12/02/2011

இது தேவன் வரும் நேரம்!.....

அழுது அழுது தொழுத விழிகள் 
இறைவன் முகத்தைப் பார்க்குது இருள் 
அகற்றும் தேவன் முகத்தில் இருந்து 
கருணை ஒளியைக் கேக்குது !...........


விதியும் சதியும் போட்டி போட்டு 
வாழ்க்கை எங்கோ போகுது இதில் 
சதி வலையில் விழுந்த உயிர்கள் 
நீயின்றி சங்கடத்தில் நீந்துது!........


உருகும் மெழுகு போல இங்கே 
உள்ளம் உருகிப் போகுது!...........
எவரும் அறியா மனதில் துன்பம் 
எல்லை மீறிப் போனது!..............

கருணை உள்ளம் கொண்ட தேவன் நீ 
மண்ணில் பிறக்க வேண்டுமே உன் 
அருமை பெருமை அறிந்து  உயிர்கள் 
அன்பில் திளைக்க வேண்டுமே!.....

வறுமை என்ற கொடிய நோயை நீ 
விரட்டி அடிக்க வேண்டுமே இங்கு 
தரும சீலர் பிறந்து வந்து எங்கும் 
தர்மம் நிலைக்க வேண்டுமே!...........

ஒரு கொடியில் பூத்த மலர்கள் 
ஒற்றுமையாய் வாழ்ந்திட 
வளர் பிறைபோல் நன்மைகளை 
நீ வாரி வாரித் தந்திடு!...............


உலக நன்மை வேண்டித் தினம் 
உயிர்கள் உன்னை அழைக்குது 
விரைந்து வந்து நீயும் எங்கள் 
வேண்டுதலை நிறைவேற்றிடு!..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

 1. சம்பவாமி யுகே யுகே!
  த.ம.2

  ReplyDelete
 2. அழைப்பு கவிதை...
  அருமை...

  ReplyDelete
 3. உலக நன்மை வேண்டித் தினம்
  உயிர்கள் உன்னை அழைக்குது
  விரைந்து வந்து நீயும் எங்கள்
  வேண்டுதலை நிறைவேற்றிடு!..


  நல்ல வரிகள்.

  ReplyDelete
 4. உலக நன்மை வேண்டித் தினம்
  உயிர்கள் உன்னை அழைக்குது
  விரைந்து வந்து நீயும் எங்கள்
  வேண்டுதலை நிறைவேற்றிடு!..//

  அருமையான வேண்டுதல் வரிகள்...!!

  ---வாழ்த்துக்கள்-----

  ReplyDelete
 5. விதியும் சதியும் போட்டி போட்டு
  வாழ்க்கை எங்கோ போகுது இதில்
  சதி வலையில் விழுந்த உயிர்கள்
  நீயின்றி சங்கடத்தில் நீந்துது!........

  ReplyDelete
 6. உலக நன்மை வேண்டித் தினம்
  உயிர்கள் உன்னை அழைக்குது
  விரைந்து வந்து நீயும் எங்கள்
  வேண்டுதலை நிறைவேற்றிடு!..// அசத்தலான வரிகள். வேண்டுதல்தான் நிறைவேறுமா?

  ReplyDelete
 7. அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும் வேண்டுதல் கவிதை.வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. தேவன் வரும் நேரம் ... நாடுகளில் விழாக்கோலம்.

  ReplyDelete
 9. உலக நன்மை வேண்டித் தினம்
  உயிர்கள் உன்னை அழைக்குது
  விரைந்து வந்து நீயும் எங்கள்
  வேண்டுதலை நிறைவேற்றிடு!..

  எல்லோரையும் காக்கட்டும்
  பிரார்த்தனையுடன் ,வாழ்த்துகளுடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 10. //உயிர்களின்
  பெறுமதி உணர்ந்து அன்பு செய்வோம் .//

  அழகாய் சொன்னீர்கள் தோழி...மிக கடினமான காரியத்தை மிக எளிமையாய்..
  இன்று என் வலைப்பூவில்... மயில் அகவும் நேரம் 02 :00

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........