10/07/2012

கவிஞர் .கி .பாரதிதாசன் கவிதைகளா இவைகள் !!!!.....


குறை ஏதும்  இன்றித் தமிழினை எழுதிட
நாம் அறிந்திட வேண்டிய தளம் இதுவே !
மனம் கவர் கவிதை எம் மனங்களில் நிறைய
ஒரு தரம்  வாரீர்  உறவுகளே!

இனியது இனியது என மனம் புகழ்ந்திடும்
இவர்களின் ஆக்கம் அதைக்  கண்டு!
வியந்த என் விழிகள் பகிர்ந்திடத் துடிக்கும்
காரணம் எதுவென உணர்ந்திடுவீர்!

சிறகுகள் விரித்துச்  சிந்தையும்  பறக்கும்
அத்தனை ஆனந்தம் நெஞ்சினிலே!
படர் கொடியென இங்குப்  படர்ந்திடும் கவிதையைச்
சுவைத்திட இன்பம் பெருகிடுமே!


நாம் எழுதிடும் கவிதையின் தரம் அதைக் கூட
உயர்த்திட முடியும்  படிப்பதனால்
நான் அறிந்ததை பலரும்  அறிந்திட வேண்டும்
இதுதான் இன்றைய நோக்கம்  உறவுகளே!

வணக்கம்!
கி .பாரதிதாசன்  ஐயா அவர்களின்  ஆக்கங்களைக்  கண்டு 
மகிழ்ந்த என் கண்கள் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்வதன் 
மூலமாக பெரும்  மகிழ்ச்சி அடைகின்றது! வாழ்த்துக்கள்
தங்கள் கவிதைகளையும் சிறந்த ஆக்கங்களையும் அனைத்து 
வலைத்தள உறவுகளும் ,கண்டு  மகிழும் வாய்ப்புப் 
பெருகட்டும்! .மிக்க நன்றி ஐயா பகிர்வுகளுக்கு  .வாழ்க தமிழ்!
http://bharathidasanfrance.blogspot.ch/2012/10/blog-post_6.html
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

21 comments:

 1. அருமையான அறிமுகம் அக்கா! அவரின் தளம் சென்று பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் ஆர்வத்திற்கும் .

   Delete
 2. நாம் எழுதிடும் கவிதையின் தரம் அதைக் கூட
  உயர்த்திட முடியும் இவைகளைப் படிப்பதனால்
  நான் அறிந்ததை பலரும் அறிந்திட வேண்டும்
  இதுதான் இன்றைய நோக்கம் அன்பு உறவுகளே

  !..உண்மைதான் அவரின் பக்கம் நிறைய தடவை போயி பின்னூட்டம் போடமுடியாம திரும்ப வேண்டி வருது வேர்ட் வெரிபிகேஷன் ரொம்ப தொல்லை கொடுக்குது

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்மா .தொடர்ந்தும் அவரது ஆக்கங்களை வாசியுங்கள் .

   Delete
 3. அருமையான அறிமுகம்
  இதுவரை படித்ததில்லை
  இனி அவசியம் தொடர்கிறேன்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி ஐயா .இந்த ஆக்கங்களை நீங்களும்
   தொடர்ந்து வாசியுங்கள் .நன்மை பெறுவீர்கள் .

   Delete
 4. கவிபாரதி தாசன் கவியெல்லாம் இந்தப்
  புவியிருக்கும் காலமவரைப் போற்றும்! – கவித்தமிழால்
  அம்பாள் அடியாள் அளித்திட்ட வாழ்த்துப்பா
  செம்மை சேர்க்கும் சிறந்து!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வரவிற்கும் இனிய நற் கருத்திற்கும் !...

   Delete
 5. aam !

  naanum viyanthullen!

  attakaasamaana valai athu!

  comments poda mudiyavillai-
  vazhiyai ilakuvaakka sollungalen.....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ விரைவில் ஆவனை செய்கின்றேன் .

   Delete
 6. வணக்கம்!

  நன்றி! நன்றி! நனிநன்றி!
  நல்ல அம்பாள் எழுத்திற்கே!
  கன்றின் அளவே என்புலமை!
  கற்க நாளும் விழைகின்றேன்!
  குன்றின் விளக்காய் என்வலையைக்
  கோலம் செய்து மகிழ்ந்துள்ளீா்!
  மன்றின் புகழாய் மனமருகி
  வார்த்தை தேடித் தவிக்கின்றேன்!

  அம்பாள் அடியாள் பெயா்பொருத்தம்!
  அன்பும் பண்பும் ஒளிர்ந்தனவே!
  எம்மேல் நம்பி வலையுலகில்
  ஏற ஏணி அளித்துள்ளீா்!
  உம்போல் உலகில் ஒருசிலரே!
  உயா்ந்த நட்பைப் போற்றுகிறேன்!
  கம்பால் நடக்கும் முதுமையிலும்
  கவிஞன் மறவேன் இவ்வலையை!

