7/19/2014

மருவத்தூர் அம்மாவே போற்றி போற்றி !


தவியாய்த்  தவிக்கும் இதயத்தின்
        தாகம்  தீர்த்திட வந்தவளே
புவிமேல் உனதருள் இல்லையெனில்
        பூவும் பிஞ்சும் தோன்றிடுமா !!
கவியாய்ப் பொழிவேன் எந்நாளும்
      காவல் தெய்வம் நின் புகளை
செவிதான் மகிழ வாழ்வனைத்தும்
       செம்      பட்டுடுத்திய அம்மாவே !

மருவத் தூராள் எனக் கேட்டால்
   மலரும்   சிரிக்கும் தன்னாலே !
புருவம்     வியந்து  பார்த்திடவே 
   பூமிப்   பந்தாய்த் தெரிபவளே
உருவம் உனது உருவமொன்றே
   உள்ளக் கதவைத் தட்டுதடி
வருவோர் போவோர் அனைவருக்கும் -நல்
   வாழ்வு  அளிக்கும் அம்மாவே ..!!

கொஞ்சும் மழலைக் குரல் கேட்டு
          கூட  வருவாய் என் தாயே
நெஞ்சம்  இனிக்க நினைவுகளில் -நீ
      நித்தம்  இருந்தால் போதுமடி
அஞ்சும்    மனநிலை மாறிவிடும்
    ஆத்தா உனதருள் கிட்டிவிட்டால்
தொஞ்சும் போக வழியுண்டோ
   தோல்வி   எம்மைத் தழுவிடினும் !

வேப்பிலைக்கு ஈடாக என்றும்
  வினைகள்        தீர்க்கும் பராசக்தி
காப்பெடுக்கும் பக்தருக்கு   நீ 
  கருணை           பொழியும் மகாசக்தி !
பாப்புனைய வந்தேனே என்
  பகுத்தறிவை வளர்த்து விடு
நாப்புரளும்       போ தெல்லாம்
     நல்ல        துணை யாபவளே !!
 
படம் :இணையத்தில் பெற்றுக்கொண்டது .நன்றி    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

14 comments:

  1. வணக்கம்
    அம்மா
    பக்கதி.ரசம் பொங்கும் பா கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்குநன்றி
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மருவத்தூர் ஐயாவின் பக்தியை விட மருத்துவர் ஐயாவின் சமூக தொண்டுதான் என்னை கவர்ந்தது.

    ReplyDelete
  3. அஞ்சும் மனநிலை மாறிவிடும்
    ஆத்தா உனதருள் கிட்டிவிட்டால்//

    அம்மாவின் அருள் இருந்தால் பயம் இல்லை.
    மருவத்தூர் அம்மா போற்றி போற்றி!
    மருவத்தூர் அம்மன் போற்றி அகவல் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அஞ்சும் மனநிலை மாறிவிடும்
    ஆத்தா உனதருள் கிட்டிவிட்டால்
    தொஞ்சும் போக வழியுண்டோ
    தோல்வி எம்மைத் தழுவிடினும் !
    அருமையான பக்தி பாடல் வழமை போல கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள் தோழி....! கொஞ்சம் busy யா .... அது தான் வலைபக்கம் வர முடியிறதில்லை.

    ReplyDelete
  5. சிறப்பான வரிகள் அம்மா...

    ReplyDelete
  6. மருவத்தூராள் புகழ் பாடும் கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  7. வணக்கம்!

    மருவத்துார் தாயின் மலரடி போற்றி
    விருத்தத்தில் வைத்தீா் விருந்து

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  8. உலகமே சக்தியில்தானே இயங்குகின்றது! அந்தச் சக்தியை கவிதைவடிவாய் வடித்திட்டீர் அருமையான வரிகளால் அழகுப்படுத்தி!!

    ReplyDelete
  9. மருவத்தூர் தாயின் மகிமைகளை போற்றும் கவிதை அருமை.

    "//வேப்பிலைக்கு ஈடாக என்றும்
    வினைகள் தீர்க்கும் பராசக்தி//"

    இந்த வரிகளை படிக்கும்போது, நான் முதன்முதலில் மருவத்தூர் கோவிலில் வேப்பிலை சாப்பிட்டது ஞாபகத்துக்கு வந்தது சகோதரி.

    ReplyDelete
  10. பராசக்தி தாயே போற்றி.

    ReplyDelete
  11. மேல்மருவத்தூர் அம்மா பற்றிய அருமையான க்விதை! சகோதரி! சக்திதானே இந்த உலகமே சகோதரி!

    இதற்கான பின்னூட்டம் அன்றே போட்டும் வராமல் போய்விட்டது சகொதரி!

    ReplyDelete
  12. வாருங்கள் வலலைச்சரப்பக்கம். தோழி .
    http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_22.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழியே காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது இன்று தான் வீடு திரும்பினேன் விரைவில் வருவேன் .அன்பு உறவுகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .

      Delete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........