10/01/2012

கோவப்படாதே பெண்ணே நீ என்னைக் கண்டு ....மாவைப் பிசைந்த கையாலே என்
மனதைப் பிசைந்து போனவளே  கொஞ்சம்
தேனை ஊற்றிப் பிசைந்தால் என்ன!......
உன் தீந்தமிழ்போல் நான் வளர!....

ஆவின் பாலுக்கிணையான  உன்
அன்பைத் தானே நான் கேட்டேன்
கோவப் பட்டுப் பார்க்காதே உன் முன்
குழந்தை போல நிற்கும் என்னை  !......

பாலர் பள்ளிக் கூடத்தில் நான்
படிக்கச் சென்ற முதல் நாள் போல்
ஏனோ உன்னைக் கண்டதுமே
எதுவும் பேச முடியவில்லை !!!!......

வீரம் கொண்ட பெண்ணே  உந்தன்
விருப்பம் என்ன சொல்லு நீயும்
காலை மாலை எந்நேரமும் இங்கு
காத்துக் கிடக்கின்றேன் உனக்காக!...

ஓலை ஒன்று எழுதி அதை
உன்னிடத்தில் நான் கொடுக்க
நீ கிழித்து எறியக் கண்டால் என்
நெஞ்சுக் குழியில் நீர் வற்றிப் போகும் !...

பின் ஆளை வைத்து அடிப்பாயோ
இல்லை அன்பைத் தந்து மகிழ்வாயோ என
ஏதும் இங்கு தெரியாமல் பெரும்
ஏக்கம் எனக்குள் உள்ளதெடி பெண்ணே !...

காரணம் நீ தமிழிச்சி உந்தன்
கண்ணில் தீப்பொறி கண்டாச்சு!..
ஏழைக் குடிசையில் பிறந்தாலும்
எனக்கு நீதான் இளவரசி !!!!..........

மாலை மாற்றும் அந்நாளில்தான்
மண மகனைப் பார்க்கும் கூட்டம் !...
உன் தாய்வழி வம்சமும்  அறிந்தவன் நான்
அதனால் என்னைக் கண்டு முறைக்காதே!...

ஏழைப் பக்தன் உன்னையே எந்தன்
இடது புறத்தில் அமர்த்தி வைக்க
அந்தக் காலம் தொட்டு இன்று வரை
அழகிய கற்பனை சுமந்து வந்தேன் !...

இது வீணோ சொல்லடி என் தோழி
உன் விருப்பம் போல நான் நடப்பேன்
ஆணும் பெண்ணும் மணம் முடிப்பது
அன்பைப் பகிர்ந்து வாழ்வதற்கே !......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9 comments:

 1. கோவப் பட்டுப் பார்க்காதே உன் முன்
  குழந்தை போல நிற்கும் என்னை !......

  குழந்தை போலவே மனம் துள்ளி குதிக்கிறது வரிகளைக் கண்டதும் .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் இனிய
   கருத்திற்கும் .

   Delete

 2. // பாலர் பள்ளிக் கூடத்தில் நான்
  படிக்கச் சென்ற முதல் நாள் போல்
  ஏனோ உன்னைக் கண்டதுமே
  எதுவும் பேச முடியவில்லை !!!!.....//

  நல்ல உவமை! நன்று!

  ReplyDelete
 3. நல்ல சொல்லாடல்... ரசிக்க வைத்தது...

  ReplyDelete
 4. நல்ல சொல்லாடல்... ரசிக்க வைத்தது...

  ReplyDelete
 5. ஏழைக் குடிசையில் பிறந்தாலும்
  எனக்கு நீதான் இளவரசி !!!!..........

  காதலின் உச்சம் கவிதையில்...
  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 6. நல்லதொரு காதல் பாடல்! அருமையான வரிகள்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 7. ரசிக்க வைத்த கவிதை....

  ReplyDelete
 8. எப்படிதான் நீங்கள் யோசிக்கீறீர்களோ மிக நன்றாக இருக்கிறது. இப்படி நன்றாக எழுதும் ரகசியத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்.. கிறுக்கும் நாங்களும் கவியரசர் ஆவோமே

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........