2/08/2014

நின்னைச் சரணடைந்தேன் நினையாதிருப்பாயோ



மாதம்       ஒன்றரை     என்றாரே 
மனதில்  துயரைத்   தந்தாரே
பேதம்    இல்லா    உன்னருளால் 
பிணிகள் தீர்ந்தது தன்னாலே 
வேதம்   உரைக்கும்   நன்றியை 
விரும்பிக் கற்கும் மனத்திற்கோர் 
சேதம்   வருமோ   சொல்லிங்கே ?..
செழுமை நிறைந்த  பெம்மானே!..

தீதும் நன்றும் உனையறிந்தே 
திசைகள் எட்டிலும் நிகழ்கிறது 
ஓதும் மந்திரம் அதனாலே 
ஒன்றே நன்றாய் திகழ்கிறது 
காதும் காதும் வைத்தாற் போல் 
கவலைகள் இதனால்  மறைகிறது 
போதும் போதும் இறைவா உன்றன் 
புதுமையை  உரைக்க வழியேது !!!

மொழியதை இழந்த பறவையைப்போல் 
முன்னே வந்தேன் இந்நாளில் 
வழியதைக் காட்டி விட்டாயே 
வழியும் உன்றன் கருணையதால் 
அழியுமோ புகழும் கீர்த்தியுமே 
ஆடல் நாயகன் நீ இருக்க  !!
விழிகளில் ஆனந்தம் தானிங்கே 
விடை கொடு எந்தன் பெருமானே 

சிவ சிவ என்பேன் எந்நாளும் இந்த 
சிந்தையின் மயக்கம் தெளியாது 
நவ யுக நாயகன் உனைப் பாடும் 
நாவும் இதனை மறவாது 
தவ பலம் வேண்டும் எமக்கிங்கே 
தந்தருள்வாய் எங்கள் பெருமானே 
லவ குசன்  போல முன்னேறி 
லட்சியம் வெல்ல ஒரு நாளில் 

மொழி அது அருவியாகட்டும் 
முனைப்புடன் எங்கும் பாயட்டும் 
பழி அது நீங்கி செழிப்புடனே 
பாரினில் பெருமை சேர்க்கட்டும் 
குழி அது பறிப்போர் முன்னிலையில் 
குமுறியே நாட்டியம் ஆடட்டும் 
வழி அதைக் காட்டி வா இறைவா 
வலிமையைத் தந்திடும் எம் தலைவா ...

அம்பாளடியாள் 







தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

22 comments:

  1. // மொழி அது அருவியாகட்டும்
    முனைப்புடன் எங்கும் பாயட்டும் //

    அருமையான வரிகள் பல... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  2. குழி அது பறிப்போர் முன்னிலையில்
    குமுறியே நாட்டியம் ஆடட்டும்
    வழி அதைக் காட்டி வா இறைவா
    வலிமையைத் தந்திடும் எம் தலைவா //வலைமை கிடைக்கட்டும்

    ReplyDelete
  3. குழி அது பறிப்போர் முன்னிலையில்
    குமுறியே நாட்டியம் ஆடட்டும்
    வழி அதைக் காட்டி வா இறைவா
    வலிமையைத் தந்திடும் எம் தலைவா //கிடைக்கட்டும்

    ReplyDelete
  4. //மொழி அது அருவியாகட்டும்
    முனைப்புடன் எங்கும் பாயட்டும் //
    தங்களின் எழுத்தே அருவியாகத்தான் கொட்டுகிறது.
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  5. அருமை அருமை அருமை!
    வேறெதுவும் சொல்ல வார்த்தைகளில்லை!

    //சிவ சிவ என்பேன் எந்நாளும் இந்த
    சிந்தையின் மயக்கம் தெளியாது
    நவ யுக நாயகன் உனைப் பாடும்
    நாவும் இதனை மறவாது //

    இவ்வரிகள் பாபநாசம் சிவனின் "நம்பிக் கெட்டவர் எவரைய்யா.....வில இறுதி வரி "அந்தி செயலழின் தலம் வரும் போது சிவன்பெயர் நாவில் வாராதே ஆதலிலால் மனமே இன்றே சிவன் நாமம் சொல்லிப் பழகு பழகு" என்பதுனினைவுக்கு வந்தது!

