10/02/2014

சரஸ்வதி தாயே போற்றி போற்றி ..


அன்னை சரஸ்வதி தாயே போற்றி 
அறிவின் நுதலே  அழகே போற்றி 
பொன்னில் வடித்த சிலையே போற்றி 
பொறுமை காக்கும் கலையே போற்றி 

இன்னமுத மொழியே போற்றி 
இருளைப் போக்கும் ஒளியே போற்றி 
விண்ணவரும் தொழும் தேவி போற்றி 
வெண்டாமரை தாங்கும் மலரே போற்றி

பண்ணில் நிறைந்த பதமே போற்றி
பயிலும் நாவின் அசைவே போற்றி 
கண்ணின் மணியே கருத்தே போற்றி 
கருணைக் கடலே அமுதே போற்றி 

கற்றவரும் தொழும் தேவி போற்றி 
கல்லாதவர்கும் அருள் நீ போற்றி 
உற்ற துணை நீ உணர்வே போற்றி 
உயிராம் மெய்ஞாதின் வழி நீ போற்றி 

வற்றாத கல்விக் கடலே போற்றி 
வறுமையைப் போக்கும் வாழ்வே போற்றி 
சிற்றின்பம் தவிர்க்கும் சிறப்பே போற்றி 
பேரின்பம் அருளும்  பெருமையே போற்றி 

நற் தவம் ஏற்கும் நலனே போற்றி 
நவராத்திரியின் நாயகி  போற்றி 
அற்புத நிலையே அம்மையே போற்றி 
அரும் பெரும் பாக்களின் அழகே போற்றி 

புத்தகத்துள்ளுறை மாதே போற்றி 
பூவின் மணமே புலனே போற்றி 
சித்தம் மகிழும் நினைவே போற்றி 
சிந்தும் இன்னிசை மழையே போற்றி 

வித்தைகள் கற்றிட வந்தருள்வாய் போற்றி
விரும்பும் செல்வம் தந்தருள்வாய் போற்றி 
கற்றதை நாளும் காத்தருள்வாய் போற்றி 
கலைவாணித் தெய்வமே போற்றி போற்றி ......

                                                         

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் அம்பாளடியாளின் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள் ..........
                                                       


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

15 comments:

 1. வணக்கம்
  வாணியை துதி பாடும் கவியை நானும் இரசித்துன் இனிய வராத்திரி தின வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அன்னைக்கு அருமையான பாமாலை!..
  பால சரஸ்வதி அழகு!.. அழகு!..

  இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
 3. போற்றி பாடல் மிக அருமை தோழி.

  சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அருமையான பாமாலை!

  குட்டி சரஸ்வதியும் அம்சமாக இருக்கின்றாள்!
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 5. சரசுவதி போற்றுவோம்
  சரசுவதி திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம 3

  ReplyDelete
 6. கலைமகளை துதிக்கும் போற்றிப்பாடல் சிறப்பு! இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. இன்று சரஸ்வதி பூஜை. கலைமகளைப் போற்றிப் பாடிய தங்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!
  த.ம.4

  ReplyDelete
 8. அன்னை சரஸ்வதி தாயே போற்றி
  இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. அன்னை சரஸ்வதி தாய் எல்லோருக்கும் அருளட்டும்! இன்னும் பல பதிவுகள் வரவேண்டும் நம் வலை பதிவர்கள் எல்லோரிடம் இருந்தும்!

  வாழ்த்துக்கள் சகோதரி! கவிதை கேட்கணுமா! வார்த்தைகள் இல்லை! சரஸ்வதி தங்கள் மனதில் குடியிருக்கின்றாள்!

  ReplyDelete
 10. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. சிறந்த பக்திப் பா வரிகள்
  தொடருங்கள்

  ReplyDelete
 12. வித்தைகள் கற்றிட வந்தருள்வாய் போற்றி
  விரும்பும் செல்வம் தந்தருள்வாய் போற்றி
  கற்றதை நாளும் காத்தருள்வாய் போற்றி
  கலைவாணித் தெய்வமே போற்றி போற்றி ......//
  இன்றைக்கு ஏற்ற பாமாலை. மழலை சரஸ்வதி அழகு.
  விஜயதசமி வாழ்த்துக்கள்.
  வெற்றி திருமகள் என்றும் உங்களுடன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. சரஸ்வதி துதி அருமை தோழி.

  ReplyDelete
 14. இந்த துதியை சுசீலா மேடம் குரலில் இசையுடன் கேட்டால் நன்றாய் இருக்கும் போல் தோன்றுகிறது !
  த ம 7

  ReplyDelete
 15. சாஸ்வதிக்கு அருமையான பாமாலை
  துதித்திட துன்பங்கள் நீங்கும்.
  அருமையான பாமாலை தோழி! கொஞ்சம் பிசியம்மா அதன் உடனும் வரமுடியவில்லை. நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........