8/12/2021
7/03/2021
Aavaram poo onnu l Senthil Dass l Elakkiyan l Lyric l Ambaladiyal santh...
இனிய காலை வணக்கம் அன்பு உள்ளங்களே!
ஆவாரம் பூ ஒண்ணு பாடல்
இசை .இலக்கியன்
வரிகள் உங்கள் அம்பாளடியாள்
பாடியவர் செந்தில் தாஸ்
Eezha thamil manasu album songs
Aavaram poo onnu
Published on 28.07.2018
Music: Elakkiyan
Singer: Senthil Dass
Lyrics : Ambaladiyal (santharupi)
Recorded and mixed by Sundar Raj
Edition Recoding Chennai
Actors:Mugil Arasan , Tehja
Camara & Direction : Gowtham Kumar
Asst DIR : Prabhu
Asst CAM: Akash
Producer: A.E.S.Sabes
அன்பு உள்ளங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி! வாழ்க தமிழ்!
6/23/2021
Annai Mozhi Azhakai / Ambaladiyal /Angelin Vatsala / Sengai Mu Vijai /Ta...
வணக்கம் அன்பு உள்ளங்களே!
இன்தமிழுக்குப் பெருமை சேர்க்கும் முகமாக இப்
பாடலை இங்கே சமர்பித்துள்ளேன் தங்களின் ஒத்துழைப்போடு
வெற்றிநடை போட மென்மேலும் வாழ்த்துக்களை வழங்குவதோடு
கருத்துரைகளையும் விருப்ப வாக்குகளையும் இட்டு முடிந்தவரை
எம்முடைய வளர்ச்சிக்குத் துணை நிற்குமாறு அன்பு உள்ளங்களிடம்
உரிமையோடும் பேரன்போடும் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி! வாழ்க தமிழ்!
பாடல் அன்னை மொழியழகை
பாடல் வரிகள் : அம்பாளடியாள் சாந்தரூபி
இசை சேங்கை மூ விஜய்
பாடகர் ஏஞ்சலின் வத்சலா
நடனம் கரினி
படப்பிடிப்பு மிராக்கல் சுதாகர்
Lyrics : Ambaladiyal Santharupi
Singer : Angelin Vatsala
Music : Sengai Mu Vijai
Dancers : D.Kalki
A. Karini
Direction : Miracle Sudhagar
6/01/2021
5/09/2021
Athi poo Manam Manakka / Gana Sudhagar/Music Elakkiyan/Lyrics Ambaladiyal
இனிய அன்னையர்தின வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களே!
பாடல் கேளுங்கள் மகிழுங்கள் பகிருங்கள் வாழ்க தமிழ்!
வாழ்க மேன்மக்கள்!
பாடல் வரிகள் உங்கள் அம்பாளடியாள்
பாடியவர் கானா சுதாகர்
இசை இலக்கியன்
பாடல் படப் பிடிப்பு மிராக்கல் சுதாகர்
இளைய தலைமுறையினரின் துள்ளல் இசையோடு
தங்கள் உள்ளங்களை மகிழவைக்க இல்லம்தோறும்
மலரட்டும் இந்த அத்திப்பூ மணம் மணக்க பாடல்!
நன்றி அன்பு உள்ளங்களே!
1/29/2021
kaasukku paasamundu songs /music EIakkiyan / singar Chellankuppam subra...
இனிய காலை வணக்கம் அன்பு உள்ளங்களே!
காசுக்குப் பாசமுண்டு பாடல்
இசை இலக்கியன்
பாடியவர் செல்லங்குப்பம் சுப்பிரமணி
பாடல் வரிகள் .அம்பாளடியாள் சாந்தரூபி
நன்றி!
வாழ்க தமிழ்!
