9/14/2014

இது அம்பளடியாளுக்குக் கிடைத்த விருது !


ஆஹா ...என்ன ஓர் அருமையான விருது !இது எனக்கே எனக்கா !இன்றைய நாள் என் வாழ் நாளில்  மறக்க முடியாத நாளாக அமைவதற்கு இந்த விருதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது இதை  இட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் நான் மட்டும் எப்படி இந்த மகிழ்வினைத் தனித்து அனுபவிப்பது ?இந்த விருதினைப் பெறுவதற்கு மூல காரணமே என் வலைத்தள சொந்தங்கள் தாங்கள்  தானே ! எந்தப் பாடலை எழுதினாலும் எந்தக் கவிதையை  எழுதினாலும் அதற்கு உயிரோட்டமுள்ள நற் கருத்துக்களை இட்டுக் கௌரவித்து மேலும் ஊக்கமளிப்பவர்கள் தாங்கள் தானே ! ஆதலால் முதற்கண் என் வலைத்தள சொந்தங்களுக்கும் குறிப்பாக இந்த விருதினை எனக்கு வழங்கிக் கௌரவித்த திரு .துரை செல்வராஜூ  ஐயாவிற்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .சிறப்பான ஆன்மீகப் பகிர்வினை அள்ளி அள்ளி வழங்கும் ஐயா அவர்கள் இந்த விருதினைப் பெறுவதற்கு முன்னர் ஒரு சில நிபந்தகளையும் அறிவித்திருந்தார் !

                                 அதாவது இவ் விருதினைப் பெற்றுக் கொண்டவர்கள் முதலில் இவ் விருதினை வழங்கிக் கௌரவித்தவரின் தளத்திற்கு இணைப்புக் கொடுக்க வேண்டும் .http://thanjavur14.blogspot.ch/2014/09/blog-post84-blog-award.html மிக்க நன்றி ஐயா! தாங்களும் மென் மேலும் இது போன்ற விருதுகளைப் பெற வேண்டும் என்றே வாழ்த்துகின்றேன்.

அடுத்து பெற்றுக்கொண்ட விருதினைத் தளத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் .முதல் வேலையே அது தானே விடுவோமா :))) போட்டும் விட்டேன்! கூடவே என்னைப் பற்றி ஏழு விஷயங்களைச்  சொல்ல வேண்டும் .சொன்னால் போச்சு! இதோ அந்த ஏழு விஷயங்கள் ......


 1. முழுநேர இல்லத்தரசி :)
 2. கலையார்வம் அதிகம் ஆதலால் எதையும் விட்டு வைப்பதில்லை சிலை செய்வது ,சித்திரம் வரைவது கவிதை எழுதுவது ,பாடல்கள் எழுதுவது  பட்டியல் இப்படியே நீண்டுகொண்டே போகும் :)எல்லாம் ஒரு முயற்சி தான் :)
 3. இசை என்றால் உயிர்!( ஐயா இளையராஜாவை நேரில் காண வேண்டும் என்பது என் கடசி  ஆசை !)
 4. கூடவே இன்னொரு கடசி ஆசையும் உண்டு அது பாடல்மேல் உள்ள காதலால் வந்த ஆசை ஜானகியம்மாவை நேரில் கண்டு தொழ வேண்டும்! 
 5. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளது (சிறு வயது முதல் ஆதலால் இந்தியாவில் உள்ள மொத்தக் கோவில்களுக்கும் சென்று வர வேண்டும் !)
 6. இயற்கையை அதிகம் நேசிப்பவள் .
     7  .எதையாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம்  மிகுந்தவள் .                                                                    
இனி நான் செய்ய வேண்டியது இந்த விருதினை நிபந்தனைகளுக்கு உட்பட்டு இன்னும் ஐந்து பேருக்கு வழங்க வேண்டும்  . அந்த வகையில் நானும் ஓர் ஐந்து பேரை இங்கே தேர்வு செய்துள்ளேன் .இவர்களைப் பற்றி அதிகம் நான் எதுவும்  சொல்லத் தேவையில்லைக்   காரணம் இவர்களின் படைப்பாற்றல் அனைவரும் அறிந்ததே .
 • கவிஞர். கி  .பாரதிதாசன் ஐயா 
 • புலவர் இராமனுசம் ஐயா 
 • அன்புச் சகோதரி ராஜி 
 • தோழி அருணா 
 • சகோதரர் ஊமைக்கனவுகள் (இவரது உண்மையான பெயர் தெரியாததனால் புனைப் பெயரைப் பகிர்ந்துள்ளேன்  மன்னிக்கவும் )
வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சங்களே ! வளமான ஆக்கங்கள் வான் போல பரவட்டும் ....       

அட கவிதை எழுதத் தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால்  சிலை எப்படிச் செய்வாக :)) 


                                                இப்படித்தான் இதோ பாருங்கள் ..
   

                                                                           நன்றி ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

 1. சிலை ரொம்பவும் அழகாய்ச் செய்திருப்பது மகிழ்வைத் தந்தது.....

  மேலும் பல விருதுகள் உங்களை வந்தடையட்டும்...

  ReplyDelete
 2. சிலை செய்துள்ள கலை அருமை. பாராட்டுகள்.

  விருது பெற்றுள்ளதற்கு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. பன்முகத் திறமை கொண்ட உங்களுக்கு இந்த விருது பொருத்தம் தான் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள், அம்பாளடியாள்! நீங்கள் செய்த சிலையா இது? எந்த உலோகத்தால் செய்தீர்கள்? மிகவும் நன்றாக வந்திருக்கிறது. சிலை செய்யும் வீடியோ இருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்களேன், ப்ளீஸ்!

  ReplyDelete
 5. சிலை வடித்தமைக்கு பாராட்டுக்கள்.
  விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. என்னை அறியாதும் எனக்குமோர் விருதளித்த
  உங்களின் அன்பிற்குத் தலைவணங்குகிறேன் சகோதரி!
  மிக்க நன்றி!

  ReplyDelete

 7. வணக்கம்!

  வல்ல தமிழை வளர்க்கின்ற என்றனுக்கு
  நல்ல விருதினை நல்கினார்! - சொல்லினிக்கும்
  அம்பாள் அடியாள்! அளிக்கின்றேன் நன்றிகளைச்
  செம்பால் தரும்சுவை சோ்த்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 8. THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற தங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
  த.ம.4

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்! சகோதரி!

  ReplyDelete
 10. அன்பின் சகோதரி..
  கலையும் சிலையும் நிலை பெற்று வாழ்க..
  தாங்கள் மேலும் பல சிறப்புகளை எய்த வேண்டுகின்றேன்..

  ReplyDelete
 11. தாங்கள் அன்புடன் அளித்த விருதிற்கு மிக்க நன்றி தோழி.

  உங்களுக்கும் மற்றும் உங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 12. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
 13. வளமான ஆக்கங்கள் வான் போல பரவட்டும்...
  வாழ்த்துகள்

  ReplyDelete
 14. வணக்கம்
  அம்மா
  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்களுக்கு கிடைத்த விருதினை மற்றவர்களுக்கு பகிந்தமைக்கு நன்றிகள் பல...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 15. இனிய வணக்கம் தோழி!

  விருதினைப் பெற்றிங்கு வைத்தீர் விருந்து!
  பெருகட்டும் மேன்மைதரும் பேறு!

  விருது பெற்றமைக்கும் உங்களால் விருதினைப் பெறும்
  அன்புள்ளங்களுக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். சிலைகள் மிகவும் அழகு.நன்றாக செய்து இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 17. விருதுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் ,வாழ்த்துகள்!
  த ம 1

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........