12/30/2011

புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே ....

இன்பம் பொங்கும் நல்லாண்டாய் 
இதயம் மகிழும் பொன்னாண்டாய்
அன்றும் இன்றும் நாம் பட்ட துயர் 
அகற்ற வருவாய் புத்தாண்டே !

பிரிந்த உறவுகள் இணைந்திடவும் 
பரந்த உலகம் நல் ஒளி பெறவும் 
விரைந்து நன்மை தந்திடவே 
வருவாய் இங்கே புத்தாண்டே!

தனமும் தான்னியமும் கல்வியும் 
தழைத்து எங்கும் புவிதனிலே 
வறுமை நிலையைப் போக்கிடவே 
வருவாய் இங்கே புத்தாண்டே!

மனதில் சஞ்சலம் அகன்றிடவும் 
மனிதன் மனிதனாய் வாழ்ந்திடவும் 
உயரிய பண்பைத் தந்திடவே நீ 
வருவாய் இங்கே புத்தாண்டே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

 1. புத்தாண்டை வரவேற்கும் நல்ல கவிதை .
  உங்களுக்கும் இந்த பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன் .

  ReplyDelete
 2. //மனிதன் மனிதனாய் வாழ்ந்திடவும்
  உயரிய பண்பைத் தந்திடவே நீ //

  அருமையான கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் .உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. மனிதன் மனிதனாய் வாழ்ந்திடவும்... புத்தாண்டில் இது நடந்துவிட்டால் உலகமே அழகாகி விடுமே! இதே ஆசைக் கனவுடன் நான் உங்களுக்கு இப்புத்தாண்டு எல்லா நலங்களையும் வளங்களையும் தரட்டுமென்று வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 4. தனமும் தான்னியமும் கல்வியும்
  தழைத்து எங்கும் புவிதனிலே
  வறுமை நிலையைப் போக்கிடவே
  வருவாய் இங்கே புத்தாண்டே!.........

  நன்று..

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

  இன்று :

  பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

  ReplyDelete
 6. பூத்துவரும் பொன்னெழிலாய்
  பூக்கட்டும் புத்தாண்டு!
  ஏழுவண்ண வானவில்லாய்
  வண்ண வண்ண இன்பங்கள்
  நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. புதுவருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. இனித் தொட்டதெல்லாம் துலங்கிடவும்
  தூய காற்று வீசிடவும் யுத்தம் இல்லாமல்
  மொத்த உயிர்களும் நன்மை பெறவே
  வருவாய் இங்கே இனிய புத்தாண்டே!....
  i
  இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 10. புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. இனிய புத்தாண்டினை வரவேற்கும் இனியதோர் கவிதை...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 12. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. இனித் தொட்டதெல்லாம் துலங்கிடவும்
  தூய காற்று வீசிடவும் யுத்தம் இல்லாமல்
  மொத்த உயிர்களும் நன்மை பெறவே
  வருவாய் இங்கே இனிய புத்தாண்டே!.

  அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உறவுகளே .உங்கள் வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி .

  ReplyDelete
 16. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........