1/17/2014

சாதி மத பேதமின்றி சங்கடங்கள் துலைத்து ஒரு


சாதி மத பேதமின்றி
சங்கடங்கள் துலைத்து ஒரு
நீதி நெறியான வாழ்வு
மலர வேண்டும் ...........

ஆதி சிவ சங்கரனே
அன்பிலுருவானவனே
பாவிகளின் மனம்
குளிர வேண்டும் .......

ஓசை ஒலி யானவனே
ஒளிரும் சுடரானவனே
ஆசை தரும் துயர் அனைத்தும்
அழிய வேண்டும் .........

வாச மலர்ப்  பொய்கையிலே
வந்து போகும் தென்றலைப் போல்
நேசம் நிறைந்த நெஞ்சினில்
நீ வேண்டும் .....


பேசுகின்ற வார்த்தைகளில் 
பெருமை சேர்க்க வேண்டும்..
பெண்மையிலும் மென்மையான
உண்மை செழிக்க வேண்டும் ....

பாசம் ஒன்றே வாழ்வனைத்திலும்
பற்றி நிற்க வேண்டும் .....
பதுமையான குணனலத்தால் மனம்
முதுமை காண வேண்டும்  ...........

தேசம் நலன் பெற வேண்டும்
தென்றல் சுகப் பட வேண்டும்
மாசம் மார்கழி மாசம்
மழை போல் உன்னருள் வேண்டும் ...

வா வா இறைவா எம்முன்னே ..
வணங்கும் மனக் கண் முன்னே
தா... தா... உன்றன் அன்பைத் தா ...
தரமாய் வாழ்க்கை செழித்திடவே ..

                                           ( சாதி மத பேதமின்றி )
 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

14 comments:

 1. அருமையான இறைவன் அருளை தேடும் பாடல். நன்றி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வணக்கம்
  கவிதையின் வரிகள் சிறப்பு.... வாழ்த்துக்கள்.... அம்மா.
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. //மழை போல் உன்னருள் வேண்டும்..//

  அருமை சகோ!!

  ReplyDelete
 4. //பெண்மையிலும் மென்மையான
  உண்மை செழிக்க வேண்டும் ..//

  அருமை. 20.01.2014 நள்ளிரவு மேங்கோ ஜூஸ் நிச்சயமாக உண்டு. பருகிட தங்கள் குழந்தையுடன் வாருங்கள். பிறகு நாம் ஒருவரையொருவர் வலையுலகில் சந்திக்க பல நாட்கள் ஆகலாம் அல்லவா ! அன்புடன் VGK

  ReplyDelete
 5. அனைத்து 'வேண்டும்' அருமை அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. // சாதி மத பேதமின்றி
  சங்கடங்கள் துலைத்து ஒரு
  நீதி நெறியான வாழ்வு
  மலர வேண்டும் ........... //

  தங்கள் கனவு மெய்ப்பட வேண்டும்.

  ReplyDelete
 7. வா வா இறைவா எம்முன்னே ..
  வணங்கும் மனக் கண் முன்னே
  தா... தா... உன்றன் அன்பைத் தா ...
  தரமாய் வாழ்க்கை செழித்திடவே ..
  அருமையான பக்தி பரவசம் ஊட்டும் பாடல் மனம் உருகி பாடினேன்.
  இப்படி அழைத்தால் எப்படி வராமல் இருப்பார் வருவார் அருள் தருவார்
  மிக்க நன்றி தோழி....! தொடர வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 8. பேசுகின்ற வார்த்தைகளில்
  பெருமை சேர்க்க வேண்டும்..
  பெண்மையிலும் மென்மையான
  உண்மை செழிக்க வேண்டும் ....

  வேண்டும் வரங்கள் கிடைத்திட வாழ்த்துகள்..!

  ReplyDelete
 9. வா வா இறைவா எம்முன்னே ..
  வணங்கும் மனக் கண் முன்னே
  தா... தா... உன்றன் அன்பைத் தா ...
  தரமாய் வாழ்க்கை செழித்திடவே .//
  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. அழகிய கவிதை.. எல்லா வளங்களும் பெருகட்டும்!..

  ReplyDelete
 11. பேசுகின்ற வார்த்தைகளில்
  பெருமை சேர்க்க வேண்டும்..
  பெண்மையிலும் மென்மையான
  உண்மை செழிக்க வேண்டும் ....

  பாசம் ஒன்றே வாழ்வனைத்திலும்
  பற்றி நிற்க வேண்டும் .....
  பதுமையான குணனலத்தால் மனம்
  முதுமை காண வேண்டும் ...........
  // அருமையான கருத்துக்கள்! சிறப்பான கவிதை! நன்றி!

  ReplyDelete
 12. சிறப்பான வேண்டுகோள்....

  பாராட்டுகள்.

  ReplyDelete
 13. அனைவருக்கும் நல்வாழ்வு மலரட்டும்.. வாழ்த்துக்கள்!!.

  ReplyDelete
 14. வேண்டுதல்கள் எல்லாம் விரைந்துவரும்

  அழகிய கவிதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........