7/31/2012

காற்றாக நான் மாறவா!...

காற்றாக நான் மாறவா!...
கடல் அலையாக நான் மாறவா!... 
தண்ணீர் ஊற்றாக நான் மாறவா!.... 
தாமரைப் பூவாக நான் மாறவா !... 

தணியாத தாகம் என்னுள்ளே 
ஏனிந்த மோகம்!!!!.......... 
உனைப் பாடும் பாடல் அதைத்  
தினம் கேட்க்கும்போது!............

எரிகின்ற தீ மேல் 
மெல்ல விழுகின்ற நீர் போல் 
சுகம் பொங்குதே!!!........என் 
மனம் ஏங்குதே!!!.......

உன்னை நினைந்தாடவே 
தவிக்கின்றதே  உடல் துடிக்கின்றதே  
முன்னொரு போதும் இல்லாத பரவசம் 
என்னுள் உருவானதே அது எனை மீறுதே!!!....

உன்னிரு கரம் கொண்டு அணைக்க 
எனக்கொரு வரம் வேண்டுதே!!!...... 
உள்ளம் நதி போல் துள்ளிடத் துள்ளிட 
எண்ணம் முழுதும் கவிதை வெள்ளம்
பொங்குது பொங்குது பாரம்மா!!!..... 

இன்னல் தீர்க்கும் தாயே 
என்னுள் இருப்பவள் நீயே!!..... 
உன்னைத் தாங்கும் என் இதயம் 
இந்த உலகை மறக்க வேண்டும்!... 

எண்ணம் முழுதும் உனக்காக
உயிர் ஒளி தீபம் ஏற்ற வேண்டும்!..... 
அன்னை உந்தன் பாதம் அடியவள் 
தொழும் வரம் ஒன்றே போதும்!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9 comments:

 1. பக்திப் பரவசத்தை என்னுள் விதைத்த அருமையான கவிதை. உயிர்ஒளி தீபம் ஏற்ற வேண்டும் என்ற வார்த்தையாடல் பிரமாதம்.

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா தங்கள் முதல் வரவும் ஆசியும்
  இன்றைய இந்த ஆக்கத்திற்கு சிறப்பைத் தேடித்
  தரட்டும்!...மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும் இனிய
  கருத்திற்கும் .

  ReplyDelete
 3. பக்தி மணம் கமழும் வரிகள்!

  ReplyDelete
 4. பக்திப் பரவசமான பாடல்....

  ReplyDelete
 5. மிகவும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. மனதை உருக்கும் பாடல் சகோதரி...அருமை!

  ReplyDelete
 7. nice. my blog id:

  http://newsigaram.blogspot.com/2012/07/01.html

  ReplyDelete
 8. அருமையான பக்திமணம் கமழ செய்யும் வரிகளை படைத்த உங்களுக்கு என் பாராட்டுக்களும் நன்றியும்!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........