10/03/2012

பூமித்தாய் இங்கு சிரிப்பாளா!.....


காலம் பார்த்து பயிர் செய்து
கவலையின்றி வாழ்ந்த இனம்
எந்நாளும் படும் துயரம் இங்கு
எவர்தான் அறிவார் செண்பகமே!...

பூமி வறண்டு போயாச்சு !....
பெய்த மழையும் ஒஞ்சாச்சு
இதில் சாமி குத்தம் ஏதுமில்லை
எங்கள் சங்கடத்தைப் பார்த்தாயா!....

வரப்பு மூடி வளரும் பயிர்
வாடி இங்கு  நிக்குறது அதற்க்கு
உரம் வாங்கப் போனால்
அடுப்பில் பூனை தூங்குகிறது!...

அடித்துக் கட்டி வேலை செய்து
அலுத்துப் போன உடம்பு ஆறும்  முன்னே
அடுத்த போகமும் வந்து விடும்
அப்போதும் எம் கை வெறுங் கைதானே!...

கொடுத்து வைத்தவன் கமக்காரன்
என்ற கோசம் அடங்கிப் போனதிப்போ
அடுத்த வேளை சோற்றுக்கும்
அவலப்படும் எங்களைப் பார் !!!!!......

பன்னக்காரன் பெண்டில்
பணியக் கிடந்து செத்தாளாம்..
பரியாரி பெண்டில்
புழுத்துக்  கிடந்து செத்தாளாம்!!!!!.......

எங்கள் கதையும்  இதுதானே!....
வேறென்ன சொல்வேன் செண்பகமே !....
உன்னைப் பெத்த அப்பனுக்கு
உழைக்க வேறு வழி என்னதான் இருக்கு!!!!.......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7 comments:

 1. vethanai thathumpum varikal....

  ReplyDelete
 2. பழய பழமொழி ஒன்னுதான் நினைவுக்கு வருது அரைச்சவனுக்கு ஆட்டுக்கல் சுட்டவனுக்கு தோசைக்கல்தான் மிச்சம்னு சொல்வாங்க.அதான் சரி போல இருக்கு

  ReplyDelete
 3. நல்ல கவிதை
  வேடனை வரிகள்

  ReplyDelete
 4. வேதனை தரும் வரிகள் அம்மா...

  இன்றைய நிலைமை இப்படித்தான் இருக்கு...

  ReplyDelete
 5. வேதனை தரும் வரிகள் அம்மா...

  இன்றைய நிலைமை இப்படித்தான் இருக்கு...

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........