10/04/2012

மழைத் துளி சொட்டச் சொட்ட .....


மழைத் துளி சொட்டச் சொட்ட
மனதில் ஆசை முட்ட முட்ட
உனக்காகக்  கவிதை நூறு
அரங்கேறும் நேரம் இது
வளைந்தாடும் பெண்ணே உன்றன்
வளையோசை கேட்டால் என்ன!

தடுமாறும் நெஞ்சம் இங்கே
என்னைத் தாலாட்டும் கைகள் எங்கே?
மலைக் கோவில் மண்டபத்தில்
சிலையாகிப் போனதன்றோ!.
என் இசை கேட்டுத் தென்றல் காற்றாய்
எனக்குள்ளே வா வா பெண்ணே!

சுக ராகம் உன்னால்தானே
உருவாகும் எனக்குள் என்றும்
அறியாத பெண்ணா நீயும்
அடி போடி பைத்தியக்காரி
மனதுக்குள் தீயை மூட்டி
மறைவாக படகை ஒட்டி
விளையாட நினைக்கும் பெண்ணே
விடுவேனா உன்னை நானும்?

அழைக்காமல் வந்தால் என்ன?
அலைபோலே நீயும் அன்பே
இதமாக என்னைத் தீண்ட
இது போதும் சொர்க்கம் காண
வழி வேறு உண்டோ  சொல்லு?
என் அழகிய  செல்லக்  கண்ணே!

கவி வர்மன் ஏங்குகின்றேன்!
காதலைத்தான் வேண்டுகின்றேன்
ஒரு முத்தம் அதில் யுத்தம்
நித்தம் நித்தம்  தொடரட்டும்
அதில் சந்தம் தரும் ஆனந்தம் இது
போதுமடி பெண்ணே நீ வா வா என் முன்னே!

                                                            (  மழைத் துளி சொட்டச் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

14 comments:

 1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_4.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ .தங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் .

   Delete
 2. அழகான படலாக மாற்றக் கூடியதாக இருக்கிறது வரிகள்
  வாழ்த்துக்கள் இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ .தங்கள் வரவிற்கும் இனிய வாழ்த்திற்கும் .

   Delete
 3. காதல் நிரம்பி வழியும் அழகிய படைப்பு ..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ .தங்கள் வரவிற்கும் இனிய கருத்திற்கும் .

   Delete
 4. அழகான காதல் கவிதை ..அருமை தோழி .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி தங்கள் வரவிற்கும் இனிய கருத்திற்கும் .

   Delete
 5. பாடலாகப் பாடிப்பார்த்தேன்..சந்தம் சரியாக இருக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ .இந்த எதிர்பார்புகளுடந்தான் இந்தப்
   பாடல் வரிகளை இயற்றி இங்கு தவழ விட்டேன் .தங்கள்
   கருத்து மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது .மேலும்
   நன்றிகள் சகோ வரவிற்கும் இனிய கருத்திற்கும் .

   Delete
 6. ஒவ்வொரு கண்ணியும் அருமையாக உள்ளது தோழி.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. ஒவ்வொரு கண்ணியும் அருமையாக உள்ளது தோழி.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........