10/17/2012

நீங்களும் தெய்வமாகலாம் .....

உடலைக் குறைக்க நடப்போர் நடுவில்
உணவுக்கு ஏங்கும் உயிர்களைப் பார்!
இந்த வறுமைக் கோட்டை அழிக்கவா  உனக்கு
வல்லமை இல்லை சொல்டா  மானிடனே!

ஒருவர் பசியை ஒருவர் தீர்த்தால்
உலகில் வறுமை அழியாதோ!.......
நாம் தெருவில் சிந்தும் செல்வம் திரண்டால்
உயிர்கள் பிழைக்க முடியாதா!

கருணை வேண்டும் மனிதா உனக்கும்
கையில் இருப்பதைக் கொடுப்பதற்கு!
இது அழியும் உலகம் அதனால்தானோ
மனிதம் மரத்துப் போனதிங்கே!

மெழுகைப்போல நல் இதயம் இருந்தால்
ஒளியைத் தேடி அலைவான் ஏன்!
இந்தக் கொடுமை கண்டும் அசையா மனதை
உருகச் செய்ய நல் வழி தேடு!

விழியில் வழியும் கண்ணீரைக்கூட
அருந்தத் துடிக்கும் நிலையைப் பார்!
இங்கு அழியும் இந்த உறவைக் காக்க இனியும்
இத்தனை தாமதம் வேண்டாமே!

பல மொழியில் பேசித்  திரிந்தால் என்ன
மனிதன் என்பவன் ஓர் இனமே! இவன்
அழியும்போது துடிப்பவன்  எவனோ
அவன்போல் தெய்வம் வேறில்லையே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

 1. சமூக அக்கறையுள்ள அருமையான கவிதை

  ReplyDelete
 2. சமுதாய நோக்கோடு அருமையான கருத்துக்களை
  கோர்த்து நல்லதொரு கவிதையை வழங்கிய சகோதரிக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்! நன்று!

  ReplyDelete
 3. மனதை உருக வைக்கும் வரிகள்...

  சிறப்பான கருத்துக்கள் அம்மா...

  நன்றி... tm2

  ReplyDelete
 4. அருமையான தலைப்பும் கவிதையும்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. மன்சே கனத்து போக வைக்கும் உருக்கமான கவிதை

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........