9/30/2015

கம்பன் கழகம் வழங்கிய பட்டம் !

                                             
  நன்றியுரை ஏற்று நலம் வாழ வாழ்த்திடுவீர் !

மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவும் என்றன்
....... மனநிலையைச் சொல்லத்தான் வார்த்தை இல்லை !
கண்கண்ட தெய்வத்தால் நானும் இன்று
........களிப்புடனே பெற்றுவந்தேன் உயர்ந்த பட்டம்  !
எண்ணம்போல் வாழ்த்துவீரே நாளும் வந்து
........என்வலையில் கருத்திட்டு மகிழ்வீர் என்றன்
நண்பர்களே! உறவுகளே !  பிரான்சு கம்பன்
.......நற்பணியை வணங்குகின்றேன் மறவேன் வாழ்வில் !

ஆசானுக்கு நன்றி !

மங்காத புகழ்சேர்த்த ஆசான் உன்றன்
........மனம்வாழ வாழ்த்துகின்றேன் வையம் தன்னில் !
பொங்குதமிழ் ஆர்வத்தை ஊட்டும் உன்போல்
.......பொன்போன்ற மனத்தவர்கள் வேண்டும் இங்கே !
தங்கட்டும் மங்களமும் தார்கள் யாவும் !
.......தரணியெல்லாம் உன்புகழைப் பாடும் வண்ணம் !
எங்களுக்கோர் நல்லாசான் நீவீர் இந்த
.......இசைக்கின்றேன் இதயத்தில் நன்றி !நன்றி !

நட்பு உறவுகளுக்கு நன்றி !

வல்லகம்பன் கழகத்தின் தலைவர் எங்கள்
.......வலையுலக நாயகனின் எண்ணம் போல
நல்லகவி நான்படைப்பேன் நாளும் இங்கே
.......நான்வணங்கும் தெய்வத்தின் அருளைப் பெற்று!
இல்லையொரு குறையுமென்று கற்றோர் போற்ற
.......இளையவளின் படைப்போங்கச் செய்வீர் தம்மின்
எல்லையிலா நற்கருத்திற் கீடும்  உண்டோ !
......என்வலையைத் தொடர்கின்ற நட்பே !நன்றி !

மின் வலைக்கு நன்றி !

நன்றியுரை நானுரைக்கும் இந்த வேளை
........நான்மறவேன் எழுதுகின்ற எழுத்தைத் தாங்கும்
மின்வலைகும் நன்றியினைச்  சொல்வேன் இங்கே
.......மீண்டுமிந்த வாய்ப்பளிப்பீர் மின்னல் தீவே !
உன்னைநம்பி உலகத்தோர் வாழு கின்றார்
.......உணர்வுகளைப் பகிர்ந்துவிட்டு உறங்கு கின்றார் !
என்றுமிதைக் காக்கின்றாய் எண்ணம் போல
.......ஏழ்பிறப்பும் தொடர்ந்திருப்பீர் உலகப் பந்தில் !

என்னை  ஈன்ற பெற்றோருக்கு நன்றி !

என்னையிங்கு ஈன்றெடுத்த பெற்றோர் ஏற்பீர்
........இதமான நன்றியினை என்றும் காப்பீர் !
பொன்னைவிட பெரிதாக என்னைப் போற்றிப்
.......பொறுப்புடனே விருப்புடனே வளர்த்தீர் அந்த
நன்மைக்குப் பரிசளித்தேன் நானும் இங்கே
........நலம்வாழ வாழ்த்திடுவீர் என்றும் இந்த
இன்பத்தில் உறைந்திருக்க என்றன் நெஞ்சம்
........இறையாக நான்காணும் என்றன் வாழ்வே !

                                         
தொடரும் ............
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

41 comments:

 1. அம்பாளடியாள்,

  பாராட்டுக்கள் ! இவ்விருதுடன் மேலும் பல விருதுகளையும் பெற்று சிறப்புற வாழ்த்துக்கள் !

  கடைசி படத்தைவிட்டு கண்கள் நகர மறுக்கின்றன :) சந்தோஷமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 2. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 5. மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள் தோழி!
  ஹை! உங்களப் பாத்தாச்சே :) அதுவும் இளமைதியுடன் சேர்த்து..ரொம்ப மகிழ்ச்சி. மேலும் பல பட்டங்கள் உங்களை வந்து சேரட்டும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 6. வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 7. சாந்தரூபி என்னும் அம்பாளடியாளுக்கு மேன்மேலும் பரிசுகள் பெற்று சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !

   Delete
 8. மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இது போன்ற பதிவுகள் வாழ்வில் நம்மை மென்மேல் வளர உதவும். எனது முதல் தளத்தில் பௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண அழைக்கிறேன்.
  http://www.ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !

   Delete
 9. பாராட்டுக்கள் அம்பாள் மேன் மேலும் பல விருதுகள் கிடைக்க என் வாழ்த்துக்கள் ...!
  . கடைசிப்படம் சொ cute ஆக இருக்கிறது இருவரையும் ஒன்றாக காண ரோமப்ப மகிழ்வாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

   Delete
 10. எங்கள் ஆசான் எமக்களித்த
   இந்தப் பெருமை என்றென்றும்
  பொங்கும் கடலின் அலைகளென
   பொலிந்து மனத்தில் இருந்திடுமே!
  திங்கள் போலே குணம்பொருந்தித்
   தேசம் முழுதும் ஆட்சிசெய்யும்
  உங்கள் அன்பும் நான்பெற்றேன்
   உள்ளம் மகிழ்ந்தே வாழ்த்துகிறேன்!

