9/14/2012

சந்தம் இது சந்தம் என .....



சந்தம் இது சந்தம் என
எல்லோரும் கொண்டாட வந்தேன்
தென்றல் காற்றே நில்லு
புது ராகம் சொலிச் செல்லு
தென்றல் காற்றே நில்லு
புது ராகம் சொலிச் செல்லு

சிந்தும் நதி எங்கே?
கடன் வாங்கும் என் தோழி
சொன்னார் ஒரு கேலி
இதில் உண்மை என்னடி என் தோழி?
                                        (சந்தம் இது சந்தம் )
கங்கைக் கரை ஓரம்
நீ வந்தால் அது  போதும்
இன்பம் என்றும்  பொங்கும்
தன்னாலே !
விண்ணும் உடன் கை தட்டும்
கண்ணில் அங்கே நீர் சொட்டும்
நான் சொல்லும் கவி கேட்டே
மனம் கூத்தாடும்

 உன்னில் என்னைக் காண
அடி என்னில் உன்னைக் காண
சொல்லில் புது அர்த்தம்
என்றும் தனியாகும்!
புல்லுக்கிறைத்தாலும்
என்னை நெல்லுக்கிறைத்தாலும்
மண்ணில் என்றும் பயன் நான்
தருவேனே
                               
பன்னீர் மழை தூவும்
பொன் மேகம் என்னைத் தாங்கும்
இவள் இல்லை எனில் இங்கே
உயிர் வாடும் !
அல்லிக்  கொடியே நீ
என்னைத் தொடும் போது
என்னுள் சுக ராகம்
என்றும் அலை மோதும்!

கன்னித் தமிழ் இன்பம்
என் சொல்லில் குறைவா?
அது இல்லை எனில் இங்கே
நீ வர வேண்டும்
உன்னைத் தொழ நான்
நீ என்னுள் உறைவாய்
எங்கும்  கண்ணுக்களகாய்
மனம் பூத்தூவும்!
                          (சந்தம் இது சந்தம் என)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

  1. மிக மிக அருமை
    சப்தமாகப் படித்து ரசித்தேன்
    "அவள்" அருள் உங்களுக்கு என்றும் உண்டு
    இல்லையெனில் வார்த்தைகள் இப்படி
    அழகாக வந்து விழுமா ?
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி,
    நாமகளுக்கு ஓர் அற்புதமான
    பாமாலை...

    ReplyDelete
  3. கல்வித் தாய்க்கு சிறப்பான பாட்டு...

    ReplyDelete
  4. சந்தம் இது சந்தம் என
    எல்லோரும் கொண்டாட வந்தேன்....

    பூத்துக்குலுங்கும் சந்தக்கவிதைப்
    பூக்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. சிந்தும் நதி எங்கே
    கடன் வாங்கும் என் தோழி!!!..
    சொன்னார் ஒரு கேலி
    இதில் உண்மை என்னடி என் தோழி!.....

    சந்தத்தை உணர்கையில் மனதிற்குள் ஒரு இனிமையான இசை கரைந்தோடுகிறது

    ReplyDelete
  6. அருமையான சந்தக் கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    பிள்ளையார் திருத்தினார்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
    வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html



    ReplyDelete
  7. அன்னையின் ஆட்சி எங்கும் நிறையட்டும்!

    ReplyDelete
  8. ஆஹா சரஸ்வதி தேவிக்கு சிறப்பான கவிதையில் அர்ச்சனை.

    ReplyDelete
  9. வெள்ளைத் தாமரையாளுக்கு அம்பாளடியாளின் சந்தம்.அருமை !

    ReplyDelete
  10. கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........