12/14/2012

முற்றுப் புள்ளியே ......



முற்றுப் புள்ளியே!- அடி
முற்றுப் புள்ளியே உன்னை 
முத்தமிட்ட குற்றத்துக்கு 
இந்தக் கதியா?

கட்டில் சுகமும் இனி 
மெத்தக் கசக்கும் நீ 
கற்றுத் தந்த பாடம் அது 
நெஞ்சில்க்  கிடக்கு 

                  (முற்றுப் புள்ளியே..)

விட்டில்ப் பூச்சி போல் 
உன்னைச் சுற்றி வந்தேனே 
நீயும் வெக்கப் பட்டு நிற்பது போல் 
என்னைச்  சுட்டெரித்தாயே!

உன் பட்டு உடல் மேல் 
என்றும் மோகம் இல்லடி என்
அன்பைப் பட்டியல் இட்டால் 
இங்கு யாவும் பொய்யடி...

கற்றுத் தரவா? நீ என் உயிர்க் 
காதல் தீபம் அல்லவா!
உன்னை விட்டுப் பிரிந்தால் 
இங்கு வாழ்க்கை ஏதடி!

வெண்ணிலவே  உன் நினைவில்  
நானிருக்கும் போதினிலே 
பொன் பொருளை நாடவில்லை
உன் அன்பை மட்டும் தேடுகின்றேன்

பெண்ணே பெண்ணே அடி
பெண்ணே பெண்ணே !....
பெண்ணே பெண்ணே அடி
பெண்ணே பெண்ணே !...........

மண்ணுக்குள்ளே போகும் முன்பே 
என்னைக் காண வா வா ...
                                (முற்றுப் புள்ளியே..)                     


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

  1. அருமை அருமை
    மௌன ராகம் மோகன் கதாபாத்திர நிலையை
    அப்படியே உணர்த்திப் போகும்
    அருமையான கவிதை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தங்களின் முதல் வரவும் வாழ்த்தும் கண்டு
      மனம் மகிழ்கின்றேன் ......

      Delete

  2. வணக்கம்!

    பண்ணுக்குள் நான்மிதக்கப் பைந்தமிழ் தந்துவந்தீா்!
    பெண்ணுக்குள் பெற்றுயா்ந்த பேறு!

    கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !..
      செந்தமிழ்க் காவலன் உன் மனம் மகிழ்ந்திட
      என் கவிதை தந்த சுகம் பெரிதெனில் நான் என்ன புண்ணியம் செய்தனோ நெஞ்சமே !!........நன்றி நன்றி நன்றி .....ஐயா .

      Delete
  3. கவிதாயினி அம்பாளே கற்கண்டு கவிதை தந்தாளே!
    புவிதான் வியந்து போற்றட்டும் புகழ்மிக வந்து சேரட்டும்
    செவிதனில் தேனென பாயட்டும் செந்தமிழ் மேலும் சிறக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. அன்பினால் விளைந்த வாழ்த்தொலி கேட்டு என் மனம் இன்பத்தேன்
      பருகக் கண்டேன்!.......மிக்க நன்றி புலவர் ஐயா .....

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி அம்மா தங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் .

      Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........