12/12/2013

ரஜனிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

                                                               
                                                                         


சூப்பர் ஸ்ரார் ரஜனிக்காந்த்  அவகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! திறமைகளைக் கண்டு பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும் ஒரு தனி சுகம் இருக்கின்றது .என்னைப் பொறுத்தவரையில் ரஜினி ஒரு சிறந்த நடிகன் அவரது நடிபினில் வெளிவந்த படங்கள் பழைய புதிய படங்கள் எதுவாகினும் மிகவும் ரசித்து ரசித்துப் பார்க்கும் ரசிகை நான் .அவரது நடை உடை பாவனைகள் என்றுமே தனித்துவமானது .அவர்  நடித்து வெளிவந்த படங்களில் உள்ள பாடல்கள் அனைத்தும்  மனதில் நீங்காத இடத்தில் நிலைகொண்டிருக்கும் .சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும் இவரது நடிப்பிற்குப் பின்னால் நான் அதிகம் ரசிப்பது இவரது கடுமையான உழைப்பைத் தான் .காலத்தை நேரத்தை மதிப்பவர்களால் மட்டுமே சிகரத்தை எட்ட முடியும் .பண்பு நிறைந்த இந்த நடிகரின் பேச்சும் நடிப்பும் இறைவன் அவருக்குக் கொடுத்த வரம் என்றே சொல்லலாம் !.....

                                                                 

தென்றலைப் போலொரு பார்வையாலே
தென்மாங்கு பாடிடச் செய்பவனே உயர் 
வண்டினம் ரெண்டது கண்ணுக்குள்ளே 
வற்றாத நடிப்பு உன் நடிப்பே !!............. 

அன்றல்ல இன்றல்ல நேற்றுவரை 
அகத்தினில் குடிகொண்ட நாயகனை
என்றுமே காத்திட வேண்டுமிங்கே 
எம் சக்தி பராசக்தி  துணையாய் நின்று ...

கன்று போல் மனத்தில் இளமை பொங்க 
கற்றவர் மற்றவர் வாழ்த்துரைக்க 
வென்றிடு சுகத்தை எந்நாளுமே 
வெம் சினம் தவிர்த்த நாயகனே ....

நன்றது நாட்டிற்கும் சேவை செய்து 
நற் பெரும் பேறுகள் பெற்று விடு 
உன் குடி தழைக்கும் அது போதுமே 
உயரிய பண்புள்ள நாயகனே ...........

மண்ணது போற்ற மலையெனவே 
மருவிடும் துயர்கள் சிதைந்திடுமே
இன்னலைத் துடைத்து மென்மேலும் 
இதயத்தில் குடிகொள்வாய் இனியவனே ..

பன்னெடுங் காலம் மண்மீது 
படம் பல நடித்து நீ வாழியவே ..........
வெண் திரை ஏற்ற உயர் நட்சத்திரம் உன்னிடம் 
வெற்றிக் கனிகள் வந்து கொட்டட்டுமே ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7 comments:

 1. பணிவு எனும் மிகச் சிறந்த பண்பிற்கு வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 2. காலத்தை நேரத்தை மதிப்பவர்களால் மட்டுமே சிகரத்தை எட்ட முடியும்

  ஆம்.

  சூப்பர் ஸ்டார் ரஜினியைப்போல + கவிதாயினி அம்பாளடியாள் போல.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. கவிதை அருமை.
  "//திறமைகளைக் கண்டு பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும் ஒரு தனி சுகம் இருக்கின்றது //"
  - முற்றிலும் உண்மை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ரஜினியின் பண்புகளில் அடக்கம் மிகவும் அவரை உயர்த்தி வைத்தது! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. ரஜினிக்கு கவிமாலை அற்புதம் பெயருக்கேற்றவாறு அவர் காந்தம்தான்

  ReplyDelete
 6. ரஜினி தி மாஸ்!!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........