  மாசான் மருவான் என்பிழையை
  மாற்றி அமைத்த பெரும்புலவா்
  ஆசான் அரிய புத்திரரை
  அடியேன் பெற்ற சீா்சேரும்!
  ஈசான் அருளோ? என்னுயிராம்
  இன்பத் தமிழின் அருஞ்செயலோ?
  பேசான் போன்றே வாய்பொத்திப்
  பெருமைக் கடலில் முழுகுகிறேன்!

  புதுவைப் புலவன் பாவேந்தன்
  போந்த பெயரை நான்பெற்றேன்!
  பொதுமை எண்ணம்! புரட்சியெழும்
  புதுமைப் பாதை போடுகிறேன்!
  எதுகை மோனை இயல்பாக
  என்னோ டிருந்து விளையாடும்!
  மதுவைச் சுரக்கும் வலைப்பூவே!
  வாழ்வே! வளமே! வண்டமிழே!

  ReplyDelete

 7. மீண்டும் வணக்கம்!

  நிறைந்த தமிழ்ப்பணியில் பின்னிக் கிடக்கின்றேன்!
  பிரான்சு கம்பன் கழகம்,
  கம்பன் மகளிரணி,
  கம்பன் இளையோர் அணி,
  கம்பன் நுால் நிலையம்,
  திங்கள் கவியரங்கம்,
  கம்பன் இலக்கிய இலக்கணத் திங்கள் இதழ்......

  இதற்குமேல் வலைப்பூ.....

  தமிழை வலையின் வழியாகப் பரப்புவதும்
  தமிழ்ப் பற்றாளா்களை ஒன்றிணைப்பதும் என் நோக்கம்

  வலைப்பதிவு செயற்படும் நுட்பங்களை இன்னும் நான் அறியவில்லை!
  வேர்ட் வெரிபிகேஷன் குறித்து எதுவும் தெரியவில்லை.
  என்னிடம் யாப்பிலக்கணம் பயின்ற கவிஞா் அருணாசெல்வத்தின் உதவியுடன் வேர்ட் வெரிபிகேஷன் நீக்கிவிட்டேன்.

  வலையாம் வயலில் தமிழ்விளைப்போம்! சீரார்
  கலையாம் தமிழ்நெறி காத்து!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா .தங்கள் பணிகள் யாவும்
   செவ்வனே நிறைவேற என் இனிய வாழ்த்துக்கள் .
   வலைத்தளத்திலும் தமிழ் வளம் பெற தாங்கள்
   எடுத்த காரியம் எக் குறைகளும் இன்றி வெற்றி பெற
   இறைவன் உங்களுக்கு மேலும் நல்லாசிகள் வழங்கட்டும்!....

   Delete
 8. தெள்ளு தமில்ழ்ச் சொல்லழகு!....
  தேர்ந்தெடுத்த நடையழகு!.....
  இன்னமுதப் பொருளழகு !....
  ஏற்றம் மிகு கவி அழகு !...
  விண்ணுயரப் பறந்திடவே
  விரும்புகின்றாள் இந்த அடியவளும்
  கண்ணெனவே நான் மதிக்கும் கவி படைக்கும்
  தந்தை உன்னை என்ன சொல்லிப் பாராட்ட !...
  எதைக் கொடுத்து நான் மகிழ ?.......!
  அன்புடனே குசேலரும்தான் அகம் மகிழ்ந்து
  கொடுத்த அவலினைப்போல் இதையே
  ஆவலுடன் பகிர்ந்தளித்தேன் நானும்
  நன்றி நன்றி நன்றி ஐயா !!!!!..................

  ReplyDelete
 9. மிக்க நன்றி அம்மா...

  நேற்று அவருக்கு தெரிவித்தேன்...

  இன்று அவர் தளத்தில் Word verification கிடையாது...

  அவரின் சிறப்புகளை அனைவரும் அறிய பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே என் வேண்டுகோளை ஏற்றுத்
   தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு ......

   Delete
 10. அம்பாள் அவர்பக்கம் பின்னூட்டம் போடமுடியல்லியே

  ReplyDelete
  Replies
  1. அக்குறை நீக்கப்பட்டு விட்டதம்மா .

   Delete
 11. தமிழை வலையின் வழியாகப் பரப்புவதும்
  தமிழ்ப் பற்றாளா்களை ஒன்றிணைப்பதும் என் நோக்கம்.

  ஐயாவின் வலையை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி .நான் என் கடமையைத்தான் செய்துள்ளேன்
   என நினைக்கின்றேன் .தங்கள் எண்ணம்போல் இந்த நற் காரியம்
   சிறப்பாக வெற்றி பெற இறைவன் உங்களுக்கு நல்லாசிகளை வழங்கட்டும் !...

   Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........