Eezha thamil manasu album songs
Lyrichs : Ambaladiyal (Santharupi)
music: Elakkiyan
singer: Chellankuppam Subramani
Recorded and mixed by -Sundar Raj
Edition recording Chennai
producer Ambaladiyal Santharupi
1/25/2021
1/05/2021
tamil sad songs/ Anuradha Sriram/ music Elakkiyan/ lyrichs Ambaladiyal s...
இனிய காலை வணக்கம் அன்பு உள்ளங்களே!
ஆழ்கடல் தனிலே அந்த அவலையின் குரலைக் கேட்டேன்
பாடல் வரிகள் .கவிஞர் .அம்பாளடியாள் சாந்தரூபி
பாடியவர் .அனுராதா ஸ்ரீராம்
இசை .இலக்கியன்
Recorded and mixed by -sundar Raj
Edition recording Chennai
தாங்கள் வழங்கும் ஆதரவே என் இலக்கின் எல்லை
அன்பு உள்ளங்களே! நன்றி! வாழ்க தமிழ்!
12/22/2020
வண்ணம் கொஞ்சும் தாய்நாடே / singer,surmukhi /music Elakkiyan/lyrichs.Amba...
12/21/2020
murugan devotional tamil songs / முத்துப்பரல் ஒத்துக் குனுகிட
இனிய காலை வணக்கம் அன்பு உள்ளங்களே!
தொடரும் கொரோனாத் தொற்று நோயால் பாதிக்கப்படும் மக்கள் விரைவில் இத் துன்பத்தில் இருந்து இறையருளால் விடுபட வேண்டும் எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ வேண்டும் என்று இறைவனை மன்றாடி வேண்டிக் கேட்டுக்கொண்டு இப்பாடலை இங்கே சமர்பித்துள்ளேன் .அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! பாடலைக் கேளுங்கள் பிரார்த்தியுங்கள் தங்கள் பிராத்தனையால் நன்மை நிகழட்டும்.எல்லோரும் இந்தத் தருணத்தில் மிகுந்த அவதானமாக நடந்துகொள்ளுங்கள்
இன்றும் என்றும் என் எண்ணத்தில் குடியிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு எக் குறையும் நேராமல் இருக்க எங்கோ ஓர் மூலையில் தங்களுக்காக என் மனமும் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டேதான் இருக்கும்.நன்றி அன்பு உள்ளங்களே! வாழ்க தமிழ்! வாழ்க நன் மக்கள்!
கந்தா குகனே கதிர்வேலா
முத்துப்பரல் ஒத்துக் குனுகிட
பாடல் வரிகள் .கவிஞர் .அம்பாளடியாள் சாந்தரூபி
இசை .சேங்கை .மு .விஜய்
பாடகி .வத்சலா தேவி
தயாரிப்பு வெளியீடு அம்பாளடியாள் சாந்தரூபி
(குயில் பாட்டு )
12/13/2020
முத்தமிழே முக்கனியே Albam song -muththamizhe mukkaniye song
வணக்கம் தோழமைகளே!
என்னுடைய இந்த அழைப்பை ஏற்று தங்களால் என்னுடைய குயில்
பாட்டு தளத்திற்குக் கைகொடுக்க முடிந்தால் தயைகூர்ந்து கை
கொடுக்க அழைக்கின்றேன். குயில் பாட்டுத் தளத்தில் தொடரும்
ஆக்கங்கள் கண்டிப்பாக இன்தமிழுக்குப் பெருமை சேர்க்கும் என்று
உறுதியாக நம்புகின்றேன் அந்த வகையில் முடிந்தவரை தங்களின்
ஆதரவை எனக்கு வழங்குமாறு பேரன்போடு வேண்டிக் கொள்கின்றேன்
நன்றி! வாழ்க தமிழ்!
subscribe செய்யுங்கள்? தங்கள் கருத்துரையை வழங்குங்கள்?
முடிந்தவரைப் பரிந்துரையுங்கள்? இன்னும் இன்னும்
தங்களை மகிழ்விக்க வருகின்றன எனது பாடல்கள் நன்றி! வாழ்க தமிழ்!
