1/04/2013

என் தாய் பிறந்த நன்நாளிது !....


அன்பு செய்ய அன்னை வேண்டும்
எம்மை ஆதரிக்க அன்னை வேண்டும்
துன்பம் போக்க அன்னை வேண்டும்
மனம் தூய்மை பெறவும் அன்னை வேண்டும்!....

தன்னிறைவைக் கொடுப்பவள் தாய்
தரமாய் எம்மை வளர்ப்பவள் தாய்
இன்பம் தந்து மகிழ்பவள் தாய் அந்த
இறைவனையும் படைத்தவள் தாய் !...

கண்ணுறங்க நான் மறந்தேன் உன்னால் 
கனவினிலே தினம் மிதந்தேன் ...........
இன்னும் நூறு ஜென்மம் தொடரினும் 
உனக்கென நான் இங்கு காத்திருப்பேன்...

வெண்ணிலவை சாட்சி வைத்து
விடியும் அந்தப் பொழுதினிலே
உன்னருகில் நான் இருப்பேன்
என் உணர்வுகளை அன்று நீ அறிவாய் ......

நான் செய்ததொரு தவறும் இல்லை
இந்தச் சீரழிந்த உலகினிலே .............
மீண்டும் உன் மடியில் நான் உறங்க
வரம் ஒன்று தந்து இங்கே வாழ்த்து தாயே !!!!!....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

14 comments:

 1. அன்னைக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்களும் சகோதரி...

  ReplyDelete
 2. கவிதாயினியைத் தந்த அன்புத் தாய்
  பல்லாண்டு சீரோடும் சிறப்போடும் வாழ
  அன்னை மீனாட்சியை வேண்டிக்கொள்கிறேன்

  ReplyDelete

 3. வணக்கம்!

  அன்னை அவா்களுக்கு
  அடியவனின் அன்பு வாழ்த்துக்கள்!

  தாய்மடியில் தவழ்ந்தாட வேண்டும் என்று
  தந்த..கவி கண்ணுற்றேன்! மகிழ்ச்சி பொங்கச்
  சேய்மடியில் சிரிப்பதுபோல் உன்றன் பாட்டுச்
  சீா்மடியில் செழித்தாடும்! புளிப்பை நல்கும்
  காய்மடியில் நம்வாழ்வு கலக்கா வண்ணம்
  கனிமடியில் நமைஅமா்த்தி மகிழ்ந்த தெய்வம்!
  வாய்மடியில் சுரக்கின்ற சொற்கள் யாவும்
  மாதாவின் கால்பட்ட மண்ணுக் கீடோ?

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு

  ReplyDelete
 4. அன்னைக்கு வாழ்த்து சொல்ல வயதில்லை. வணங்குகிறேன் தாயே. ஆசிர்வதிப்பாயாக,.

  ReplyDelete
 5. என் அன்னையையும் நான் இப்படித்தான் அழைத்துக்கொண்டிருக்கிறேன். தங்கள் அன்னைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 6. உங்கள் அன்னைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 7. வாழ்த்துக் கவிதை அருமை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 8. அன்னையே வாழ்த்துக்கள் ! அழகு கவிதை படைத்த சகோதரிக்கும் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 9. எனதன்புக்கினிய உறவுகளே தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
  மிக்க நன்றி !!........

  ReplyDelete
 10. அன்னையின் அன்புக்கு கவிதை மலர்களல் உங்களன்பை சமர்ப்பனம் செய்திருக்கிறீர்கள்! மிக மிக‌ அருமை!!

  ReplyDelete
  Replies
  1. பரிசுத்தமான மனக் கண்களால் கண்டு உணர்ந்து எழுதப்பட்ட கருது
   இதுவும் அருமை தான் அம்மா !...மிக்க நன்றி அம்மா வரவுக்கும் இனிய கருத்துக்கும்

   Delete
 11. மீண்டும் உன் மடியில் நான் உறங்க
  வரம் ஒன்று தந்து இங்கே வாழ்த்து தாயே !!!!!..

  இனிய வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. அன்பு கலந்த தங்கள் இனிய வாழ்த்திற்கு மிக்க நன்றி சகோதரி .
   உங்கள் வாழ்த்து இவ்வுலகம் உள்ளவரைத் தொடரட்டும் !...

   Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........