10/11/2012

இப்படியும் ஓர் ஆசை !!!!....(தொடர் கதை)

அடடடடா....என்ன அழகு !....என்ன அழகு !.....சுப்புரமணி நீ வாழ்க்கையில செய்த ஒரே ஒரு நல்ல காரியம் இதுதானய்யா ....டேய் சும்மா இருடா எனக்கு முன்னாலையே அப்பாவப் போய் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு போடா டேய் .அப்போ உனக்கு பின்னால நிண்டு கூப்பிடலாமா மீனாட்சி ?....ஹா... ஹா... ஹா ....என்னங்க நீங்க அவனோட சேந்து சிரிக்குறீங்க ?.........வேற என்னத்த எடி செய்யலாம் சொல்லு ?....எங்களுக்கெண்டு இருக்குறது இவன் ஒரே ஒரு பிள்ளதான். அவன் சந்தோசம்தானேடி எங்களுக்கு பெரிசு .அது இல்லங்க .....என்ன அது இல்லங்க ?..பாக்குறவங்க என்ன நினைப்பாங்க எண்டு சொல்ல வாற அப்புடித்தானே ?...மரியாத மனசில இருந்தா போதும் .ஏன்டா  ரகு உனக்கு இந்தப் பெண்ண புடிச்சிருக்கா ?...     அப்பா நீங்க பாத்த பொண்ணு எப்புடி அப்பா பிடிக்காமல் போகும் ?....சரீடா  வாற தை மாசத்திலயே ஒரு நல்ல நாளாய்  பாத்திர வேண்டியதுதான் .சீ போங்கப்பா எனக்கு வெக்கமா இருக்கு ...மீனாட்சி பாரு பாரு உன்ர மகன் வெக்கப்படுறத ......ஆமா!!!.. இல்ல ......ஹா ....ஹா ....ஹா....வேணாம் ..பிறகு அழுதிருவன் .யேய் அழுதிருவானாமடி !...சரி விடுங்க புளைச்சு போகட்டுக்கும் .என்ர அம்மா எண்டா அம்மாதான் .ம்ம்ம்ம் ...இந்தப் பசங்களே இப்புடித்தான் சமயம் பாத்துக் கால வாரீருவாங்கள் .டேய் கண்ணா நீ கவலப் படதயடா உங்க அப்பா அவரையும் சேத்துத்தான் சொன்னாரு.ஹா ...ஹா ...ஹா ..சபாஸ் சரியான போட்டி ....

      சுப்புரமணி ....டேய் டேய் உங்க தாத்தா குரல் கேக்குது ஸ்ஸ்ஸ்..... சத்தம் போடாதடா  .ஏனம்மா அவர் எங்கட தாத்தாதானே?.. எதுக்கம்மா இப்புடி பயப்புடுற ?..டேய் அவர் என்ர மாமனாரடா .மாமனார் எண்டா பயப்புடணுமா?..அது இல்லடா நீ சின்ன வயதிலயே வெளிநாட்டில போய் இருந்திற்ற அதனால உனக்கு இது ஒண்டுமே புரியாது .அப்புறமா சொல்லுறண்டா விடுடா கைய.. மீனாட்சி ......இதோ வந்திற்ரன் மாமா ......மாமா என்னங்க மாமா சாப்பிடுறீங்க?...எனக்கு கொஞ்சம் தண்ணி தா பிள்ள .சரி மாமா ...அடடே ரகு வாய்யா ....எப்புடியப்பா இருக்கிற ?...ஆளே பெரியாளா வளந்திற்ற!!......நான் நல்லா இருக்குறன் தாத்தா .நீங்க எப்புடி இருக்குறீங்க தாத்தா ?...எனக்கென்னப்பா போற கட்ட ஏதொ இருக்குறன் .அது சரி.. இந்தக்  காதில தோடு ,கழுத்தில அரக்கிலோவில ஒரு  சங்கிலி, கையில நட்டுவ மேளம் அடிக்கிற ஆக்கள்மாதிரி நகை அதுகள் ஒண்டும் நீ போட மாட்டியா ?...அட போங்க தாத்தா ...வெளிநாட்டில இருக்கிறதால அதெல்லாம் போட வேணும் எண்டு அவசியம் இல்ல .நான் உங்கட பேரன் தாத்தா .ம்ம்ம் இப்ப தாண்ட நீ என்ர  பேரன் .இந்தாடா  தாத்தா உனக்காகக் கொண்டந்தது .என்ன தாத்தா இது ?...பிரிச்சுத்தான் பாரன் ...ஆஹா ...எள்ளுருண்டை !!!..தாத்தா நீ அத இன்னுமா மறக்க இல்ல ?..அத எப்புடியடா மறப்பன்?...  எள்ளுருண்டை  தந்தால்தான் என்னட்ட தேவாரம் படிக்க வருவன் எண்டு அடம் பிடிச்ச ஆள்த்தானே நீ ...போங்க தாத்தா எனக்கு இப்ப ஒரே கவலையா இருக்கு .இத்தின வருசமா நான் உங்களோட வாழக் குடுத்து வைக்க இல்லையே தாத்தா ....டேய் என்னடா இது சின்னக் குழந்தை மாதிரி அழுகுற?....!! அது ஒண்டும் இல்லத் தாத்தா ....புரியுது!....நீ என்னடா செய்வ பாவம் நம்மளோட தலை எழுத்து  இப்புடியாப் போச்சு ...கண்ணத் துடைச்சுக்கோ .ரகு ...அம்மா கூப்புடுறா போய் என்னெண்டு கேள் .
                                      ஈஸ்வரா .....இந்தக் காலம் எப்பதான் மாறுமோ !!...என்னப்பா உங்கட பேரன் என்னவாம்?...சுப்புரமணி நீ குடுத்து வச்சவன்ரா.அருமையான பிள்ளைய கடவுள் உனக்கு மகனா தந்திருக்கிறான் .கெதியில அவனுக்கொரு நல்ல பெண்ணாப் பாத்து கலியாணத்தையும் செய்து வச்சிரு .ஆமாப்பா அது விசயமா பேசத்தான் அவன இங்க வரச் சொன்னன் .நடக்கட்டும் நடக்கட்டும் நல்ல விசயத்த தள்ளிப் போடாத .அது சரி பொண்ணு ஆரு ?....அது வேற யாரும் இல்லயப்பா உங்கட பாலிய நண்பர் சொக்கலிங்கம் பிள்ளையின்ர பேத்தி ராணிதான் .அட அந்த இளவரசியா ?...! ஆமாப்பா ..அருமையான சோடிப் பொருத்தம் .அந்தப் பெண்ணுக்கும் இதில சம்மதம்தானே ?.......
                                                 
                                                                                  தொடரும் .....
                                         
         (  இக் கதையில் வரும் கதா பாத்திரங்களும் கதையும் கற்பனையே .)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3 comments:

 1. பதிவை நீட்டாமலும் சுவாரஷ்யமாகவும் எழுதியிருக்கிறீர்கள்
  தொடருங்கள்...

  ReplyDelete
 2. கவிதை போலவே கதையும் நல்லா எழுத வருது சந்தோஷமான குடும்ப உறவுடன் கதை ஆரம்பிச்சிருக்கே. நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. தொடர்கிறேன்...

  நன்றி... (TM 1)

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........