10/29/2012

ஈழத் திருநாடே எந்தன் தாய் நாடேஈழத் திருநாடே என்றன்  தாய் நாடே!
உ(ன்)னைக் காணும் ஆவல் நெஞ்சினிலே
எந்நாளும் இங்கு பொங்குவதேன்!
வானம் பாடி சிறகை இழந்து
வாட்டும் இந்தக் குளிர் நாட்டில்
நாட்டம் இன்றி ஏனோ இங்கே
வெள்ளோட்டம் ஓடுது  எந்நேரமும்!

பனிப் பூக்கள் தலை மேலே தினம் தூவ
இனி காச்சல் சளி நோயால்  உடல் வாட
இது என்ன  சாபம்! -  அடி போடி
உன் மடி மீது நாம் தூங்கும் சுகம் வருமா!

நறு மணம் வீசும் மலர்க்கூட்டம்
உன் எழில் கொஞ்சும் தரைமீது
தினம் தினம் உறவுகள் வலம் வரவே
தீராத சந்தோசம்  அது தீர்ந்து போனதின்று!

மாறாப்பு போட்ட மங்கை இவள்
மனசுக்குள் ஓடும் கங்கை வந்த
வீராப்பு அடங்கிப் போக விழிநீரால்
கோலம் போடுவதேன் இங்கே!
தாய் நாடே சொர்க்கம் சொர்க்கம்
அதைத் தயங்காமல் சொல்வதற்கு
ஏன் இந்த வெக்கம்!

பாய் போதும் நாம் தூங்க
பண்பாடு நிறைந்த எம் நாடே!
குயில் பாடும் பாட்டுச் சத்தம்
அது கேட்டால் போதும் போதும்!
மனசுக்குள் பட்டாம் பூச்சி
பட பட பட என்று பறந்திடவே
செந்தமிழாலே கவி பாடி
எம் உறவோடு நாம் சேரும் காலம் அது
எங்கே ....எங்கே ..எங்கே!

தேன் கூடு  கண்களுக்குளே
தீராத மோகம் ஊட்ட
 நான் பாடும் பாடல் இது
உனக்கங்கே கேக்குறதா?

                                              (   ஈழத் திருநாடே ...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7 comments:

 1. உலகின் எந்த கோடியில் இருந்தாலும் தாய் மண்ணை மறக்கமுடியுமா..

  ReplyDelete
 2. சொர்க்கமே வந்தாலும் நம் ஊரப் போல வருமா? ~ கவிதை அருமை

  ReplyDelete
 3. பாடல் அருமை...

  வாழ்த்துக்கள்...

  நன்றி...
  tm1

  ReplyDelete
 4. தாய்மண்ணைப் பிரிந்த மனதில் உள்ள வலிகள், ஏக்கம் இவற்றின் இனிய வெளிப்படு ...

  // செந்தமிழாலே கவி பாடி
  எம் உறவோடு நாம் சேரும் காலம் அது
  எங்கே ....எங்கே ..எங்கே!!!...................//

  தாய்மண்ணின் சுவாசக்காற்றை சுவாசிக்கும் காலம் வரும்.. அதுவரை காத்திருப்போம்..

  ReplyDelete
 5. பாடல் மிக மிக அருமையாக இருக்கு.......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 6. ஈழ மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த பாடல்! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. தாய்மண்ணின் பெருமை யாரால் மறக்க இயலும்?

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........