    மிக அழகாக எழுதிகின்றீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா தங்களின் வருகைக்கும் மனமார்ந்த பாராட்டிற்கும் .

      Delete
  6. வணக்கம்
    ஒவ்வொரு வரிகளும் சிறப்பு.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  7. "தீதும் நன்றும் உனையறிந்தே
    திசைகள் எட்டிலும் நிகழ்கிறது
    ஓதும் மந்திரம் - அதனாலே
    ஒன்றே நன்றாய் திகழ்கிறது" என்ற வரிகளை
    ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் .

      Delete

  8. நலம் தானே தோழி...!
    மீண்டும் வலைதளத்தில் வலம் தருவது மகிழ்ச்சியே !

    நலம் பல பெற வேண்டும்
    நவின்றிடும் சொற்கள்
    மிகைப்பட வேண்டும்
    நயம்பட உரைப்பதற்கும்
    இதந்தரும் பாக்கள் இசைப்பதற்கும் !

    தீதும் நன்றும் உனையறிந்தே
    திசைகள் எட்டிலும் நிகழ்கிறது
    ஓதும் மந்திரம் அதனாலே
    ஒன்றே நன்றாய் திகழ்கிறது
    காதும் காதும் வைத்தாற் போல்
    கவலைகள் இதனால் மறைகிறது
    போதும் போதும் இறைவா உன்றன்
    புதுமையை உரைக்க வழியேது !!!

    அருமை அருமை! சிவசிவ எனும் நாமம் சிந்தையில் உறைந்திடும் வகையில் அமைந்தன அனைத்தும் ...!
    நன்றி தொடரவாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. காலில் அறுவைச் சிகிச்சை செய்து இப்போது குணமடைந்தும் உள்ளது தோழி .தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் தலை வணங்குகின்றேன் .மிக்க நன்றி தோழி .

      Delete
  9. பசுபதி வேந்தன் நிச்சயம் எல்லா நலமும்
    மனமகிழ்வோடு நல்குவார்...
    அருமையான ஆக்கம் சகோதரி...
    உடல்நலம் இப்போது எப்படி இருக்கிறது சகோதரி.
    நீங்கள் நீங்கா நலமும் குன்றாத வளமும்
    கொண்டிட இறைவனிடம் என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அன்புச் சகோதரா இப்போது ஓரளவிற்கு குணமடைந்து
      வீடு திரும்பியுள்ளேன் தங்களின் பிரார்த்தனைக்கும் அன்பு கலந்த
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி .....

      Delete
  10. "//சிவ சிவ என்பேன் எந்நாளும் இந்த
    சிந்தையின் மயக்கம் தெளியாது
    நவ யுக நாயகன் உனைப் பாடும்
    நாவும் இதனை மறவாது //"

    அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சிறப்பான பாடல்.... சிவன் எல்லா அருளும் புரிவார்...

    தங்களது உடல்நிலை இப்போது எப்படி உள்ளது சகோதரி... விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தேற்றம் அடைந்துள்ளது சகோதரா மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் அன்பு கலந்த நல் வாழ்த்திற்கும் .

      Delete
  12. அருமை! சிந்தையில் சிவனைக் கொள்வோம்..

    தங்களின் அறிமுகம் கிடைத்தது கண்டு மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி தங்களின் அறிமுகம் கிடைத்ததும் என் பாக்கியமே .

      Delete
  13. மொழியதை இழந்த பறவையைப்போல்
    முன்னே வந்தேன் இந்நாளில் // எப்படி உரைப்பேன் நானும் ஏதிலி என்னவனே!ம்ம் அருமை கவிதை காலதாமதத்துக்கு மன்னிக்கவும் அம்பாளடியாள்§சிவன் போல விளையாட இல்லை தனிமரம்!ம்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........