11/01/2012

பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்மனம் இனிக்கப் பேசும் முல்லை
மலரே இங்கு உன்னை வாழ்த்த
வெண்ணிலவை நானளைக்கவோ ஓஓஓ ஓஓ .....
விடி வெள்ளிகளால் மாலை கோர்க்கவோ .....

மானே எந்தன் மாங்குயிலே .....
தேனே.... எந்தன் திகழொளியே ...
நீயே... எந்தன் யீவனடா ...
எந்நாளும் இங்கு நீ வாழ
என்னுயிரை நான் கொடுத்து
வாழ வைப்பேன் !¨..உன் மடியில்
நான் தவழக் காத்திருப்பேன் !.........

                                                  (   மனம் இனிக்கப் )

பூவே இளம் பூவே உந்தன்
உள்ளம் அது வெள்ளை என
இந்த ஊரும் உலகும் போற்றும்போது
உன்னால் நானும் மகிழ்வேனே ......

வீரம் வேண்டும் நெஞ்சினிலே
வெற்றி என்றும் உனதாக நல்ல
ஞானம் வேண்டும் மகனே உந்தன்
வாழ்க்கை என்றும் சிறப்பாக .....

கோலம் போடும் கண்ணாலே என்னைக்
கொள்ளையடித்துச் செல்பவனே ......
எந்நாளும் இன்பம் பொங்கிடவே
இந்நாளில் நாமும் வாழ்த்துரைப்போம்....

ஆலம் விழுது போல் உன் வாழ்வு
அன்பால் உறுதி கொள்ளட்டும்
உள்ள காலம் முழுதும் உன்பெயரை
அந்தக் காலன்கூட சொல்லி மகிழட்டும் ...

ஏழை எளிய மக்கள் எல்லாம்
இவன்போல் துணைவன்  இல்லை என்று
நாளை இந்த யுகமே போற்ற
நலமாய் வாழ வாழ்துரைப்போம் .....

                                                  (   மனம் இனிக்கப் )                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

 1. ஆஹா... இனிய தமிழ் வரிகளால் கொஞ்சிப் பாடிய பிறந்த நாள் வாழ்த்து அருமை. மிக ரசித்தேன். என் வாழ்த்தையும் பதிவு செய்கிறேன்.

  ReplyDelete

 2. யாருக்கு பிறந்தநாள் வாழ்த்து புரியவில்லையே கற்பனையா ? எதுவானாலும் நல்ல சந்தம்

  ReplyDelete
 3. சிறப்பான கருத்துக்களுடன் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் அருமை...

  வாழ்த்துக்கள்...
  tm3

  ReplyDelete
 4. அமுதினும் இனிய தமிழில் அழகிய வாழ்த்து நானும் சொல்லிக்கொள்கிறேன்.

  ReplyDelete
 5. "கோலம் போடும் கண்ணாலே என்னைக்
  கொள்ளையடித்துச் செல்பவனே" .... வாவ் படமும் அப்படித்தான் சொல்கின்றது.

  அழகிய வாழ்த்துக் கவிதை. இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. சிறந்ததொரு வாழ்த்துக்கவிதை! என் வாழ்த்துக்களும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........