9/01/2012

அறியாமை அழித்திடும் நல் உயிரை....



இருப்பதை எல்லாம் எடுத்துக்கொள்
பெரும் இன்னலைத் தந்து வதைத்துக்கொள்
உருப்படியானது மனிதனுக்கு இவ்
உலகினில் என்றுமே தன் மானமடா!!....

அடுக்கிடும் நகையில் அர்த்தமில்லை...
அழகது என்றும் நிலைப்பதில்லை
எமைத் திடுக்கிட வைக்கும் உணர்வு அது
தீயவர் என்ற பெரும் பளிச்சொல்லே!!.......

குன்றினில் இட்ட தீயாக மனம்
குமுறிடும்  என்றுமே  தணியாமல்
கன்றையும் ஒதுக்கும் தாயுள்ளம்
கசிந்திட்ட   வதந் "தீ" அதனாலே!!!.......

கொன்றிடும் துயரது போக்கிடவே
தற் கொலையிலும் ஆவல் பெருகிடுமே
நன்றிதோ நமக்கு அறியாமை !!........
நல்லவர் உயிரைப் பறிக்கும் என்றால்!....

சிந்தை செய் மனமே எந்நாளும்
சிறப்புற நல் வார்த்தை பேசிடவே
கண்டதை வைத்தும்  வெறும் கற்பனையால்
களவுற எதையும் உரைக்காதே !!!.................

நொந்துதான் போவார் நல்லவர் இங்கே
வார்த்தை அம்புகள் கீறிய வடு அதனால்
குந்தகம் அற்ற செயல்த் திறன் கொண்டு
கண்டுகொள் உண்மை அது என்னவென்று!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3 comments:

  1. கருத்துள்ள வரிகள்...

    நாம் பேசும் ஒவ்வொரு நல்ல / கெட்ட சொல்லும் நமக்கே... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சிந்தனை மிக்க வரிகள்!

    ReplyDelete
  3. வார்த்தைகள்தானே மனதைப் பொன்னாக்குவதும்,புண்ணாக்குவதும் !

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........