6/30/2015

வாழிய வாழிய பல்லாண்டு !

                                               


வண்ணத் தமிழமுதை வார்த்துக் கொடுக்குமுனை  
எண்ணம்போல் பாடவந்தோம்  இன்றிங்கே  !-கண்ணுள்
இறையாக நாம்காணும் எம்குருவே !  உன்னால்                            
நிறைகுடம்  ஆனதெம்  வாழ்வு !

செந்தமிழ் கற்றுநாம்  சீருடன் வாழ்ந்திடவே   
வந்தனை செய்கின்ற  வள்ளலே !-கந்தன் 
அருள்பெற்று வாழிய வாழியபல் லாண்டு 
திருப்பெற்ற பாக்கள் செறிந்து !

பொன்விழா காணுபுகழ்   பாரதி தாசனே !
உன்னுயிரை  ஒண்டமிழைக் கொண்டுவந்தாய் !-இன்பக் 
கவிமழை ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தோம் !
புவிமேல் பொலியும்  புகழ்!

நல்லறம் கூறிடும் நற்றமிழ் நாயகன்  !
சொல்லறம் காத்திடும் தூயவன் !-  வல்ல 
கவிஞன் !கலைஞன் ! களிப்போடு வாழ்க !
குவியட்டும் இன்பம் கொழித்து !

நாடிக் கொடுத்திடும்  நன்மையை எண்ணியே  
தேடிநாம் வந்தோம்  செளுங்கவிகள்  !-பாடிப் 
பரவசம் ஊட்டிடும் பாட்டரசே !என்றும் 
உரம்நீயே  எங்கள் உயிர்க்கு!

                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

16 comments:

 1. அருமையான வாழ்த்துப்பா....சகோ....
  தம 1

  ReplyDelete
 2. சிறப்பிற்கு சிறப்பு சேர்த்து விட்டீர்கள் அம்மா... வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. பொன் விழா காணும் ஆசானுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. தங்களுக்கும், பொன்விழா காணும் தங்கள் ஆசிரியர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களுக்கும் என் நல்வாழ்த்துகள்.

  வாழ்த்துமடல் அருமையாக உள்ளது. அதற்கும் என் பாராட்டுகள்.

  ReplyDelete
 5. அருமை. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. பொன் விழாக் காணும் அறிஞருக்கு
  எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. இருவருக்கும என் வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. வணக்கம்
  அம்மா

  பைந்தமிழ் செல்வன் பார் பேற்றும் பவனியிலே.
  பொன் விழா அகவையில் கற்றோர் உள்ளம்
  செந்தமிழ் பாவினால் வாழ்த்து-மழை.
  சிகரம் கொட்ட..
  ஆழியின் நீரை யாவரும் அள்ளுவது போல.
  தமிழ் என்னும் ஆழியின் உறைவிடம். எம் ஆசான் .

  எம் ஆசானுக்கு எனது அன்புகனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.. த.ம 7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. வணக்கம் சகோ !

  அருமையான வாழ்த்துப் பாக்கள் இன்று பிறந்தநாள் காணும் ஐயா பாரதிசாசனுக்கும் வாழ்த்திய உங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  தமிழ்மணம் கூடுதல் ஒன்று

  ReplyDelete
 10. விழாக்காணும் ஆசிரியருக்கும், பகிர்ந்துகொண்ட மாணவிக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. பொன் விழா காணும் ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள் !அருமையான வாழ்த்துக் கவி! நன்றி !

  ReplyDelete
 12. பொன்விழா காணும் ஆசானுக்கு என் வணக்கங்களும்.. தங்களுக்கு என் வாழ்த்தும் தோழி.
  வெண்பா சிறப்பு.

  ReplyDelete
 13. வாழ்த்துப்பா அருமை சகோதரி! ஆசிரியர் அவர்களுக்கு வணக்கங்கள்!

  ReplyDelete
 14. அருமையான வாழ்த்து...
  பொன்விழா காணும் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 15. வணக்கம்!

  எல்லா அடிகளும் இன்பம் அளித்தனவே!
  சொல்லா இவைகள்? சுவைக்கூட்டு! - பல்லாண்டு
  வாழி! வளர்தமிழ் மாண்பேந்தி நல்லம்பாள்
  தோழி தொடர்கவே தொண்டு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........