10/13/2012

இப்படியும் ஓர் ஆசை !!..(தொடர் கதை பாகம் -2 )

அப்பா பிளீஸ் அப்பா ...நீங்க என்னதான் சொன்னாலும் வெளிநாட்டு மாப்பிளைய என்னால கலியாணம் செய்துகொள்ள முடியாதுப்பா  .ராணி இப்புடி அடம் பிடிச்சா எப்புடியம்மா ?...அப்பா நான் உன்ர நல்லதுக்குத்தான் சொல்லுறன் பேசாம இந்தக் கலியாணத்துக்கு ஒத்துக்கோ .அம்மா பாருங்கம்மா நான் வேணாம் வேணாம் எண்டு சொல்லவும் அப்பா ஒரேபிடியா அந்த மாப்பிளையத்தான் நான் கலியாணம் செய்ய வேணும் எண்டு நிக்குறார் நீயாவது சொல்லம்மா இந்தக் கலியாணம் வேணாம் எண்டு .என்னங்க நீங்க அவதான் வேணாம் எண்டு சொல்லுறா இல்ல .பின்ன எதுக்குங்க நீங்க அவள இந்தப் பாடு படுத்துறீங்க ?...கெளரி நீ சும்மா இரு .அவனமாதிரி மாப்பிள இவளுக்கு வேற எங்கடி கிடைப்பான் ?..அம்மாவும் மக்களுமா சேர்ந்து வலிய வாற சீதேவிய தட்டிக் கழிக்க பிளான் பண்ணாதீங்க சொல்லிப்போட்டன் .அது இல்லப்பா தங்கச்சியையும் ,உங்களையும் ,அம்மாவையும் இங்க விட்டிற்று நான் மட்டும் கண் காணாத தேசத்தில போய் என்ன சுகத்தக் காணப் போறன் ?...இதுக்குத்தான் நீங்க என்ன இவ்வளவு தூரம் கஸ்ரப்பட்டு வளத்தீங்களா ?....நான் ஏன்னப்பா உங்களையெல்லாம் விட்டுப் பிரிஞ்சு வாழ வேணும்?....எவ்வளவுதான் பணம் காசு இருந்தாலும் செத்துப் போனவங்கள உங்களால திருப்பிக் கொண்டு வர முடியுமா ?....இந்தப் பிரிவும் எனக்கு அப்புடித்தானப்பா புரியுது!...அளதடா செல்லாம் இதெல்லாம் பாத்தா ஒரு நல்ல வாழ்க்கைத் துணய தேட முடியுமா!....கண்ணத் துடைச்சுக்கொண்டு வெளிக்கிடு மாப்பிள வீடுக்காரர் வர்ற நேரம் ஆச்சு .கெளரி இந்தாடி நம்ம பொண்ண மகாலட்சுமி மாதிரி வெளிக்கிடுத்திக் கொண்டு வா .போம்மா போ ....
சரி அப்பா . 
                            அப்பா ...அப்பா ...மாப்பிள வீட்டுக்காரர்   வந்தாச்சு .சரி போம்மா ஜோதி நீ போ ..போ... போய்ச் சீக்கிரமா  அம்மாட்ட சொல்லு மாப்பிளை வீட்டுக்காரர் வந்தாச்செண்டு .அடடே வாங்க வாங்க உள்ள வாங்க இருக்கட்டும் இருக்கட்டும்.... எல்லாரும்  உக்காருங்க .நாங்க உக்கார்றது இருக்கட்டும்  முதல்ல பொண்ணக் கூப்புடுங்க !..மாமனாரே ஏன் அவசரப் படுகுறீங்க பொண்ணு வரும் .அதுக்கு முதல்ல பேச வேண்டிய சீர்வரிசையைப் பற்றி பேசுவம் .அவ்வளவுதானே பேசினாப் போச்சு .அது சரி இந்தப் பலகாரம் கிலகாரம் இதெல்லாம் தர மாட்டீங்களா ?....உங்களுக்கில்லாததா ?...:) பெரியப்பா பெரியப்பா ..உங்களுக்கு சுகர் இருக்குது!!!...ஏய் குட்டிச் சாத்தான் இத சத்தம் போட்டுச்  சொல்லாதடி காப்பியிலகூட சுகர் இல்லாம தந்திரப் போறாங்கள் ஹா ..ஹா ...ஹா சிரிக்காதடி செல்லம்.. அப்புறம் உன்ர கண்ணு முழிய தோண்டீருவன் .சீ போ நான் உன்னோட டூ .....

