12/18/2013

ஆடும் மயிலே அகவும் மயிலே


ஆடும் மயிலே
அகவும் மயிலே
பாடும் குயில் நான்
அழைக்கின்றேன் .....

உன் தோகை விரித்தொரு
ஆட்டமாடிடத்
தோன்றும் அழகில்
நான் வியக்கின்றேன் ...

                             (ஆடும் மயிலே )
காடும் அழகுறும்
கவியும் அழகுறும்
சுகம் தேடும் விழிகளில்
மயிலிங்கே .......

வாடும் மனத்தின்
வாட்டம் தீர்த்திடும்
வண்ணத் தோகையின்
எழில் இங்கே ......!!
             
                                 (ஆடும் மயிலே )
குமரன் என்ற
அழகன் அமரக்
குறைகள் போக்கும்
மயிலே வா ............

மழையும் பொழியும்
கலையும் வளரும்
தமிழன் வணங்கும்
மயிலே வா .........

                                   (ஆடும் மயிலே )


                                 http://gmbat1649.blogspot.ch/2013/12/blog-post_17.html 

வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே !

இன்றைய பகிர்வானது "கவிதை எழுதலாமே"என்ற தலைப்பின் கீழ்
எங்கள் பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய பாலசுப்பிரமணியம்
ஐயா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதப்பட்டுள்ளது .
தாங்களும் இந்த அழைப்பினைப் பின் தொடர்ந்து கவிதைகள் எழுதலாம்
தங்கள் கருத்தினையும் பகிர்ந்துகொள்ளலாம் .மிக்க நன்றி உறவுகளே .
ஐயா அவர்களின் இந்த முயற்சிக்கும் அழைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ..........

                                                         
                                                                 வாழ்க தமிழ் ...
                                                     


                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

34 comments:

 1. ’ஆடும் மயிலே அகவும் மயிலே’ என்று இங்கு கவிதையில் அகவியிருக்கும் மயிலான எங்கள் அம்பாளடியாள் அவர்களின் ஆக்கம் அருமையோ அருமை.

  ஒவ்வொரு வரிகளும் மேங்கோ ஜூஸாக இனிக்குது. ;)))))

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 2. படத்திற்கிணையான அற்புதமான கவிதை
  மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 3. இசை வடிவத்தில் இன்னும் சிறப்பாய் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் கருத்திற்கும் .

   Delete
 4. ஆடும் மயிலே
  அகவும் மயிலே
  பாடும் குயில் நான்
  அழைக்கின்றேன் .....

  உன் தோகை விரித்தொரு
  ஆட்டமாடிடத்
  தோன்றும் அழகில்
  நான் வியக்கின்றேன் ...

  ரசித்தேன் மிகநன்று தொடர வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இனியா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 5. அழகு... அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. மயிலாய் எழில் கோலம் காட்டும் பாடல் அருமை..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 7. இசையயோடு பாட எழுதிய பாடல்
  திசையெல்லாம் ஏறும் சிறந்து !

  மிக அருமையான பாடல்!

  மெட்டோடு பாட இனிமை!

  ஐயாவுக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழி!

  த ம.4

  ReplyDelete
  Replies
  1. அன்பே உருவான பெரியவர் என்னிடத்தில் வந்து
   கவிதை எழுதும்படி கேட்ட போது மனதில் எழுந்த
   ஆனந்தத்தில் அருவியாகக் கொட்டிய பாடல் வரிகள்
   தான் தோழி இதுவும் .மனம் இனிக்க இனிக்கப் பாடியே
   இந்தப் பாடலை வெளியிட்டேன் .மிக்க நன்றி தோழி
   வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
  2. பாட அனுமதி கிடைத்தால்
   பாடுவேன்.

   சுப்பு தாத்தா.

   Delete
  3. பாடுங்கள் தாத்தா பாடுங்கள் தங்களின் இனிய குரலில் இந்தப்
   பாடலையும் நாம் கேட்டு ரசிப்போம் .

   Delete
  4. http://www.youtube.com/edit?video_id=jax3osCOSXc&video_referrer=watch
   subbu thatha

   Delete
 8. வணக்கம்
  அழகிய மயிலுக்கு அழகிய கவிதை அருமை வாழ்த்துக்கள்...சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிகக் நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 9. வணக்கம்
  த.ம. 5வத வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. அன்பு........ எப்படி அழைப்பதென்று தெரியவில்லை. எப்படி அழைத்தாலும் இனிக்கக் கவி எழுதும் திறன் படைத்தவர் என்று தெரிகிறது. நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா.? ஒரே மாதிரி படங்கள் எத்தனை விதமாக சிந்திக்க வைக்கிறது...! என் கவிதை அந்த சூரனைக் கேள்வி கேட்டது. ஒருவர் மயிலைத் தூது விடுகிறார். ஒருவர் இயற்கையைப் பேண வேண்டி இருப்பதை வலியுறுத்துகிறார். நீங்கள் மயிலோடு பாடி மகிழ்கிறீர்கள். இத்தனை எண்ணங்களையும் வெளிப்படுத்த வைத்த என் எண்ணத்துக்கு நானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொள்கிறேன். எனக்கெல்லாம் கவிதை எழுத ஒரு சூழ்நிலையும் என்னை பாதிக்கும் கருவும் வேண்டும் இத்தனை spontaneous ஆக எழுத முடியாது. மீண்டும் நன்றியுடன் ஜீஎம்பி.

  ReplyDelete
  Replies
  1. இனிய இந்த உள்ளத்தால் தாங்கள் வாழ்த்திய வாழ்தொன்றுக்காகவே இன்னொரு பாடலும் பாடி விட முடியும் ஐயா ! தங்களின் அன்பான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா .

   Delete
 11. அழகான கவிதை வரிகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரா !நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர்
   இன்று தங்கள் வரவினையும் பாராட்டினையும் கண்டு மகிழ்ந்தேன் .மிக்க நன்றி சகோதரா தங்கள் வருகைக்கும் பாராடிற்கும் .

   Delete
 12. மயில் பார்த்த சந்தோஷம் உங்கள் பகிர்வில்.....

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரா தங்கள் வருகைக்கும் மனமார்ந்த பாராடிற்கும் .

   Delete
 13. மயிலின் அழகுடன் போட்டிப் போடுகிறதே உங்கள் கவிதையின் அழகு!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்மா வருகைக்கும் பாராட்டிற்கும் .

   Delete
 14. இசைக்கேற்ற பாடல்! வாழ்த்து!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 15. குமரன் என்ற
  அழகன் அமரக்
  குறைகள் போக்கும்
  மயிலே வா ............

  மழையும் பொழியும்
  கலையும் வளரும்
  தமிழன் வணங்கும்
  மயிலே வா ...//
  நம் குறை அனைத்தும் போக்குவான் குமரன்.
  மயில் மீது வந்தே அந்த மால்மருகன் வரம் பல தருவான் எல்லோருக்கும்.
  வாழ்த்துக்கள் கவிதைக்கு..

  ReplyDelete

 16. வணக்கம்!

  ஆடும் மயிலழகைப் பாடும் கவிபடித்தேன்
  கூடும் இனிமை கொழித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........