9/17/2014

எதைத் தேடி என்ன கண்டோம் !


பாழாய்ப் போன கனவுகள் வந்து
பாடாய் படுத்தும் அந்நாளில்
தேளாய் கொட்டும் நினைவுகள் தவிர்ப்பீர் !
தென்னாடுடைய சிவனை நினைந்து !

உண்ணும் போதும் உறங்கும் போதும்
உணர்வுகள் சிறந்தே விளங்கட்டும்!
மண்ணும் மதிக்க வாழ்வோர் தமக்கு
மனதினில் சங்கடம் மறையட்டும் !

எண்ணம் இனிதாய் இருக்கும் போதும்
எதையோ எண்ணி வருந்தாதே !
கண்ணை ஈர்க்கும் மாயையை என்றும்
கடவுள் போலக் கருதாதே !

விண்ணும் மயங்க மண்ணும் மயங்க
வித்தைகள் யாவரும் கற்றிடலாம்
உன்னுள் இருக்கும் உணர்வை வதைத்து
உயரப் பறக்க நினைக்காதே !

பொன்னைப் போல பொருளைப் போல
பொருந்திய மேனியைக் காத்திடுவீர் !
எண்ணம் சிறந்து விளங்கிட நாளும்
இனியன பேசி மகிழ்ந்திடுவீர் !

வாழும் போது வாழா மனிதன்
வாழ்வில் கண்ட பயன் யாது!
ஊழும் துரத்த உணர்வுகள் துரத்த
ஓடும் காலம் திரும்பாது !

மாழும் வரைக்கும் மாடாய் உழைத்து
மண்ணில் சரிய நினைக்காதே  !
சூழும் இன்பச் சுடரைத் தவிர்த்து
சுமைகள் சுமந்து செல்லாதே !

வேகும் கட்டை !வெந்த பின்னால்
விரும்பும் வாழ்வு கிட்டாது !
சோகம் தவிர்த்து வாழும் வரைக்கும்
சொந்தம் எதுவும் நிலைக்காது !

காலம் வெல்லும் வெல்லும் என்றே
கண்ணை மூடித் திரியாமல்
வாழும் போதே வாழ்வை ரசித்து 
வாழக் கற்றுக் கொள்வோமே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

16 comments:

 1. வணக்கம்
  அம்மா
  காலம் வெல்லும் வெல்லும் என்றே
  கண்ணை மூடித் திரியாமல்
  வாழும் போதே வாழ்வை ரசித்து
  வாழக் கற்றுக் கொள்வோமே
  எவ்வளவு கருத்து நிறைந்த வார்த்தைகள்... மிக அற்புதமாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

 2. காலம் வெல்லும் வெல்லும் என்றே
  கண்ணை மூடித் திரியாமல்
  வாழும் போதே வாழ்வை ரசித்து
  வாழக் கற்றுக் கொள்வோமே !

  அற்புதம்


  ReplyDelete
 3. சொல்லும் திறமெல்லாம்
  வெல்லுந் திறமாகப் பகிர்ந்த தங்களின் கவிதைகள் அருமை!

  ReplyDelete
 4. அருமையான வாழும் கலை விளக்கம் !
  த ம 3

  ReplyDelete
 5. //வாழும் போதே வாழ்வை ரசித்து
  வாழக் கற்றுக் கொள்வோமே//

  நல்ல சிந்தனை. பாராட்டுகள்.

  ReplyDelete
 6. //வாழும் போதே வாழ்வை ரசித்து
  வாழக் கற்றுக் கொள்வோமே//
  இந்த உண்மை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருப்போம்?
  கவிதை அருமை !
  வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 7. அதானே... தலைப்புக்குச் சொன்னேன்..

  அழகிய கவிதை... வோட்டும் போட்டிட்டேன்ன் அப்போ வரட்டா?

  ReplyDelete
 8. உணர்வுகளுக்கு உரமூட்டிய கவிதை!
  மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete

 9. வணக்கம்!

  வாழும் கலையை வளமாய் வடித்துள்ளீா்
  சூழும் தமிழைச் சுவைத்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 10. ஊழும் துரத்த உணர்வுகள் துரத்த
  ஓடும் காலம் திரும்பாது !

  நல்ல கருத்து! காலத்தின் அருமை உணர்த்தும்!

  ReplyDelete
 11. காலம் வெல்லும் வெல்லும் என்றே
  கண்ணை மூடித் திரியாமல்
  வாழும் போதே வாழ்வை ரசித்து
  வாழக் கற்றுக் கொள்வோமே !//

  ஆஹா என்னே அருமையான வரிகள்! நல்ல கருத்து மிக்க கவிதை சகோதரி! தமிழ் கொஞ்சி விளையாடுகின்றது!

  ReplyDelete
 12. காலம் வெல்லும் வெல்லும் என்றே
  கண்ணை மூடித் திரியாமல்
  வாழும் போதே வாழ்வை ரசித்து
  வாழக் கற்றுக் கொள்வோமே !
  அட்டகாசமாய் முடித்திருகிறீர்கள் தோழி! நல்லதொரு படிப்பினை:))

  ReplyDelete
 13. "காலம் வெல்லும் வெல்லும் என்றே
  கண்ணை மூடித் திரியாமல்
  வாழும் போதே வாழ்வை ரசித்து
  வாழக் கற்றுக் கொள்வோமே!" என்ற
  நல்வழிகாட்டலை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 14. அற்புதம், பாராட்டுகள்..

  ReplyDelete
 15. வாழ்வை உணர்ந்து வடித்தகவி அருமை

  வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்

  ReplyDelete
 16. யதார்த்தமான கவிதை..வாழ்த்துகள்

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........