10/06/2014

81வது பிறந்த நாள் இன்று !அன்பைப் பொழியும் மனத்தாலே 
அறிவை ஊட்டி வளர்த்த பிதா !
இன்பம் காண எந்நாளும் 
இனிய நல் வாழ்த்து உரைபீரே !

தந்தை என்றோர் தெய்வத்தைத் 
தரணியில் பெற்று நாம் மகிழ்ந்தோம் 
இன்றோ டெண் பத் தொன்றாமே !
இனிய நல் ஆண்டுகள் பெருகட்டும் ...

பொங்கும் தமிழின் ஆர்வலரை 
பொறுமை நிறைந்த பொக்கிசத்தை 
எங்கள் உயிரை உணர்வலையை 
என்றும் இறைவன் காக்கட்டும் !

விண்ணும் மதியும் வாழ்த்திடவே 
விரும்பும் சுகங்கள் கிட்டட்டும் 
கண்ணும் கருத்துமாய் வந்திங்கே 
கருணை வெள்ளம் காக்கட்டும் !

எண்ணும் பொழுதினில் துயர் நீங்கி 
எல்லா நலனும் தங்கட்டும்  
உண்ணும் உணவிலும் நல்லுணர்வை 
ஊட்டி வளர்த்த பிதா மகிழ !

வாழ்த்துச் சொல்ல வாருங்கள் 
வலுவாய் நிற்கும் உறவுகளே !
பூத்துக் குலுங்கும் மனப் பந்தல் 
பூப்போல் இங்கு சிரித்திடவே ....

                                    இவ்வளவு இனிப்பு வகையும் எங்களுக்கா ???!....
                                                                     
                 

                                                   இவை அனைத்தும் என் 
                      வலைத்தள சொந்தங்கள் அனைவருக்கும் தான் :)))))))

                                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

22 comments:

 1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  உங்கள் தந்தை நோய்நொடியின்றி, நல்லாரோக்கியமும்,மகிழ்ச்சியுமாக வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 2. இன்னும் பல்லாண்டு நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டிக் கொள்கின்றேன்..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
 3. வாழ்க வளமுடன்! பல்லாண்டு!

  ReplyDelete
 4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்க அப்பாவுக்கு :)

  ReplyDelete
 5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு.

  ReplyDelete
 6. அப்பாவுக்கு எனது வணக்கம்! அப்பாவின் ஆசைகளை நிறைவேற்றுங்கள்! அப்பாவின் ஆசீர்வாதம் எனக்கும் உண்டு!
  த.ம.2

  ReplyDelete
 7. தந்தைக்கு வாழ்த்துக்கள் தயங்காமல் சொல்லிடுவோம்
  டாடிக்கு மட்டும் வாழ்த்துக்கள் சொல்லோம் !

  தங்கள் தந்தையின் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துக்கள் வாழட்டும் நூறாண்டு

  ReplyDelete
 8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் வணக்கங்களும்! நன்றி!

  ReplyDelete
 9. அவ்வளவும் மில்க் ஸ்வீட்டா!!! ஓகே நான் எடுத்துக்கிட்டேன்:) அப்பாவுக்கு என் வாழ்த்துகள்:)

  ReplyDelete
 10. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா....

  ReplyDelete
 11. அழகான கவிதை. அப்பாவுக்கும் மகளுக்கும் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. அன்பான தந்தைக்கு ஆசைமகள் அன்போடு
  என்றுமருள் வானிறை யே!

  அன்புத் தந்தை நலமோங்க உளம் மகிழ
  வாழ்ந்திட அன்புடன் வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 13. ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 14. மனம் நிறைந்த இனிய பிறந்தநாளுக்கான வாழ்த்து(க்)கள்.

  ஆசி வேண்டி நிற்கும் வரிசையில் துளசியும், கோபாலும்.

  ReplyDelete
 15. ஸ்வீட் சாப்பிட்டேன் இப்போது ஸ்வீட்டாக வாழ்த்திடுவோம்.
  நலமும் வளமும் நன்றே பெறுக
  அருளும் மகிழ்வும் இன்றே பெறுக என்று வாழ்த்துகிறேன் ...! தங்கள் அன்புத் தந்தை நிம்மதியை நிறைவாக பெற்று
  வாழ வாழ்த்துகிறேன்...!

  ReplyDelete
 16. மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. 81 வது பிறந்த நாள் காணும் உங்களின் தந்தைக்கு இர்ண்டாவது பிறந்த நாள் கண்ட 'ஜோக்காளி'யின் வணக்கம்!
  த ம 6

  ReplyDelete
 18. தங்களின் தந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம 8

  ReplyDelete
 19. நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழிவாழ வேண்டுகிறேன். இதற்குமுன் எழுதிய பின்னூட்டம் எங்கே போச்.....! என் வலைப் பூவில் ஒரு பதிவு ‘கற்றது கடுகளவு’ நீங்கள் அவசியம்வருகைதர வேண்டுகிறேன்.ஒரு வித்தியாசமான முயற்சி.

  ReplyDelete
 20. வணக்கம் !
  வாழ்த்துச் சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த
  நன்றிகள் !! வாழ்க வளமுடன் !

  ReplyDelete
 21. தங்களின் தந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னுடைய டாஸ்போர்டில் சில பேரோட பதிவுகள் வரவில்லை. தங்களோடதும் தான்

  இறைவனை பிரார்த்திக்கிறேன் ...

  நன்றி தோழி ..

  ReplyDelete
 22. அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........