1/20/2013

கண்ணைக் கட்டிக் காட்டுக்குள்ளே விட்டதாரோ!....கண்ணைக் கட்டிக்
காட்டுக்குள்ளே விட்டதாரோ!
ஏழை இவள்  எண்ணங்களை
ஒன்னொன்னாகச் சுட்டதாரோ!

உன் பெயரைச் சொல்லும் போது
உள்ளம் அழுதே!- இந்த
உள்ளத்திலே உள்ளதெல்லாம்
ஊமை நெஞ்சைக் கொல்லுதே!

மண்ணுக்குள்ளே போகும் போதும்
உன்னை நினைப்பேன் என்றும்
தன்னந் தனிமையில் நின்று நானும்
வாழ்வை  வென்று காட்டுவேன்!

பெண்ணுக்குள்ள வீரம் அதை
என்னென்று நினைத்தாய்!
இந்தப் பூவுக்குள்ளும் சோகம்
அதை ஏனோ விதைத்தாய்?

அன்னமிட்ட கைகளுக்கு வந்த விலங்கு
இது உள்ளவரை உள்ளத்திலே ஏது சிரிப்பு?..
புன்னகையை உன்னுறவால் நானும் துறந்தேன்
இந்தப் புத்தி கெட்ட சீவனுக்குப்  போதும் இதுவே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3 comments:

 1. இந்தப் பூவுக்குள்ளும் சோகம்
  அதை ஏனோ விதைத்தாய் !.//

  மிக மிக அருமையான வரிகள்
  மனம் தொட்ட கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. கண்ணீர் வரவைக்கிறது கவிதை...!

  ReplyDelete
 3. அருமையான கவிதை! இந்த பூவுக்குள் சோகம்! அதை ஏன் விதைத்தாய்? வரிகள் ரசிக்க வைத்தன!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........