12/26/2013

வானகமும் வையகமும் செழித்திடவே


வானகமும் வையகமும் செழித்திடவே
வாழ்வினிலே இன்ப நிலை கொழித்திடவே 
கானகத்தில் தொழுவமதில் இஜேசு பிறந்தான்
காற்றினிலும் ஒளிக்கீற்றினிலும் தவழ்ந்து திரிந்தான் !

பாசமலர்க் கிளைகளெல்லாம் பரந்து விரிய
பாவப் பட்ட உயிர்களெல்லாம் மகிழ்ந்து சிரிக்க
காசினியில் தேவ தூதன் கண்ணைத் திறந்தான்
காதல் மலர்கள் மலர்ந்திடவே  மண்ணைக் கவர்ந்தான் ...

இனிப் பேசும் வர்த்தை அத்தனையும் இஜேசு நாமமே எங்கள்
இல்லமெங்கும் ஒளிரும் தீபம் உண்மை பேசுமே ...........
ஆசையோடு அவனுருவைக் கண்டு மகிழ்ந்தவர்
ஆனந்தமாய் ஆடிப் பாடிக் கொண்டாடித் திரிந்தனர் ..

ஆடு மாடு சுற்றி வந்து அன்பைப் பொழியவும்
ஆயர் பாடிக் கண்ணனைப்போல் அகத்தில் நிறைந்தவன்
வேறுபாடு களைந்து உயர் பக்தி பொங்கிட
வேதனைகள் தீர்க்கும் சிவன் போல தோன்றினான் !!

மாயவலை கிழித்துலகில் மனிதம் வென்றிட
மாசு மறையற்ற ஜோதி உன்னைத் தொழுகிறோம்
நேசக் கரம் நீட்டி எங்கள் குறைகள் தீர்த்திடு
நேர்வழியைக் காட்டி மன நிறைவைக் கூட்டிடு ....தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

 1. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! அழகிய கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வானகமும் வையகமும் செழித்திடவே எங்கள் கவிதாயினி ஓர் அழகிய கவிதை படைத்து இருக்கிறா. எல்லோரும் படியுங்கோ. மேங்கோ ஜூஸ் போல இனிமையாக இருக்குமாக்கும். ;)

  ReplyDelete
 3. மாயவலை கிழித்துலகில் மனிதம் வென்றிட
  மாசு மறையற்ற ஜோதி உன்னைத் தொழுகிறோம்
  >>
  எம்மதமானால் என்ன!?மனிதனை நல்வழிப்படுத்தினால் போதும்தானே அக்கா!?

  ReplyDelete
 4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  த.ம.3

  ReplyDelete
 5. வானகமும் வையகமும் செழிக்கட்டும்!..
  வாழ்வினிலே இன்ப நிலை கொழிக்கட்டும்!..

  - அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. தாமதமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. ''கண்ணனைப்போல் அகத்தில் நிறைந்தவன்
  வேறுபாடு களைந்து உயர் பக்தி பொங்கிட
  வேதனைகள் தீர்க்கும் சிவன் போல தோன்றினான்'' கண்ணனையும் சிவனையும் இணைத்தது அருமை. இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. மாயவலை கிழித்துலகில் மனிதம் வென்றிட
  மாசு மறையற்ற ஜோதி உன்னைத் தொழுகிறோம்
  நேசக் கரம் நீட்டி எங்கள் குறைகள் தீர்த்திடு
  நேர்வழியைக் காட்டி மன நிறைவைக் கூட்டிடு ....

  ஆஹா அருமை தோழி அருமை.....!

  இயேசு நேசமானவர்
  நெஞ்சுருக வேண்டிடவே
  நிறைவாக நல்கிடுவார்
  நீ கேட்டதெல்லாம் நெஞ்சினிக்க

  நன்றி ...! வாழ்த்துக்கள் .....!
  அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் தோழி....!

  ReplyDelete
 9. அருமையான கவிதை.

  அனைவருக்கும் தாமதமான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........