                   ஹாய் ..பொண்ணு வந்தாச்சு ...பெரியப்பா பொண்ணு வந்தாச்சு வாம்மா வந்து எல்லாருக்கும் காப்பியக் குடு .பொண்ணப் பாத்துக்கோங்க சம்மந்தி நாளைக்கு உங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறவ .ஸ் ...மருமகளா இல்ல; சம்மந்தி மகளா ....பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கிறா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு !..கேட்டுக்கோம்மா உங்க மாமியாரே சொல்லியாச்சு இனியென்ன தட்ட மாத்திக்கொள்ள வேண்டியதுதானே ?...சம்மந்தி மாப்பிளைய ஒரு வாத்த கேக்க வேணாமா ?...மாப்பிளைய என்ன கேக்குறது கட்டடா  தாலிய எண்டா கட்டீற்றுப் போறான் ஏன்டா டேய் ....மாப்பிள வெக்கப் படுகிறத பாத்தாலே தெரிய இல்லயா!..கலியாண தேதிய கையோட குறிக்கச் சொல்லுற மாதிரி இல்ல ஹா ...ஹா ...ஹா ....எல்லாரும் சிரிச்சது போதும் நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னால வாப்பா தட்ட மாத்திக்கோ அதெப்புடி சீர் வரிசையப் பத்தி ஒண்டுமே பேச இல்லையே ?...யாராவது இங்க சீர்வரிசையைப் பற்றி பேசினீங்க  துலைச்சுக் கட்டிப் போடுவன் ஆமா!....இந்த மாதிரி பொண்ணு எங்க வீட்டுக்கு காலடி எடுத்து வைக்குறதுக்கு நாங்க தானையா சீர்வரிசை குடுக்க வேணும்.. மாணிக்கம் தட்ட வாங்கிக்கோ உன்னோட பொண்ணு எங்க வீட்டுக்கு உடுத்த சேலையோட வந்தா  அது போதும் !..ரொம்ப சந்தோசம் சம்மந்தி !!!..போம்மா போய் பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வேண்டிக்கோ .நல்லா இரும்மா ..நல்லா இரு!!!!...

அப்புறம் என்ன கலியாண தேதியையும் கையோட நிட்சயம் பண்ணிட வேண்டியதுதானே ?...! ஐயரே சீக்கிரமா ஒரு நல்ல நாளாப் பாத்துச் சொல்லுங்க .சரி சரி பாத்துடுறன் ம்ம்ம்ம் ...வாற ஆவணி மாசம் பதினாறாம் திகதி நாள் நல்ல நாளாய் இருக்கு அந்த நாள்ளயே காலியாண திகதிய நிட்சயம் பண்ணிரலாம் .எல்லாரும் நல்லாக் கேட்டுக்கோங்க  இதில எல்லாருக்கும் சம்மதம்தானே !....என்ன சம்மந்தி மாப்பிள வீட்டுக்காரர் எங்களுக்கு இதில பூரண சம்மதம் .உங்களுக்கும் சம்மதம்தானே ?..நீங்களே சொல்லீற்ரீங்க இதில நான் என்ன சொல்லப் போறன் !..எங்களுக்கும் இதில பூரண சம்மதம்தான் சம்மந்தி .அப்புறம் என்ன அடுத்த வாரமே கலியாணத்துக்கு தேவையான எல்லா அலுவலையும் செய்திட வேண்டியதுதான்  .அப்போ  எல்லாருக்கும் வணக்கம் .நாங்க போயிற்று வரப்போறம் .போயிற்று வாறம் சம்மந்தி ...சம்மந்தி அம்மா போயிற்று வாறம் ரொம்ப சந்தோசம்!!!!..கடவுள் கிருபையால எல்லாம் நல்லபடியா நடக்கட்டுக்கும் ......
                                                            தொடரும் ......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7 comments:


 1. காலை வணக்கம்!

  நலமா!
  நான் நலம்! என்தமிழ் நலம்!

  அதிகாலை அந்தமிழ்ப் தொண்டாற்றும் அம்பாள்
  மதிச்சோலை போன்றே மணக்கும்! - நதிபோன்று
  நன்னடையில் தீட்டும் நறுகதையை நான்படித்தேன்
  இன்னிலையில் நெஞ்சம் இருந்து!

  நீண்ட நாள் பழகிய நண்பரின் இல்லத்திற்கு வந்துவக்கும் உணா்வை உணருகிறேன். முகம் பார்க்காச் சங்க கால நட்பை எண்ணுகிறேன்,

  உங்கள் தளத்தில் பதித்துள்ள அனைத்துப் பதிவுகளையும் மெல்லப் படித்து முடிப்பேன்!

  தொடரட்டும் தமிழ்ப்பணி!
  கனியட்டும் நட்பின் கனி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா .தங்கள் வரவும் கருத்தும் கண்டு மட்டற்ற
   மகிழ்ச்சி அடைந்தேன் !!.....இன்பத் தமிழ் அமுதை என்றும்
   மனம் இனிக்கத் தரும் தங்கள் கருத்து என் ஆக்கங்களுக்கு
   கிடைக்கும் மிகச் சிறந்த வெற்றியாகக் கருதுகின்றேன் .
   இளையவர்கள் நாம் விடும் எழுத்துப் பிழைகள் கருத்துப்
   பிழைகள் அனைத்தையும் அவ்வப்போது சுட்டிக் காட்டி
   எம்மையும் சீர் செய்ய வேண்டுகின்றேன் .மிக்க நன்றி ஐயா
   தங்கள் வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் .தமிழ் உள்ளவரை
   எம் நட்பும் தொடர வாழ்த்துக்கள் ஐயா .

   Delete

 2. சகோதரி! என் வேண்டுகோளை ஏற்று எழுதத் தொடங்கியதிற்கு மிக்க நன்றி! தொடருங்கள் தொடர்வேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா தங்கள் வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் .

   Delete
 3. .கடவுள் கிருபையால எல்லாம் நல்லபடியா நடக்கட்டுக்கும் ......

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவுக்கும் இனிய கருத்திற்கும் .

   Delete
 4. நம் நம்பிக்கையால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்... தொடருகிறேன்... (TM 2)

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........