10/10/2014

பெண் என்பவள் போற்றப்பட வேண்டியவள் !பெண்ணின் உடலைப் படம்பிடித்து எப்போதும்
கண்ணுக்(கு)  இழிவாகக் காட்டாதீர் !- மண்ணின்
பெருமையும் குன்றிவிடும் பண்பாட்டை விற்றால்!
அருமை உணர்ந்து அகற்று !

கண்ணுக் கழகான காட்சிப் பொருளல்ல
பெண்ணை எவரும் படமாக்க !-விண்ணவரே
போற்றும் பதுமையைப்   போற்றாது எந்நாளும்
தூற்றுவது  எம்மவரின்  ஊழ் !


                                 தேசத்தின் நன்மைக்குத் தீங்குவிளை விப்பவரை
நாசம்செய் நன்மனமே நாவினால் !-மோசமான
எண்ணங்ளை வேரோடு எரிப்பதே  எம்கடன் !
உண்ணவரும் போதும் உணர்!

பண்பாடு குன்றினால் பாரதமே சீரழியும்!
திண்டாட  வைப்பவரைத் திட்டித்தீர்!- கொண்டாட  
நாமும் வருவோமே நாளுமிந்தப்  பொன்நாளை !
காமுகரின் கண்பறிதுக் காட்டு !

                                                             

                                                          

கண்ணுக்கும் தெரியாத கயமை உணர்வுகளால்
கழுத்தறுக்க வந்தவரைக் கண்டபடி திட்டுங்கள் !
மண்ணுக்குள் புதைந்து மறு ஜென்மம் எடுக்காமல்
மரத்தும் போகட்டும் மனிதநேயம் அற்றவர்கள் !

ஊழல் பெருச்சாளிகள் ஊரைச் சுரண்டுகையில்
கூழும் கஞ்சியும் எமக்கெதற்கு !
வாழும் போது வன் கொடுமைகளை எதிர்ப்பவரே
நாளும் இங்கு  போற்றப் படுவர் !

                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7 comments:

 1. //மண்ணுக்குள் புதைந்து மறு ஜென்மம் எடுக்காமல்
  மரத்தும் போகட்டும் மனிதநேயம் அற்றவர்கள்!..//

  இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை!..

  நியாயமான கருத்துக்கள்.. கவிதை அருமை!..

  ReplyDelete

 2. தேசத்தின் நன்மைக்குத் தீங்குவிளை விப்பவரை
  நாசம்செய் நன்மனமே நாவினால் !-...//
  அருமை சகோதரி..

  தம் 1

  ReplyDelete
 3. #கண்ணுக் கழகான காட்சிப் பொருளல்ல
  பெண்ணை எவரும் படமாக்க !#
  உடலைக் காட்டி பிழைப்பு நடத்தும் பெண்களும் இதனை உணரும் நாள் எந்நாளோ ?
  த ம 2

  ReplyDelete
 4. கண்ணுக் கழகான காட்சிப் பொருளல்ல
  பெண்ணை எவரும் படமாக்க//

  அருமையாகச் சொன்னீர்கள்! சகொதரி! பகவான் ஜி சொல்லியிருப்பது போல பெண்களே தங்களை சந்தைப்படுத்தத் தயாராகும் போது என்னத்த சொல்றது?

  அழகான ஆதங்கப் பதிவு!

  ReplyDelete
 5. வித்தியாசமான சிந்தனை...!!!

  தொடர வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 6. இழிவுச் செயலோரை எட்டி உதைத்தே
  கிழித்தீரே பாடிக் கிளர்ந்து!

  வெகுண்டெழுந்த வெஞ்சினம்
  கவிவரிகளாய்க் கண்டேன்!...

  ReplyDelete
 7. ///மண்ணுக்குள் புதைந்து மறு ஜென்மம் எடுக்காமல்
  மரத்தும் போகட்டும் மனிதநேயம் அற்றவர்கள் !///
  தங்களின் வாக்குப் பலிக்கட்டும் சகோதரியாரே

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........