7/05/2014

எண்ணற்ற துயரம் வந்து என் நெஞ்சை அடைக்கிறதே

 

எண்ணற்ற துயரம் வந்து
என் நெஞ்சை கொல்கிறதே!
புண் பட்ட உள்ளத்திலே
பூகம்பம் எழுகிறதே!

இதை அடக்க வழியைத் தான் தேடுகிறேன்- நான்
இருந்தும் ஊமையாய் வாடுகின்றேன்!
கனவு சிதைவதைக் காணுகின்றேன் எதிர்
கால முடிவைத் தான் தேடுகிறேன்!

பறவை என்றால் சிறகுகள் வேண்டும்
பேசிப் பழக உறவுகள் வேண்டும்
நிலைமை இங்கு வேறானதே என்
நினைப்பும் இதனால் நீறானதே!

கலகம் நிறைந்த பூமியிலே
காணும் யாவும் பொய்யானதே
உலகம் இதைத் தான் விரும்புதடா
ஊமை நாடகம் ஆடுதடா!

இறந்தவர் தொகையை எண்ணி எண்ணி
இருப்பதை விடவும் மரணம் மேல்
சிறந்தவர் எவர் தான் சொல்லிங்கே அவர்
சிந்தையில் எட்டுதா பாரிங்கே!

ஒருதலைப் பட்சத் தீர்வு  இதனால்
ஒழிந்திடும் அழகிய தீவு!
உயிர்களைக் காப்பது இனி யாரு ?
எல்லாம் உணர்ந்தவரே  பதில் கூறு ?

                                             (     எண்ணற்ற துயரம் வந்து..)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

  1. இலங்கைத் தமிழனின் நெஞ்சங்களில் உள்ள குமுறலை , கவிதையாய் படம் பிடித்து காட்டி விட்டீர்கள் !
    த ம 1

    ReplyDelete
  2. தங்கள் தாயகத்துக் குழந்தைகளின் கண்ணீர் கவிதையில் வடிகின்றது!

    //உயிர்களைக் காப்பது இனி யாரு ?..
    எல்லாம் உணர்ந்தவரே பதில் கூறு ?...//

    பதில்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும் சகோதரியாரே!

    ReplyDelete
  3. "கலகம் நிறைந்த பூமியிலே
    காணும் யாவும் பொய்யானதே
    உலகம் இதைத் தான் விரும்புதடா
    ஊமை நாடகம் ஆடுதடா..." என்ற
    அடிகளில் ஈழவர் நிலை தெரிகிறதே!

    ReplyDelete
  4. காலம் ஒரு நாள் மாறும்
    கவலைகள் யாவும் தீரும்
    தம 3

    ReplyDelete
  5. புண்பட்ட மனதின்
    எண்னற்ற வேதனைகள்!...

    கவிதை மனத்தையும் கண்களை நீரும் நிறைத்தன...
    அருமை!

    ReplyDelete
  6. குமுறல் உங்கள் கவிதையில்....

    த.ம. +1

    ReplyDelete
  7. சிறந்தவர் எவர் தான் சொல்லிங்கே அவர்
    சிந்தையில் எட்டுதா பாரிங்கே .....
    = தேடத் தான் வேண்டும்.
    நெகிழ வைக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. பறவை என்றால் சிறகுகள் வேண்டும்
    பேசிப் பழக உறவுகள் வேண்டும்//

    உண்மை.புண்பட்ட நெஞ்சில் எழும் நினைவுகள் கவிதையாக
    மனது வேதனைப் படுகிறது.
    இறைவன் நல்ல வழி காட்ட வேண்டும்.

    ReplyDelete
  9. வலி மிகுந்த கவிதை...காலம் மாறும் சகோதரி

    ReplyDelete
  10. ஒருதலைப் பட்சத் தீர்வு இதானால்
    ஒழிந்திடும் அழகிய தீவு ......
    உயிர்களைக் காப்பது இனி யாரு ?..
    எல்லாம் உணர்ந்தவரே பதில் கூறு ?...
    ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு அந்த நிலை தான் நமக்கும் போல என்ன செய்வது.மிக நன்று வாழ்த்துக்கள் தோழி..!

    ReplyDelete
  11. வணக்கம்
    அம்மா
    காலம் ஒரு நாள் மாறும்
    பாடிய சிந்து ஒருநாள் மீண்டும் ஒலிக்கும் அம்மா
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. வேதனைகளை வெளிப்படுத்தும் கவிதை. நல்லதோர் முடிவினை எதிர்பார்ப்போம்.
    www.ponnibuddha.blogspot.in
    www.drbjambulingam.blogspot.in

    ReplyDelete
  13. தாய் நாட்டு மக்களின் வேதனையை தெள்ளிய தமிழில் பாடிவிட்டீர்கள்! விரைவில் உங்கள் நாட்டின் வேதனை அகலட்டும்!

    ReplyDelete

  14. வணக்கம்!

    எண்ணற்ற துன்பத்தை ஏந்தும் கவிகண்டு
    புண்பட்டுப் போகும் புலன்

    ReplyDelete
  15. படிப்பவரும் உணர்ச்சிக் கொள்ளும் வண்ணம்
    படைத்த கவிதை அருமையிலும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........