6/25/2012

இது நடக்கிற கதையா!...........துலைந்தது சனியன் என்றே நாமும்
தூக்கியே எறிந்துவிட்டாலும்
குடைந்துதான் பார்க்கும்
ஒருமுறையேனும் மனக் கதவைக்
கொலை வெறி கொண்ட ஆசை!!......

நிரந்தரமாய் விட்டகன்றால்
நீ மிதப்பாய் தெப்பம் போலே
அகன்ற சனி தொடர்ந்து வந்தால் 
அதுபோல துன்பம் இல்லை.......

பிறந்தவுடன் தொற்றிய தோசம்
இது பிரியாமல் உடன் இருக்க
வருந்தும் உடல் காலம் முழுதும்
எது சொன்னாலும் கேட்காது என்றும்

தனக்கடிமை ஆக்கி எம்மைத் தினம் 
நினைத்தபடி ஆட்டிவிக்கும்
ஆசை ஒன்றே பேரெதிரியடா 
இதை அழித்துவிட்டால் பின்
வாழ்வில் ஏது துன்பம்!!!.............தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

15 comments:

 1. // தனக்கடிமை ஆக்கி எம்மைத் தினம்
  நினைத்தபடி ஆட்டிவிக்கும்
  ஆசை ஒன்றே பேரெதிரியடா
  இதை அழித்துவிட்டால் பின்
  வாழ்வில் ஏது துன்பம்!!!............//

  ஆசையின் பல் வேறு கோணங்களை கவிதையின் ஓசையாக வடித்துள்ளீர் அருமை

  சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா தங்கள் வரவுக்கும்
   வாழ்த்துக்கும் .

   Delete
 2. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்மா வரவுக்கும் வாழ்த்துக்கும்.....

   Delete
 3. உண்மை
  கவிதை அருமை சகோ

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ வரவுக்கும் பாராட்டுக்கும் .

   Delete
 4. குடைந்துதான் பார்க்கும்
  ஒருமுறையேனும் மனக் கதவைக்
  கொலை வெறி கொண்ட ஆசை!!......

  ReplyDelete
 5. ஆசை அழிய தீராத ஆசை .................என்ன செய்ய ........அருமையான வார்த்தை கோர்வை

  ReplyDelete
 6. மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் ,
  என் ஆக்கங்களைப் பின்தொடர்தலுக்கும்!....

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........