1/09/2012

இதுதான் வாழ்க்கை!........

காலப் பெரு வெளியில் 
கலைந்து போன தன் கனவைத் 
தேடி அலைந்த சிறு பறவை 
தீட்டிய புதிய கவிதை !...........


நாளை எது நடக்கும் ......
நாளும் கோளும் என்ன செய்யும் 
வாழும் போதே அறியாத இந்த 
வாழ்க்கை என்பது போர்க்களமே!....


ஏழை மனதில் மிகு ஆசைகளை 
ஏற்றுக் கொண்டால் துயர் பெருகும் 
பின் பாழாய்ப் போன உடல் தவிக்கும் 
பந்த பாசம் இழக்கும் நிலை வந்தால்...


காலம் சுருங்க வரம் கேட்கும் 
கண்ணில் கங்கை பொங்கி வழியும் 
தினம் காணும் உலகம் வெறிச்சோடி 
கானகம்போல காட்சி  தரும் .................


மானம் பெரிதென நினைக்கும் மனம் 
மனதில் அகப்போர் நிகழ்த்தி வரும் 
உடல் வீழும் போதே உண்மை வெளிக்கும் 
இந்த விதியை வென்றால் வாழ்க்கை இனிக்கும்!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

14 comments:

  1. இதுதான் வாழ்க்கை..வாசித்தேன்.வாக்கிட்டேன்..வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. நாளை எது நடக்கும் ......
    நாளும் கோளும் என்ன செய்யும்
    வாழும் போதே அறியாத இந்த
    வாழ்க்கை என்பது போர்க்களமே


    அழ்கான வார்த்தைகள்.

    ReplyDelete
  3. அசதரனாமாய்
    அழகிய வரிகளில்
    ஆழமாய் சொட்டீங்க சகோ

    இந்த தருணங்களை வாழ்கையில் உணர்ந்தவர்களில்
    நானும் ஒருவன்

    உங்கள் வரிகளில்
    மனம் லேசாய் ஆறுதல் அடைகிறது
    கவிதந்த சகோவுக்கு நன்றிகள்

    ReplyDelete
  4. நாளும் கோளும் என் செய்யும்?

    நல்ல கேள்வி!

    இராமாநுசம்

    ReplyDelete
  5. நாளும் கோளும் என் செய்யும்?

    நல்ல கேள்வி!

    இராமாநுசம்

    ReplyDelete
  6. /////காலம் சுருங்க வரம் கேட்கும்
    கண்ணில் கங்கை பொங்கி வழியும்
    தினம் காணும் உலகம் வெறிச்சோடி
    கானகம்போல காட்சி தரும்/////

    அசத்தலான வரிகள் சகோதரி.
    வாழ்வின் நித்தமும் நடக்கும் யதார்த்தத்தை
    உரக்கச் சொல்லும் வரிகள்.

    ReplyDelete
  7. மேலே நண்பர் மகேந்திரன் குறிப்பிட்டிருக்கும் வரிகள்தான் நான் ரசித்து வியந்தவையும். அழகான ஆழமான வார்த்தைகள். அருமை.

    ReplyDelete
  8. காலப் பெரு வெளியில்
    கலைந்து போன தன் கனவைத்
    தேடி அலைந்த சிறு பறவை
    தீட்டிய புதிய கவிதை !...........//

    சிறு பறவை தீட்டிய புதிய கவிதை அருமை.
    வெள்ளிக் கிழமை வலைச்சரத்தில் மனநிறைவு பகுதியில் (8ம் தேதி) ’வாழ்த்து சொல்லாம் வாருங்கள்’
    என்ற குழந்தைகள் தினத்திற்கு நீங்கள் எழுதிய தொடர் பதிவை பகிர்ந்து கொண்டேன் தோழி.
    உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  9. ஏழை மனதில் மிகு ஆசைகளை
    ஏற்றுக் கொண்டால் துயர் பெருகும்
    பின் பாழாய்ப் போன உடல் தவிக்கும்
    பந்த பாசம் இழக்கும் நிலை வந்தால்...

    சக மனிதர்களின் முகங்களை வெளிச்சமிட்டு காட்டுகிறது உங்கள் வரிகள்

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

    யதார்த்தத்தை
    சொல்லும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. //உடல் வீழும் போதே உண்மை வெளிக்கும்
    இந்த விதியை வென்றால் வாழ்க்கை இனிக்கும்!...//
    உண்மைதான் சகோ.

    ReplyDelete
  12. நாள் என் செய்யும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என்செயும்?---வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........