பாடல்: முத்தமிழே முக்கனியே
பாடல் வரிகள்: அம்பாளடியாள் சாந்தரூபி
இசை :இலக்கியன்
பாடியவர் :முகேஷ்
ஒளிப்பதிவாளர் :சுந்தர்ராஜ்
வாழ்க தமிழ்!🌹
12/10/2020
கந்தா குகனே கதிர்வேலா/ திருப்புகழ்/ murugan devotional song tamil |அம்பா...
இனிய காலை வணக்கம் அன்பு உள்ளங்களே!
கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மக்களைக் காக்க வேண்டி
எல்லாம் வல்ல அந்த ஆறுமுகப் பெருமானை நினைந்துருகி இப்
பாடல் பாடப்பட்டுள்ளது கந்தன் அருள் பெற்று எல்லோரும் நீடுழி வாழ
வாழ்த்துகின்றோம். வாழ்க தமிழ்! வாழ்க மக்கள்! வாழிய வாழிய வாழியவே!
பாடல் வரிகள் : பாவலர் .அம்பாளடியாள் சாந்தரூபி
இசை .சேங்கை மூ விஜய்
பாடியவர் .வத்சலாதேவி
நன்றி அன்பு உள்ளங்களே
5/06/2017
காத்திருந்த கனவுகள்!
தேவதை என் விழிதன்னில் பட்டாயடா
இன்பம் தந்தாயடா!
என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே!
எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே!
இன்பம் தந்தாயடா!
என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே!
எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே!
காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய்
கருவிழியுள் வாழுகின்ற ஒளியானாய்!
தேடலில் இவள் வாழ்வு கழியுதே!
தேவகானம் ஒன்று மட்டும் தொடருதே!
கருவிழியுள் வாழுகின்ற ஒளியானாய்!
தேடலில் இவள் வாழ்வு கழியுதே!
தேவகானம் ஒன்று மட்டும் தொடருதே!
நான் தேடும் சொர்க்கம் நீயடா!
நாணத்தை விட்டுவந்தேன் பாரடா!
குழலோசை காதில் கேட்காதோ!
குயிலென்றன் ஆசையைத் தீர்க்காதோ!
நாணத்தை விட்டுவந்தேன் பாரடா!
குழலோசை காதில் கேட்காதோ!
குயிலென்றன் ஆசையைத் தீர்க்காதோ!
உன்னைக் கண்ட நாள்முதலாய்த் தூக்கம் போனதே
இவள் நெஞ்சில் ஏக்கம் வாழுதே!
காதலுக்குப் பச்சைக்கொடி காட்டாயோ!
கன்னி மன வீணையதை மீட்டாயோ!
இவள் நெஞ்சில் ஏக்கம் வாழுதே!
காதலுக்குப் பச்சைக்கொடி காட்டாயோ!
கன்னி மன வீணையதை மீட்டாயோ!
காத்திருந்த என் கனவைப் பாரடா
பதில் ஒன்று கூறடா!
பூபாளம் இசைக்கின்ற நேரம்
இவள் நெஞ்சில் ஏனிந்தப் பாரம்!
பதில் ஒன்று கூறடா!
பூபாளம் இசைக்கின்ற நேரம்
இவள் நெஞ்சில் ஏனிந்தப் பாரம்!
நிலா முறத்திற்கு மிக்க நன்றி!
4/27/2017
சிற்பங்கள் கண் திறந்தால்!
சிற்பங்கள் கண் திறந்தால்!
------------------------------------------------------------------------------
சிற்பங்கள் கண் திறந்தால் வாழ்த்துச் சொல்லும்!
சிங்காரத் தமிழின்மேல் காதல் கொள்ளும்!
அற்பமாயை உலகினிலே யாவும்பொய்யே!
அருந்தமிழ் தந்தசுகம் ஒன்றே மெய்யாம்!
