11/14/2010

ஒரு நூறு கவிதை......

ஒரு நூறு கவிதை
நூறு பாடல்                                                    
தந்ததெல்லாம் நீதானே?
எனை மாற்ரியவளும் 
மாற்ரியவளும்                                                                    என்றும் இங்கே நீதானே?
                                                                                
இது முறையோ
சொல்லு தாயே?
உன்றன்  முடிவில்
என்றன்  வாழ்வோ?

                             (ஒரு நூறு கவிதை)

இரவில் வந்த
நிலவும் உன்றன் 
இதயம் சொன்ன கதையும்
உதயம்  ஆகும் பொழுதில் 
என்றன்  உயிரே  வெந்து தணியும்!
எதை நான் மறப்பதோ?
உன்றன்  உறவைத் துறப்பதோ?

இதயம் தந்த
உறவே என்றன் 
உணர்வை மறந்ததேன்?
பிரிவோம்  என்று 
அறியா  நெஞ்சைப் 
பிரிந்தே சென்றதேன்?

                             
கனவில் நீயடி!
என்றன் நினைவில் நீயடி!
உறவே நீயடி!
என்றன் உயிரே நீயடி!
சலனம் நெஞ்சில் சலனம்
என்னை மரணம் வெல்லுமோ?
இது வெறும் வார்த்தை அல்லடி
ஒரு வார்த்தை சொல்லு நீ!
உயிர் உருகும் போதும் மௌனம் ஏனோ?
உண்மைக் காதலே....
                                
                                                  (ஒரு நூறு கவிதை)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........