1/13/2013

பொங்கலோ பொங்கல் !!.........


பக்திப் பரவசத்தோடு என்றும்
அன்பும் அறனும் கலந்து
இன்பம் என்ற சொல் அது எல்லோர்
இதயம் அதிலும் பொங்கட்டும் !

முத்திக் கனிந்த கனி போல் சுவை
முன்னேறும் வாழ்வில் நிலைத்திடவே
எத்திக்கிலும் இருந்து நன்மைகள்
இடர்கள் களைந்து  பொங்கட்டும்!

தத்தித் தவழ்ந்து தவழ்ந்து மனிதன்
தரையில் நடந்து திரிந்து இதுவரைப்
பட்ட  துயர் நீங்கிடவே  உலகில்
இனிதே பாலும் தேனும் பொங்கட்டும்!

சுற்றம் நன்மை பெற்றிடவும் ஏங்கும்
உயிர்கள் சுகமாய்  வாழ்ந்திடவும்
குற்றம் குறைகள் நீங்கி நல்ல
குதூகலமான நாட்கள் பொங்கட்டும்!

பெற்ற தாயைப் போலென்றும்
போற்றும் எம் தேசம் அதில் எந்நாளும்
சத்தம் சலனம்  இன்றி மிகு
சமத்துவம் பேணும் நிலை பொங்கட்டும்!

கற்றுக் கொடுத்த நன் நெறியில்
எம் காலம் முழுவதும் வாழ்ந்திடவே
ஒற்றுமை என்பது குறைவின்றி
ஒளிபோல் எங்கும் பொங்கட்டும்!


பொங்கும் செல்வம் பொங்கட்டும்!
புவிமேல் இன்பம்  பொங்கட்டும்!
எங்கும் மங்களம் பொங்கட்டும்!
எதிலும் கருணை பொங்கட்டும்!

வாழ்வில் சாந்தம் பொங்கட்டும்!
வளமார் வாழ்வு இனிக்கப் பொங்கட்டும்!
வேண்டும் சுகமது பொங்கட்டும்
விழிகளில் ஆனந்தம் பொங்கட்டும்!
தேனும் பாலும் கலந்து நல்ல 
இனிய பொங்கல் திருநாள் நல் 
வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே!!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

23 comments:

 1. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கள் திரு நாள் நல் வாழ்த்துக்கள். கவிதை நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வரவுக்கும் இனிய வாழ்த்திற்கும் !...உங்களுக்கும்
   என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ......

   Delete
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வரவுக்கும் இனிய வாழ்த்திற்கும் !...உங்களுக்கும்
   என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ......

   Delete
 3. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வரவுக்கும் இனிய வாழ்த்திற்கும் !...உங்களுக்கும்
   என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ......

   Delete
 4. அருமையான கவிதை.

  உங்களுக்கும் உங்களின் இல்லத்தார்
  அனைவருக்கும் என் இதயங்கனிந்த பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் இனிய வாழ்த்திற்கும் !..
   உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ......

   Delete
 5. ஒற்றுமை என்பது குறைவின்றி
  ஒளிபோல் எங்கும் பொங்கட்டும்!!.....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் இனிய வாழ்த்திற்கும் !..
   உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ......

   Delete
 6. உங்களுக்கும் உங்களின் இல்லத்தார்
  அனைவருக்கும் என் இதயங்கனிந்த பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா தங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்!..
   இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
   இந்த நல்லாசியை வழங்கப் பிரார்த்திக்கின்றேன் .......

   Delete
 7. பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா தங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்!..
   இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
   இந்த நல்லாசியை வழங்கப் பிரார்த்திக்கின்றேன் .......

   Delete
 8. இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .கவிதை சிறப்பு!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பாராட்டிற்கும் என் நன்றிகள் ஐயா .

   Delete
 9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
  நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ .உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
   உரித்தாகட்டும் !.....

   Delete
 10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி அன்போடு தாங்கள் வாழ்த்திய இவ்
   வாழ்த்துக் கண்டு மனம் மகிழ்ந்தேன் !..........உங்களுக்கும்
   உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என்
   இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ......

   Delete
 11. தங்களுக்கும், குடும்பத்தில் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரி .உங்களுக்கும் உங்கள் உறவினர்கள்
   நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு
   வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !......

   Delete
 12. தங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.com/

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........