மண்தோன்றி கல்தோன்றும் முன்னாலே தோன்றினாள்!
மாமனத்துள் ஆணிவேராய் ஊன்றினாள்!
கண்டுக்கொள் கடலுக்குள் சாட்சிகள் தூங்குதே!
காணத்தான் மனமிங்கே எந்நாளும் ஏங்குதே!
முத்தமிழாள் முத்தமிட்டால் உயிர் சிலிர்க்கும்!
மூவுலகும் மனத்திரையில் கை குலுக்கும்!
சித்தமெல்லாம் சங்கீதக்காற்று வீசும்!
சிதம்பரத்தில் தெய்வத்திற்கும் பாதம் கூசும்!
இத்தரையில் எழுச்சிமிகு பரதக்கலையை
எம்இறைவன் இறைவியவள் ஆடக்கண்டால்
கொத்துக் கொத்தாய் மலர்வனங்கள் பூத்துக் குலுங்கும்!
கொடும் கோடையிலும் குளிர்காற்று கொஞ்சி மகிழும்!
செத்தாலும் என் சாம்பல் மணக்கும் தமிழாய்
செந்தூர நதியலையில் சேரத்துடிக்கும்!
வெத்துக்கள் என்னுயிரைப் பழித்தால் வெடிக்கும்
வெம்சின எரிமலைகள் அவர்கள்தம் கதையை முடிக்கும்!
4/23/2017
பூமி வறண்டிடிச்சே!
நாட்டுப்புறப் பாடல்கள்!
***************************************
பூமி வறண்டிடிச்சே
பூகம்பமும் கிளம்பிடிச்சே!
சாமி மனசுக்குள்ள
போட்ட சாபம் கேட்டதாரு!
நாத்து நட்ட குடி
நாளும் கண்ணீர் வாக்குதடி!
ஊத்து நிலம் கெட்டு
ஊரும் ஊமை ஆச்சுதடி!
குண்டு மழை பொழிஞ்சு
குடியைக் கெடுத்ததாரு!
விவசாயி குடும்பத்த
வீதியில விட்டதாரு!
அரசு மனசு வச்சா
அடி ஆத்தி மழை வருமா!
பொல்லாத சோகம் சொன்னா
போன ஜென்மம்தான் வருமா!
மாடு மட்டும் சந்தையில ஏலம் போகுது!
மானபங்க பட்ட உசிர் இங்கே ஏங்குது!
சோறு தண்ணி இல்லாம வாழ்க்கை ஏதடி!
சொந்தக் கத சோகக் கத இத
சொன்னால் கேளடி!
வெள்ளையன வெளியேறச் சொன்ன தாரடி
விருந்துக்கு அழைக்கிறான் இங்கே பாரடி!
கூறு கெட்ட அரசியல மாத்துற தாரு
கொஞ்சம் கொஞ்சமா
நெஞ்சம் வேகுதே!
பஞ்சம் தீருமா!
தீயிலிட்ட கருவாடு என்ன பாரடி!
தீந்தமிழே நீ பதில இங்கே கூறடி!
மூலிகைய குழுசையா விக்குறானடி!
மூடருக்கு அவ ஆப்பு வைக்குறானடி!
என் தாத்தா பாட்டி சொத்து
அத அள்ளுறான்!
ஏமாந்த குத்தத்துக்கு குண்டத் தள்ளுறான்!
சொன்னா புரியுமா?
இந்த சோகம் தெளியுமா!
சாலையில ஓடுது நாலு சக்கரம்
இது சாஞ்சா புரியுமடி வந்த சிக்கனம்!
புகையோடு புகையாக மனுசன் போகிறான்
இது புரியாமல் தானடி இங்கே வேகுறான்!
கேட்டாக்கா நாகரீகம் ஏறிப் போச்சுதாம்!
கேழ்வரகு கஞ்சி தூசா ஆகிப் போச்சுதாம்!
