12/29/2012

2013 ராசிப்பலன் உங்களுக்கு எப்படி


தொட்டதெல்லாம் துலங்க வேண்டும்
தூய உள்ளம் நிலைக்க வேண்டும்
பட்ட கஸ்ரம் நீங்க வேண்டும் அந்தப்
பகவான் அருள் கிட்ட வேண்டும் ........

விட்டத்திலே இருந்து செல்வம்
விடிய விடியக் கொட்ட வேண்டும்
ஸ்ரத்துக்கு நீங்க எல்லாம்
இனிய வாழ்வு வாழ வேண்டும்

அன்பு எங்கும் நிலைக்க வேண்டும்
அடிமைத்தனம் அகல வேண்டும்
ஆயுள் பலம் பெருக வேண்டும்
மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்

நொந்த உள்ளம் சிரிக்க வேண்டும்
நோய் நொடிகள்  அகல வேண்டும்
பாலை வானத்திலும் பூ பூக்க வேண்டும்
பசுமையான உலகம் மலர வேண்டும்

சொந்த பந்தம் இணைய வேண்டும்
சோகங்களை மறக்க வேண்டும்
சண்டை எங்கும் ஒழிய வேண்டும்
சமத்துவம் எதிலும் நிலைக்க வேண்டும்

பக்தி மிகையாய் இருக்க வேண்டும்
பாரினில் நீதி தழைக்க வேண்டும்
அறிவு திடமாய் இருக்க வேண்டும்
பேராற்றலால் வெற்றி நிட்சயம் கிட்ட வேண்டும்....

இத்தனையும் எனது ஆசை இதற்கு  மேலும்
நல்லது நடந்தால் சொல்லுங்கள் உறவுகளே !.....:))))

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

14 comments:

 1. என்னல்லாம் நடக்கணும்னு நீதான் சரியா சொல்லிட்டியே. இதுக்கும் மேல என்ன சொல்ல?

  ReplyDelete
  Replies
  1. வாங்க லக்ஸ்மி அம்மா முதல் ஆளா நீங்க வந்திருப்பதே பாதி
   செல்வம் கிடைத்ததற்கு சரி!... காரணம் உங்க பெயர்கூட லக்ஸ்மி தானே :)

   Delete
 2. இத்தனையும் எனது ஆசை இதற்கு மேலும்
  நல்லது நடந்தால் சொல்லுங்கள் உறவுகளே !.....:))))

  இது போதும் அம்பா!

  ReplyDelete
 3. எண்ணியதெல்லாம் ஈடேற இறைவன் அருள் புரியட்டும். ஆண்டு முழுதும் மகிழ்ச்சியும் செல்வமும் நிறையட்டும்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்மா ...உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

   Delete
 4. பக்தி மிகையாய் இருக்க வேண்டும்
  பாரினில் நீதி தழைக்க வேண்டும்
  அறிவு திடமாய் இருக்க வேண்டும்
  பேராற்றலால் வெற்றி நிட்சயம் கிட்ட வேண்டும்....

  அழகான படம் .. அருமையான பிரார்த்தனை ..!

  மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி ...உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

   Delete
 5. நிறைய வேண்டுதல்கள்! நிறைவேற்றட்டும் புத்தாண்டு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ .

   Delete
 6. உங்கள் வேண்டுதல் நிறைவேற எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ .

   Delete
  2. உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
   அப்படியே ஒரு எட்டு என்னோட வீட்டுக்கும் வந்துட்டுப் போங்கோ.

   http://manammanamviisum.blogspot.in/
   மிக்க நன்றி.

   Delete
  3. உங்கள் வேண்டுதல்கள் எல்லாமே நிறைவாக இருக்கும்போது, நிச்சயம் நிறைவேறும்.

   Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........