம்!...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா முதல் வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  2. அழகான அருமையான பாடல் வரிகள்...

    ரசிக்கும்படியும் முடித்துள்ளீர்கள் அம்மா...

    இணைத்த படமும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

      Delete
  3. சுருக்கம் தேவை! பாடலில் சுவை கூட!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தகவலுக்கு .

      Delete
  4. மிகவும் ரசித்தோம்! அழ்கான கவிதை!

    வாழ்த்டுக்கள்!

    ReplyDelete
  5. அருமையான வரிகள்! அழகான பாடல்கள்! நன்றி!

    ReplyDelete
  6. அழகியபாடல் அழகியபடத்துடன் ரசித்தேன்.

    ReplyDelete
  7. சந்தனமும் குங்குமமும்
    சேர்த்து வைத்த நெத்தியிலே
    சங்கமிக்க வேண்டுமையா
    சங்கடங்கள் ஏதுமில்லையே ...

    அழகான வரிகள் வாழ்த்துக்கள் தோழி.....!

    ReplyDelete
  8. வட்ட நிலா பொட்டு வைக்க
    வண்ணவண்ணக் கவிதைகள்
    எழிலாய் பூத்ததோ..! பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  9. //பூவின் உள்ளம் மென்மை என்றால்
    பேசும் வார்த்தைகள் உண்மை என்றால்
    கோவில் குளங்கள் தேவை இல்லை மன்மதா ..///

    எனக்கு பிடித்த அழகான வரிகள். மற்ற வரிகளும் மிக அருமையே.... அந்த இரத்தினத்தின் படம் இல்லையா உங்களிடம்?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா தொந்தரவே அற்ற பாராட்டிற்கு :)))
      இதயத்தில் இருக்கு நகல் எடுத்துத் தரவா ?...:))) லொள்ளு :))

      Delete

  10. முத்துக்கள் கொண்டேயுன் மூச்சினால் பூக்கின்ற
    அத்தைமகன் ஞாபகத்தின் ஆக்கமுடன் - வித்தகியாம்
    உன்னுயிரில் வேர்விடும் உள்ளுணர்வும் !சத்தியமாய்
    பொன்னாகும் மண்ணில் பொலிந்து !

    அருமை சகோ
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன் 4

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா :)))

      Delete
  11. ஒரு கவிதையாவது இப்படி
    சரளமாய் வார்த்தைகள் வந்து விழும்படியான
    கவிதை எழுத வேண்டும் எனும்
    ஆசையைத் தூண்டிப்போகும் அற்புதக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ரமணி ஐயா !

      Delete
  12. கவிதை அருமையாக உள்ளது தோழி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி .

      Delete
  13. பாசம் உள்ள நெஞ்சுக் குள்ளே
    வாசம் வீசுமே...
    உயர் தோஷம் எல்லாம் ஓடிப் போகக்
    காசும் மிஞ்சுமே ...//

    அன்பு கொண்ட உள்ளத்துக்கு ஆயுசு நூறு"ங்குற பாட்டுதான் மனசுல நினைவுக்கு வருது, சூப்பர் !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  14. #பூவின் உள்ளம் மென்மை என்றால்
    பேசும் வார்த்தைகள் உண்மை என்றால்
    கோவில் குளங்கள் தேவை இல்லை #
    காதல் வந்து விட்டால் நாத்திகத்தை கூட விரும்புமோ மனம் ?
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. இறைவன் அன்புருவானவன் அன்பு இங்கே இதயக் கோவிலில்
      அடைக்கலமாகி விட்டது போலும் :))) .மிக்க நன்றி சகோதரா
      வருகைக்கும் கருத்திற்கும் .

      Delete
  15. சத்தியமான வார்த்தைகள். இதமான சொற்களில்.
    '..பூவின் உள்ளம் மென்மை என்றால்
    பேசும் வார்த்தைகள் உண்மை என்றால்
    கோவில் குளங்கள் தேவை இல்லை.. '

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா .

      Delete
  16. அருமை
    இனிமை
    சகோதரியாரே

    ReplyDelete

  17. என்னுயிரை எடுத்து
    உன்னுடலில் தொடுத்து
    இன்னும் பல ஜென்மம் வாழக்
    காத்திருப்பேன் என் மன்மதா .... அற்புதமான வரிகள். சரளமாக வந்து விழுந்த வார்த்தைகள் மகிழ்ச்சி தோழி.

    ReplyDelete
  18. பாசம் உள்ள நெஞ்சுக் குள்ளே
    வாசம் வீசுமே...//

    பாசம் உள்ள நெஞ்சில் அன்பெனும் வாசம் வீசும் தான்.
    அருமையான கவிதை.

    ReplyDelete
  19. பாடலுக்கான ஓவியம் மிக அருமை..... உங்கள் பாடலும் தான்!

    காலையிலேயே படித்தேன். இப்போத் கருத்துரையும் வாக்கும்!
    த.ம. +1

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........