உப்புக் கல்ல வைரமாப் பாக்குறானடி
சிலத ஒப்புகொண்டா கண்ணீரும் இங்கே ஏதடி!
எல்லாளன் ஆட்சிக் காலம் நீதி வாழ்ந்ததாம்
அது இல்லாத அரசியல்தான் இங்கே வாழுது!
தீயிலிட்ட கருவாடு என்ன பாரடி
தீந்தமிழே நீ பதில இங்கே கூறடி!
----------------------------------------(பூமி வறண்டிடிச்சே )
4/22/2017
கற்பனைக் கோட்டை!
எண்ணற்ற கோட்டை கட்டி
என்ன பயன் கண்டோம் இங்கே!
கண்ணிறைந்த இயற்கை ஒன்றே
காவலரணாகும் எங்கும்!
மண்மீது உயிர்கள் வாழ
மறுபிறவி தானும் காண
பூமி நலம் காக்க வேண்டும்!
சாமி என நோக்க வேண்டும்!
தண்ணீரும் காற்றும் இன்றி
தரை வாழுமா!
தனவான்கள் எண்ணம் போலே
எம் இனம் வாழுமா!
உயிருக்கு உறங்க ஓர் இடம் வேண்டும்
உயிரான மண்ணுமதைத் தாங்க வேண்டும்!
கருவறை தன்னில் இங்கே
கல்லொன்றைச் சுமந்ததாரு!
கருவறை போல நீயும்
தாய் மண்ணை எண்ணிப் பாரு!
கடற்கரை மண்ணை அள்ளிக்
கோட் டை கட்டலாம்
கடலன்னை பொங்கி எழுந்தால்
எங்கே ஓடலாம்!
கோட்டைக்குள் அடங்காது இந்த உலகம்
கோமாளித் தனமான எங்கள் சொந்த உலகம்!
ஆடம்பரமாய் இருக்க இது போதும்
அட ஆயுளைத்தான் கூட்டாது ஒரு போதும்!
இயற்கையை மிஞ்சுமா இந்த அழகு!
ஈரலிப்பா நீயிருக்க வந்து பழகு!
மூலிகைக் காற்றைத்தான்
உயிர் மூச்சு விரும்பும்!
முத்தமிழை முத்தமிடும் பேச்சு விரும்பும்!
காத்தாடி தந்த காற்று
காலடியைத் தொட்டு நிற்கும்
ஆத்தாடி வாடைக் காற்று
அக்கம் பக்கம் எல்லாம் சுற்றும்!
சுற்றுகின்ற காற்றுக்குச்
சூனியத்தை வைக்காதே!
கோட் டையிலே இருந்து கொண்டே
மனக் கோட்டைகளைக் கட்டாதே!
---------------(எண்ணற்ற கோட்டை கட்டி )
4/17/2017
நிலாக்கால இரவுகள்
மரபுக் கவிதை எண்சீர் விருத்தம்
---------------------------------------------------
அகராதி முதற்கொண்டு தேடிப் பார்த்தேன்
......அடியாத்தி சொல்லத்தான் வார்த்தை இல்லை!
பகவானின் கற்பனைக்கோர் எல்லை உண்டோ!
......பார்போற்றும் பேரழகை மண்ணில் கண்டேன்!
ஜெகன்மாதா பெற்றெடுத்த பிள்ளைச் செல்வம்
......ஜெகத்தினையே சுற்றிவரும் காட்சி போலும்
சுகமான சிந்தனைகள் இங்கே தோன்றும்!
......சுழல்கின்ற நிலாக்காலம் நெஞ்சுள் வாழும்!
இனிதான காலமென எண்ணும் காலம்
......இரவெல்லாம் நிலவோடு வாழும் காலம்!
தனிமைக்குள் நுழைந்தின்பம் காணச் சொல்லும்
.......தள்ளாடும் வயதினிலும் ஆசை கொல்லும்!
