11/28/2011

இதையும் கொஞ்சம் பாருங்க....

ஸ்ரீ ராமர் பாதம் தொட்டு மகிழ 
சீதை தவமாய்த் தவமிருப்பாள்
அந்தப் பேதை மனதை வர்ணிக்கப் 
புவியில் வார்த்தைகள் போதவில்லை!...


வாழும்போது உண்மை அன்பை இவர்கள் 
வாழ்க்கைத் தத்துவம் எடுத்துரைக்கும் 
அந்த ராம காவியம் பார்த்தால்ப் போதும் 
ரகளை செய்யும் மனித மனமும் திருந்தும்....!!!


ஊரும் உலகும் என்ன நினைக்கும் அந்த 
நினைப்பால் விளைந்த துயரும் புரியும் 
பாவம் புண்ணியம் அனைத்தும் விளங்கும் 
இதைப் பார்ப்பவர் மனதில் நீதி நிலைக்கும்!...


காலம் செய்யும் தவறு என்ன அதையும் 
கண்டிப்பாக உணர வைக்கும் ...........
மாலைப் பொழுதின் மயக்கம் தீரும் 
மனதில் ஒருவகை ஞானம் பிறக்கும்!...


ஏழ்மை நிலையது வந்தபோதிலும் 
அவர் தம் இதயக் கோவிலில் வீற்றிருக்கும் 
சீத்தா ராமர் அன்பிற்கிணையாய்
சிருஷ்டியில் எதுவும் இருக்கவில்லை!...


இதுவே கணவன் மனைவி உறவிற்கு 
நற் கருத்தாய் என்றும் விளங்கிட 
மனிதப் பிறவி எடுத்து வந்து இங்கு 
தெய்வம் நடத்திய அரிய நாடகம்!....


அருமை இந்தக் காவியம் அகத்தில் 
அன்பை வளர்க்கும் நல் ஓவியம்!...
மறையாது நெஞ்சில் நிலைத்திருக்கும் 
மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தோன்றும்!...


எனக்குப் பிடித்தது ராம காவியமும் 
இதற்கு இணையான சிலப்பதிகாரமும் 
எதற்கும் பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள் 
எங்கள் தவறையும் நாமே உணர்வோம்!......


அந்தக் கண்ணகி சீதை இருவரையும் எந்தன் 
கண்கள் தொழ என்றும் மறந்ததில்லை 
இன்னொரு ஜென்மம் நான் எடுத்தாலும் 
இறைவா எனக்கந்த வரத்தைக் கொடு!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

20 comments:

 1. ராமர் காவியத்தின் மகிமையை கவி வடிவில் தந்தமைக்கு நன்றிகள் .

  ReplyDelete
 2. //அருமை இந்தக் காவியம் அகத்தில்
  அன்பை வளர்க்கும் நல் ஓவியம்!...//
  காவியம் போன்றே உங்கள் கவிதை வரிகளும் சகோ.

  ReplyDelete
 3. த ம - டிராஃபிக் ராங்க் மிக குறுகிய காலத்திலேயே அபார வளர்ச்சி வாழ்த்துகள்

  ReplyDelete
 4. ராமாயணம் கவியாயணம் ஆக இங்கு அருமை

  ReplyDelete
 5. //அந்த ராம காவியம் பார்த்தால்ப் போதும்
  ரகளை செய்யும் மனித மனமும் திருந்தும்....!!!//

  அற்புதம்.

  ராம காவியத்தின் சிறப்பை அழகான கவிதையில் வடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.ந்ன்றி.

  ReplyDelete
 6. தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  ReplyDelete
 7. வாழ்த்துகள்

  ReplyDelete
 8. அந்தக் கண்ணகி சீதை இருவரையும் எந்தன்
  கண்கள் தொழ என்றும் மறந்ததில்லை
  இன்னொரு ஜென்மம் நான் எடுத்தாலும்
  இறைவா எனக்கந்த வரத்தைக் கொடு

  அற்புதமான உண்மை வரிகள்.

  எனதினிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வாழ்த்தி மகிழுகிறேன்...!!!

  ReplyDelete
 10. எதற்கும் பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள்
  எங்கள் தவறையும் நாமே உணர்வோம்!......
  என்று சொன்னீர்களே..சிறப்பு..

  ReplyDelete
 11. அருமை சகோ!வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. பாடல்கள் எல்லாம் ஒரே போல இருக்கே
  அம்பாளடியாள், வேறு விதமாக முயற்சி செய்து
  பாருங்களேன்..?

  ReplyDelete
 13. எனக்குப் பிடித்தது ராம காவியமும்
  இதற்கு இணையான சிலப்பதிகாரமும்
  எதற்கும் பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள்
  எங்கள் தவறையும் நாமே உணர்வோம்!..//


  கண்டிப்பாக சகோ ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 14. நல்ல விதமாக பகிர்ந்து கொண்டிருக்கிரீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........