6/25/2014

சுவாசிக்கும் நேரத்திலும் இதைத் தான் மனம் யாசிக்கிறதுகாத்திருப்பின் அவசியங்கள்
கலைந்து போனது!
கால தேவன் கைகளிலே மனம்
உறைந்து போனது!

நேற்றுவரை உன் நினைப்பு
நெஞ்சில் இருந்தது!
இன்று முதல் என் நினைப்பும்
மறந்து போனது!

ஊற்றெடுத்த ஞானமிதால்
உயிர் பிழைத்தது!
உண்மை எது பொய் எதுவென
உணர்ந்து கொண்டது!

வாட்டும் துயர்
வழி தவறி எங்கோ போனது!
வந்த சொந்தம் பொய் அதனால்
வருத்தம் தணிந்தது!

கவிதை ஒன்றே
காதலுக்குப் பொருத்தம் என்றது!
கண்ணீர் சிந்தும் நிலை மறந்து
கனவு பெருத்தது!

நிலவு கூட எனக்கு இதனால்
சொந்தமானது!
நித்தம் மகிழ்வு வந்து வந்து
சித்தம் குளிர்ந்தது!

கவலை ஏது! கண்ணீர் ஏது!
கவிதை இருக்க
காலம் போகும் போகும்
இன்ப ஜாலம் துரத்த!.
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

20 comments:

 1. வணக்கம்
  அம்மா
  செஞ்சை அள்ளிச்சென்றது கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வணக்கம்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. //நிலவு கூட எனக்கு இதனால் சொந்தமானது// கவிதையால் அனைத்தும் சொந்தம்..அருமை கவிதை சகோதரி.
  த.ம.3

  ReplyDelete
 4. ஊற்றெடுத்த ஞானமிதால்
  உயிர் பிழைத்தது
  உண்மை எது பொய் எதென
  உணர்ந்து கொண்டது
  >>
  கொடுத்து வைத்தவர்க்கா நீங்க! உண்மை எது? பொய் எதுன்னு புரிஞ்சுக்கிட்டீங்க. அது தெரியாம நான் குழம்பிக்கிட்டு இருக்கேன் இன்னும்...,

  ReplyDelete
 5. கவிதை ஒன்றே காதலுக்கு பொருத்தம் //
  உண்மைதான்.

  http://mathysblog.blogspot.com/2014/06/blog-post.html
  வணக்கம் அம்பாளடியாள் உங்கள் அழைப்பை ஏற்று கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறேன் பாருங்கள். அழைப்புக்கு நன்றி.

  ReplyDelete
 6. விரக்தியில் விளைந்த ஞானம் குறித்துச்
  சொல்லிப்போன விதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. படமும் அதிலுள்ள வரிகளும் மிகவும் அருமை....

  ReplyDelete
 8. //கவிதை ஒன்றே
  காதலுக்குப் பொருத்தம் என்றது
  கண்ணீர் சிந்தும் நிலை மறந்து
  கனவு பெருத்தது............!!

  //

  அருமை

  ReplyDelete
 9. விட்டு பிரியாத சொந்தங்கள் இவைதான் வேண்டும் வாழ்க்கையில் !
  த ம 8

  ReplyDelete
 10. அருமை அம்மா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. சிந்திக்க வைக்கும் சிறந்த பாவரிகள்

  ReplyDelete
 12. வாட்டும் துயர்
  வழி தவறி எங்கோ போனது
  வந்த சொந்தம் பொய் அதனால்
  வருத்தம் தணிந்தது ...

  சபாஷ் அம்பாள்.

  நிலவு கூட எனக்கு இதனால் சொந்தமானது
  நித்தம் மகிழ்வு வந்து வந்து சித்தம் குளிர்ந்தது
  கவலை ஏது கண்ணீர் ஏது கவிதை இருக்க?...
  காலம் போகும் போகும் இன்ப ஜாலம் துரத்த.......
  அதானே!
  கவிதை மகள் கைகளிலே
  காணும் இன்பம் எந்நாளும் ! அழகு ஒவ்வொரும் வரியும் அர்த்தமும் அழகும் நிறைந்தவை அம்பா மிக்க மகிழ்ச்சி ! வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 13. அருமை அருமை.. கவிதையை வாழ்க்கைக்கு துணைக்கு அழைத்த விதம்...

  ReplyDelete
 14. எப்படி உன்னுள்
  இத்தனை மெட்டு!
  எங்கு வைத்திருந்தாய்
  அத்தனையும் இட்டு!...

  இனிமையான பாடல் தோழி!
  பாட்டின் சந்தம் எம்மைப் பாட வைக்கிறதே!

  மிக அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. அருமை சகோதரியாரே
  அருமை

  ReplyDelete
 17. வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........