1/17/2013

உன் பெயரதை எழுதி வைத்தேன் ...


உன் பெயரதை எழுதி வைத்தேன்
எவரும் அறியாமல் நான்
உனக்காகக் காத்திருந்தேன்
எதுவும் புரியாமல்

விண் தாண்டிச் சென்றாயோ!
வெண்ணிலவாய்த் தேய்ந்தாயோ!
பெண்ணே உன் ஞாபகங்கள்
என் நெஞ்சைக் கொல்கிறதே!
                                           
ஊமத்தம் பூக்கள் என்னை
உரசித்தான் பார்க்கிறதே!
நீ தொட்ட மேனி தொட்டு
புது உறவொன்றைக் கேட்கிறதே!

யாருக்குப் புரியும் அம்மா என்
ஜாதகத்தில் உள்ளதெல்லாம்!
வேர் அற்ற மரம் போல்
நானும்தான் வாடுகின்றேன்

நீதிக்குப் பின் பாசம் என்றாய்
நீ இன்றி நானா சொல்லு?
என்னை சோதிக்கும் மலரே உன்றன்
வாசத்தை ஏன் விட்டு சென்றாய்!

சோகத்தில் தள்ளாடினேன்
என் சொந்தம் அது நீயல்லவோ
ஆனந்தக் கூத்தாடி வா அன்பே
ஆருயிர் போகும்  முன்பே!

விதியோடு போராடி
என்னைச் சேர வா ............
வெண்ணிலவே நீ இல்லாது
இந்த வானம் தாங்குமா?

விழி நீரால் கோலம் இங்கே
உனக்காக நான் போடுறேன்
எனக்காக யாரும் இன்றி
என் சீவன் வாடுதிங்கே.....

                                     ( உன் பெயரதை )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5 comments:

  1. உருக்கமான கவிதை.

    ReplyDelete
  2. மனதை உருக்கியது கவிதை

    ReplyDelete
  3. அன்புடையீர் வணக்கம்! இன்றைக்கு “ வலைப்பதிவில் அகத்திணைக் கவிதைகள் “ என்ற எனது பதிவினில் தங்களது இந்த கவிதையை மேற்கோளாகக் காட்டி இருக்கிறேன். நன்றி.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........