6/13/2012

உன்போல் ஏது ஒரு சொந்தம்!...


               
உன்னை என்ன சொல்லி நான் பாராட்ட 
என் உள்ளமதில் வைத்துத் தாலாட்டத் 
தோழி எந்தன் தோள்களிலே சாய வா...
விழி நீரிறைத்து நீர்க்குடமாய் நான் மாறவா....

ஒரு அன்னை இல்லை என்றேதான் 
தினம் ஆர்பரித்து நின்றேன் நான் 
இன்று உன்னைக் கண்ட பின்னாலேதான் 
என் உள்ளம் பொங்குதே தன்னாலே..........!!!!


கோழை என்னும் நிலை மாறுதடி உன்னாலே 
ஒரு கோடு போட்டுக் காட்டினாயே கண் முன்னாலே
 ஏழை எந்தன் நெஞ்சுக்குள்ளே ஓர் ஆனந்தம் 
இந்த இன்ப சுகம் என்றும் தங்க நீ வேண்டும்

வா வா அன்பே என் வாசல் தேடி -நீ 
வரும் காலம் எல்லாம் பொன்னாகும் 
நீதிக்கு நீயே என்றும் காவலடி நீரில் பூக்கா 
செந்தாமரையும் நீதாநெடி என் தோழி!..

பள்ளிக் காலம் தொட்டு வந்த இந்தப் பாசம் 
ஒரு எல்லை இன்றி என்னாளுமே வீசும் 
கல்லில் முள்ளில் சென்றால் போதும் என் பாதம் 
உன் கண்களிலே இரத்த வெள்ளம் தோன்றும்...!!!

இந்த அன்பிற்கு இணை ஏதும் இல்லை என் தோழி 
உந்தன் ஐந்து விரல் பட்டால் போதும் இந்நாளில். 
அஞ்சும் நெஞ்சில் வந்த பஞ்சம் நீங்கும்  
உந்தன் கொஞ்சும் மொழி நெஞ்சில் நின்றாடும்!.....  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3 comments:

 1. தோள் தர ஒரு தோழமை
  கிடைத்துவிட்டால்
  தொல்லை தரும்
  துன்பங்கள் எல்லாம்
  தொலைதூரம் போய்விடுமே...

  நல்ல கவிதை சகோதரி..

  ReplyDelete
 2. உந்தன் ஐந்து விரல் பட்டால் போதும் இந்நாளில்.
  அஞ்சும் நெஞ்சில் வந்த பஞ்சம் நீங்கும்
  உந்தன் கொஞ்சும் மொழி நெஞ்சில் நின்றாடும்!.

  அழகாய் மலர்ந்த நட்புப்பூ ....

  ReplyDelete
 3. ஒரு அன்னை இல்லை என்றேதான்
  தினம் ஆர்பரித்து நின்றேன் நான்
  இன்று உன்னைக் கண்ட பின்னாலேதான்
  என் உள்ளம் பொங்குதே தன்னாலே..........!!!!//

  பொங்கும் இன்பம் என்றும் நிலைக்கட்டும்.
  வாழ்த்துக்கள்.

  கவிதை அருமை.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........