கனியொத்த சுவைநல்கும் எண்ணம் தோன்றும்
.......கண்ணதாசன் நினைவலைகள் நெஞ்சுள் நீளும்!
பனிபோல துயரெல்லாம் மாய மாகும்!
.......படர்ந்திருக்கும் பேரழகில் பார்வை சொக்கும்!
வெண்ணிலவு சுற்றிவரும் வீதி எங்கும்
......விளையாடித் திரிந்தோமே அந்தக் காலம்!
எண்ணற்ற நினைவுகளைச் சொல்லச் சொல்ல
......ஏக்கம்தான் விழைகிறது ஏழை நெஞ்சில்!
கண்காணாத் தேசத்தில் இன்றெம் மக்கள்
......காணுகின்ற காட்சியெல்லாம் வேறொன் றாகும்!
மண்மீது இத்துயரை மாய்ப தாரோ!
......மறுபடியும் நிலவினைநாம் ரசிக்க வேண்டும்!
(கவிக்களம் -11 கவிதைப்பூங்கா போட்டிக்கான கவிதை)
4/15/2017
காதல் கலாட்டா கவிதைப் போட்டி!
ஆண்
-----------------------------------
மாலைப்பொழுதில் மயக்கும் பெண் நிலவடி
அவள் சேலை கட்டி வந்த சிலையடி!
குயிலின் குரலோசை தானடி!
பூக்களில் அவள்தான் அழகோ அழகடி!
பெண்
----------------------------------------------------
எரிமலை நானடா குமுறக் குமுற
வரும் துயர் பாரடா.....
உன்னோடு என்ன வழக்கு! தன்னாலே தீரும் கணக்கு!
கண்ணுக்குள் நோயிருக்கு உன் நெஞ்சுக்குள் பேயிருக்கு!
ஆண்
-------------------------
பேயென்று சொல்லதடி! நெஞ்சைக் கொல்லாதடி!
என் உயிராய் வாழும் தேவதை நீயடி
திட்டும் போதும் வலிக்கும் பாரடி
தேன்முத்தம் தந்து என்னை அள்ளடி! உணர்வே நில்லடி!
பெண்
-------------------
சண்டாளனே! என்னை ஏதேதோ செய்கிறாய்!
உன்னோடுதான் வாழ்க்கை என்கிறாய்!
உயிரோடு விளையாடுறாய்! நீயாரடா? பதிலொன்று கூறடா?
புரியாத புதிரிங்கே நீயடா! என் உயிரும் தானடா!
ஆண்!
----------------------
சும்மாதான் சொன்னேன் நானடி அவள் நீ இல்லடி!
கொம்புத்தேனுக்கு ஆசையென்னடி!
கொலுவிருக்கும் பூங்கொடி! எண்ணிப் பாரடி
நான் ராஜாதி ராஜனடி பல ரோஜாக்கள் தேடுமடி!
பெண்
-----------------
நீ ஒன்றும் அழகு இல்லையடா
கற்பனையால் வந்ததிந்தத் தொல்லையடா!
பூவெல்லாம் ஒன்றுதானடா
நீ தேன் தேடும் வண்டுதானடா! என்முன்னே நில்லாதடா!
ஆண்
------------------------------
கிளி மூக்கில் கோவம் வந்ததா அது
அழியாத கோலம் ஆனதா!
உளிகொண்டு சிதைத்தாலும் நீதானடி
உயிருக்குள் உயிர் வாழும் என் பைங்கிளி
பெண்!
------------------------
இனியென்ன சொன்னாலும் நம்பேனடா
எல்லாமே என் வாழ்வில் பொய்தானடா!
வலி மேவுதே! அதில் காதல் பலியானதே!
விளையாட்டும் உன்னால்தான் வினையானதே
என் நெஞ்சம் தனியாய் வாடுதே!
கவிஞர் .அம்பாளடியாள்
சாந்தரூபி
சுவிஸ்
Subscribe to:
Posts (Atom)