  அன்புச் சகோதரி! அந்த இனிய தருணங்களின்
  நிகழ்வுகள் என் மனத்திலும் கண்களிலும்
  காட்சிகளாய் விரிந்தபடியே இருக்கக் கனவினிலே
  நடப்பது போலவே இன்னும் நான் நடக்கின்றேன்...

  அருமையான நன்றிப்பா படங்களுடன் பதிவும் சிறப்பு!
  என்றென்றும் என் அன்பும் வாழ்த்தும் உங்களுக்கு உண்டு சகோதரி!
  வாழ்க நலம்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

   Delete
 11. என் அருமைத் தோழியர் அழகான படங்களுடன் பட்டம் வாங்கிய பகிர்வுகள் கண்டு அகமகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் தோழி.
  ஐயாவிற்கு எனது வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

   Delete
 12. மேன்மேலும் விருதுகள் பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அம்பாளடியாள்...!!!
  அவ்வினிய மறக்கமுடியா தருணங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள். இரு பாவலர்களும் சேர்ந்திக்கும் படம் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

   Delete
 13. வாழ்த்துக்களம்மா,,,,
  இன்னும் பல விருதுகள் பெற,,,,,,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

   Delete
 14. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

   Delete
 15. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .... பார்த்துட்டேன்ன்ன்.. பார்த்துட்டேன்ன்ன்ன்... இளமதியோடு கைகோர்த்திருப்பது அழகூஊஊஊ...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

   Delete
 16. அன்புடையீர், வணக்கம்.

  பிரான்ஸ் நாட்டுக்குப் பயணம் செய்து, கம்பன் கழகத்தாரால் அளிக்கப்பட்ட ‘பாவலர் விருது’ ஒன்றினை நேரில் பெற்று வந்துள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  இந்தப்பதிவின் மூலம் தங்களின் இயற்பெயர் ’திருமதி. சாந்த ரூபி’ என்பதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அழகான பெயர். :)

  இந்தப் பதிவினில் காட்டியுள்ள மிகச்சிறந்த தெளிவான படங்களின் மூலம் தங்களையும் தங்களின் தோழி மற்றொருவரையும் நேரில் சந்தித்தது போன்று மேலும் எனக்கு மன மகிழ்ச்சி ஏற்பட்டது.

  குறிப்பாக ’தொடரும்’ என்ற வார்த்தைக்கு மேல் நிறைவாக இறுதியில் காட்டப்பட்டுள்ள படம் மிகத்தெளிவாக அமைந்துள்ளது. இதன் மூலம் எனக்கே தாங்கள் மேங்கோ ஜூஸ் அளித்து மகிழ்வித்துள்ளீர்கள். :)))))

  எழுத்துலகில் மேலும் மேலும் பல வெற்றிகள் பெற்று ஜொலிக்க வேண்டுமாய், விருது பெற்ற அனைவரையும் அகம் மகிழ்ந்து ஆசீர்வதிக்கிறேன்.

  என்றும் அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !தங்களின் இனிய கருத்தே சுவை நிறைந்த மங்கோ ஜூஸ் ஆகும் :))

   Delete
 17. வணக்கம் சகோ !

  அன்புக் கரங்கள் குவித்திங்கே
  .......அளிக்கும் நன்றி படித்திங்கே
  பொன்பூச் சொரியும் சோலைக்குள்
  ........புகுந்தார்ப் போலே மகிழ்கின்றேன்
  முன்பின் அறியா முகங்களையும்
  ........முத்தமி ழாலே இணைத்தவரை
  என்பின் இருப்பு மண்மீதில்
  ........இருக்கும் வரைக்கும் நேசிப்பேன் !


  இத்தனை அழகாய்ப் பாக்கள்
  .......எடுத்துநீ கோர்க்கும் போதில்
  எத்தனை முறைதான் கண்ணில்
  ......இறங்கிடும் துளிகள் கண்டாய்
  அத்தனை சுகமும் ஆழ்ந்த
  .......அறிவினை உண்ட தாலே
  அத்தனாம் ஐயா உன்னை
  ........அறிஞனாய் ஆக்கி விட்டார் !

  வாழ்த்துக்கள் சகோ மென்மேலும் பட்டங்களும் பரிசுகளும் பெற்று வாழ்வின் உயர்நிலை அடைய நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா !

   Delete
 18. பாவலருக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !

   Delete
 19. அன்பின் இனிய மகளே முதற்கண் என் வாழ்த்துகள்!உங்கள் நாடு வந்தும் அன்று காணமுடியவில்லை! இன்று படவாயிலாகக் உங்களையும் மகள் இளைய திலாவையும் கண்டேன்! வாழ்க நீவீர்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !

   Delete
 20. பாவலர்.சாந்த ரூபி என்ற அம்பாள் அடிகள் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா !

   Delete
 21. வாழ்த்துகள்! வாழ்த்டுகள்! தங்களைக் கண்டுவிட்டோம்...மட்டுமல்ல தங்களுடன் இருப்பவர் நம் சகோதரி இளமதி என்பதையும் இன்றுதான் தெரிந்துகொண்டோம். சகோ இளமதியையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. அவரையும் இந்த நிழற் படத்தில் பார்த்துவிட்டோம்..ஆஹா..

  தங்களுக்கும் சகோ இளமதிக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! மேன் மேலும் பல விருதுகள் பெற்று பல கவிகள் புனைந்து உலகப் புகழ் அடைந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி பிரார்த்திக்கின்றோம் ...!!!

  ReplyDelete

 22. சிறந்த கவிதை நன்றி க்கு நன்றி வாழ்க பல்லாண்டு

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........