12/07/2011

வானம் கறுக்குது பார் ....


வானம் கறுக்குது பார் !
 வண்ண மயில் ஆடுது பார்! 
காற்று வீசுது பார்! 
கடலலைகள்  மோதுது பார்!


தவளை கத்துது பார்! 
தண்ணீர் சொட்டுது பார் !
மின்னல் மின்னுது பார்! 
மேகத்தில் இடி இடிக்க 
மழை வந்து கொட்டுது பார்!


தண்ணீர் பெருக்கெடுத்து 
தரை எங்கும் ஓடுது பார்! 
குப்பை கூளமெல்லாம் அதில் 
மிதந்து செல்வதைப் பார் !


முத்தன் வயலுக்கு 
வரப்பு கட்டி நிற்பதைப் பார்! 
அட்டை ஊருது பார்! 
நத்தை ஊருது பார்! 
பட்டுப் பூச்சி கொட்டுது பார் !


தம்பி குளிப்பதற்கும் 
அம்மா சமைப்பதற்கும் 
மண்ணில் உயிர் வாழ 
மரங்கள் செழிப்பதற்க்கும் 


உடுப்பு துவைப்பதற்கும் 
உண்டு களிப்பதற்கும் 
மண்ணில் மழை வேண்டி 
நீயும் மகிழ்ந்து துதி பாடு !                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

19 comments:

 1. மழை பற்றி அழகிய கவிதை!

  ReplyDelete
 2. மழைக்கால தருணங்கள்..
  அழகிய கவிதை வடிவில்...

  வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 3. சிறுவயதில் மலையில் குளித்து விட்டு, மறுநாளில் ஊரும் பட்டு பூச்சிகளை பிடித்தி தடவி கொண்டே இருந்த பருவம் நினைவில் வருகிறது...!!!

  ReplyDelete
 4. மழையின் சிறப்பைச் சொல்லும் அழகிய கவிதை.”மழையே மழையே போ” என்கிற ஆங்கில ரைமுக்குப் பதிலாக இதைச் சொல்லித்தரலாம்!

  ReplyDelete
 5. மழை பற்றி அழகிய கவிதை மழை அருமை

  ReplyDelete
 6. மண்ணில் உயிர் வாழ
  மரங்கள் செழிப்பதற்க்கும்
  மண்ணில் மழை வேண்டி
  நீயும் மகிழ்ந்து துதி பாடு !.

  மழையின் பெருமையை அழகாக அருமையாக சொல்லும் வரிகள். பாராட்டுக்கள்

  ReplyDelete
 7. 'நீருக்கான' கவிதை, வீணாகவில்லை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. சிறுவர்களுக்காகவும் எளிய நடையில் நல்ல கருத்துக்களைச் சொல்லும் கவிதைகள் எழுதப்பட வேண்டும். நன்றாக இருக்கிறது. முடியும் போதெல்லாம் இதுபோல எழுதுங்கள்...

  ReplyDelete
 9. சிறுவர் ஆடிப்பாட நல்லதோர் மழைக்கவிதை.

  ReplyDelete
 10. மழைக்கவிதை மனசில் அப்படியே ஒட்டிக்கொள்கிறது .. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. மழைக்கவிதை நல்லா இருக்கு.

  ReplyDelete
 12. சில்லென்று துளிவிடும்
  மழைநீர் நெஞ்சுக்குள் பாய்ந்ததுபோல
  அழகிய சிறுவர் பாடல்...
  நன்று சகோதரி...

  ReplyDelete
 13. கவிதை மழையில் நனைய இன்னொரு முறை வாய்ப்பு.. மீள்பகிர்வுக்கு நன்றி சகோ...


  வாசிக்க:
  இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை

  ReplyDelete
 14. தங்கள் பதிவைப் படிக்க
  மழை பெய்வதாகவே உணர முடிந்தது
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள் த.ம 9

  ReplyDelete
 15. இன்றைய சூழ்நிலைக்கேற்ற அழகான பதிவு!
  பகிர்விற்கு நன்றி சகோதரி!
  இதையும் படிக்கலாமே :
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........